கோகுலாஷ்டமி 30/8/2021 – கிருஷ்ணரைப் பற்றி அறியாத சில தகவல்களை நீங்களும் தெரிஞ்சுக்க வேண்டாமா?

sree-krishnar
- Advertisement -

ஸ்ரீ கிருஷ்ணர் உலகத்தில் மகா விஷ்ணுவின் அவதாரமாக மக்களின் நலன் கருதி அவதரித்தார். அவர் 9-வது அவதாரமாக விளங்குபவர் ஆவார். கிருஷ்ண ஜெயந்தி வட இந்திய மற்றும் தென்னிந்திய மக்களால் பெருமளவு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் ஒரு திருவிழாவாக இந்துக்களுக்கு உண்டு. இதில் கிருஷ்ணர் அருள் பெற நாம் அவருடைய படத்தை வைத்து, வீட்டில் அவருடைய திருப்பாதங்களை வரைந்து கிருஷ்ணரை அழைத்து, அவருக்கு பிடித்த நைவேத்தியங்கள் படைத்து வழிபடுவது வழக்கம். இவ்வகையில் கிருஷ்ணரைப் பற்றிய தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

sri-krishna1

1. ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த நாளன்று உறியடி விழா மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அந்நாளில் உறியடித்து மக்கள் ஆரவாரமாக கிருஷ்ணரை வரவேற்பது உண்டு.

- Advertisement -

2. ஆன்மீக நூல்களில் பகவத் கீதை மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. மனிதன் எப்படி வாழ வேண்டும்? என்பதை வலியுறுத்தும் இந்த பகவத் கீதை ஒரு புனித நூல் ஆகும். அதில் இருக்கும் கருத்துக்களை பின்பற்றி ஒரு மனிதன் வாழ்ந்தாலே அவன் எல்லா வகையான வளங்களையும் பெறலாம். இத்தகு சிறப்பு வாய்ந்த பகவத்கீதை கிருஷ்ணர் நமக்கு அளித்துள்ளது பெரும் பாக்கியமாகும்.

sri-krishna

3. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கௌடியா மடத்தில் கோலாகலமாக கொண்டாடப்படும்.

- Advertisement -

4. கிருஷ்ணரை நாம் கண்ணன் என்றும், வட இந்திய மக்கள் கண்ணையா என்றும் அழைத்து பெருமைப்படுத்துகின்றனர்.

baby-krishna

5. கோகுலத்தில் வாழ்ந்த கோகுல கிருஷ்ணன் பிறந்த கோகுலாஷ்டமியில் வெண்ணையை வைத்து கிருஷ்ணனை அழைத்தால் ஓடோடி வந்து நமக்கு வேண்டிய வரங்களை தந்தருள்வார்.

- Advertisement -

6. கிருஷ்ண ஜெயந்திக்கு கிருஷ்ணருக்கு பிடித்த அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, சீடை, அவல் லட்டு, வெண்ணை, பால் திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை நைவேத்தியமாக வழிபடுவது சிறப்பாகும்.

Krishna-mantra-in-tamil

7. குழந்தை கிருஷ்ணரின் பாதச்சுவடுகளை உங்களின் வலது கை உள்ளங்கையை மடித்து பக்கவாட்டு பகுதியை நாமத்தில் நனைத்து கீழே வைத்து பதித்து அழகாக விரல்களை இட்டுக் கொள்ளலாம்.

8. நம் வீட்டின் வாசற்படியில் இருந்து ஆரம்பித்து பூஜை அறை வரை இந்த பாதசுவடு செல்ல வேண்டும். இந்த பாத சுவடுகளின் வழியாக ஸ்ரீ கிருஷ்ணரே நம் வீட்டிற்கு வருவதாக பக்தர்களுடைய நம்பிக்கை இருந்து வருகிறது.

krishna arjuna-compressed

9. ஸ்ரீ கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் அவரை இரவு நேரங்களில் வழிபடுவது மிகுந்த நன்மைகளை கொடுக்கும். அவருடைய மூன்று வயது வரை கோகுலத்தில் வசித்து வந்தார். பின்னர் பிருந்தாவனம், கோபியர்களுடன், மதுரா என்று வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தார். தன்னுடைய ஏழாம் வயதில் கம்சனை வதம் செய்தார்.

10. கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ண லீலை, கிருஷ்ண நாமம், கீத கோவிந்தம், ஸ்ரீமன் நாராயணீயம், கிருஷ்ண காணாம்ருதம், பகவத் கீதை போன்ற ஸ்தோத்திரங்களை வாசித்து அவருடைய அருளைப் பரிபூரணமாகப் பெற்று கொள்ள வேண்டும். பகவத் கீதையில் அவதார கட்டம் பாராயணம் செய்ய புண்ணியம் அதிகரிக்கும். மேலும் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்கிற இந்த மந்திரத்தை ஜபித்தால் வேண்டியது நடக்கும்.

Krishnar

11. கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் உங்கள் வீட்டில் சிறுவர்-சிறுமிகளை ராதா, கிருஷ்ணன் போல வேடமிட்டு அலங்காரம் செய்து கிருஷ்ணரை வழிபட செய்வது குழந்தைகளுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்க செய்யும். மேலும் அவர்கள் அறிவாளிகளாக விளங்குவார்கள். அகந்தை, மூர்க்க குணம் போன்றவை நீங்கி தர்மத்தின் வழியிலும், நிர்வாகத் திறமையுடனும், புத்திக் கூர்மையுடன் திகழ்வார்கள்.

12. கிருஷ்ணரை வழிபட்டு வருபவர்களுக்கு தொழில் வளம் சிறக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு படிப்பறிவு மேலோங்கும். பெயர், புகழ், செல்வம், செல்வாக்கு போன்றவை உயர்ந்து செல்ல ஸ்ரீ கிருஷ்ண வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

krishna

13. மருத்துவ ரீதியான தொழில்களில் இருப்பவர்கள் கிருஷ்ணரை வழிபட்ட பிறகு தங்களுடைய தொழிலில் கவனத்தை செலுத்தினால் மென் மேலும் உயரலாம் என்று அர்த்த சாஸ்திரம் எழுதிய சாணக்கியர் கூறியுள்ளார்.

14. பகைவர்களை வெல்ல ஸ்ரீ கிருஷ்ணருடைய படத்தை நம்முடன் வைத்துக் கொண்டாலே போதும்.

15. சூரியனை ஆகாயத்தில் நிலைக்கச் செய்ததாக புறநானூறும், கிறிஷ்ணரின் பெருமையை சிலப்பதிகாரமும் கூட பெருமைப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கிருஷ்ணரின் மகத்துவம் நிறைந்த தகவல்களை நீங்கள் வாசித்தாலும் அல்லது மற்றவர்கள் வாசிக்க கேட்டாலும் கூட கிருஷ்ணருடைய அருளை கோகுலாஷ்டமியில் பெற்றுக் கொள்ள முடியும்.

- Advertisement -