- Advertisement -

ஸ்ரீ பஞ்சமி வழிபாடு

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் நமக்கு தேவையான செல்வங்களை தருவதற்காகவே அஷ்டலட்சுமிகள் அவதரித்தார்கள் என்று கூறப்படுகிறது. அதில் நமக்கு தனத்தை தரக்கூடிய லட்சுமியை தனலட்சுமி என்று கூறுகிறோம். அந்த தனலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் நிலையான தனத்தைப் பெற்று சிறப்புடன் வாழ்வதற்கும் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி அன்று மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஸ்ரீ பஞ்சமி வழிபாடு

ஒவ்வொரு மாதத்திலும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட நாள் என்பது இருக்கும். அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி அன்று மகாலட்சுமி தாயாரை வீட்டில் தனலட்சுமி ஆக பாவித்து வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வாழ்வில் தனத்திற்கு எந்தவித பஞ்சமும் வராது. தனம் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வழிப்பாட்டு முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி திதி என்பது வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து தான் வரும். அது டிசம்பர் மாதம் ஆறாம் தேதி வருகிறது. அன்றைய தினம் திருவோண நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது என்பது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. அன்றைய நாளில் மகாலட்சுமி தாயாரை தனலட்சுமி ஆக வீட்டிலேயே பூஜை செய்ய வேண்டும். அந்த பூஜை செய்வதற்கு நமக்கு ஆறு தாமரை மலர்கள் வேண்டும். குங்குமப்பூ வேண்டும். அர்ச்சனைக்கு வில்வம் வேண்டும்.

மேலும் இதில் நாம் தனலட்சுமியை படமாக வைத்து பூஜை செய்யாமல் நாணயமாக வைத்து பூஜை செய்ய வேண்டும். இதற்கு 108 தங்க நிறத்தில் இருக்கக்கூடிய 5 ரூபாய் நாணயங்களை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். தங்களுக்கு வசதி இருக்கும் பட்சத்தில் 108 வெள்ளி நாணயங்களையும் உபயோகப்படுத்தலாம். இன்னும் அதிக வசதி இருக்கிறது என்பவர்கள் 100 வெள்ளி நாணயங்களும் 8 தங்க நாணயங்களையும் உபயோகப்படுத்தலாம். இதில் கண்டிப்பான முறையில் ஒரு குண்டு மணியாவது தங்கம் என்பது வைக்க வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் ஒரு மனை வைத்து அதற்கு மேல் சிவப்பு நிற துணியை விரித்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் ஒரு பெரிய தாம்பாள தட்டாக ஒரு தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டு நிறைய பச்சரிசியை பரப்பிக் கொள்ள வேண்டும். அந்த பச்சரிசிக்கும் மேலே ஆறு தாமரை மலர்களையும் மலர்ந்த வண்ணம் வைக்க வேண்டும். நடுவில் ஒரு தாமரையும் அந்த தாமரையை சுற்றி ஐந்து தாமரைகள் இருப்பது போல் வைக்க வேண்டும். நடுவில் இருக்கக்கூடிய தாமரையில் நாம் சேகரித்து வைத்திருந்த நாணயங்களையும் தங்கத்தையும் வைக்க வேண்டும். சுற்றி இருக்கக்கூடிய மற்ற ஐந்து தாமரை மலர்களில் குங்குமப்பூவை வைக்க வேண்டும்.

அடுத்ததாக நெய் தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக பால் பாயாசத்தை வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது வில்வ இலைகளை வைத்து 108 தனலட்சுமி போற்றிகளை கூறி நாணய குவியலாக வீற்றிருக்கும் தனலட்சுமி தாயாரை அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும். அன்றும் முழுவதும் இது அப்படியே இருக்கட்டும். இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் நாணய குவியலை எடுத்து ஒரு சுருக்குப்பைக்குள் போட்டு அதை மற்றொரு சுருக்கு பைக்குள் வைத்து நாம் பணம் வைக்கும் இடத்தில் பத்திரமாக வைத்து விட வேண்டும். எந்த அளவிற்கு பாதுகாப்பாக எத்தனை பைகளுக்குள் நாம் வைக்கிறோமோ அந்த அளவிற்கு நமக்கு பணமானது சேர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதில் இருக்கக்கூடிய குண்டுமணி தங்கத்தை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மற்ற மலர்களில் இருந்த குங்குமப்பூவையும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை தோறும் பசும்பாலில் அந்த குங்கும பூவையும் நாம் எடுத்து வைத்திருந்த தங்கத்தையும் போட்டு ஐந்து நிமிடம் வைத்திருந்து பிறகு தங்கத்தை எடுத்து விட்டு பாலை அருந்த வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தனலட்சுமி அருளும் தனலட்சுமியின் வசியமும் உண்டாகும். அந்த 108 நாணயங்களை திரும்ப எக்காரணம் கொண்டும் எடுக்கக் கூடாது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகாலட்சுமி வழிபாடு செய்யும்பொழுது அந்தப் பையோடு அப்படியே எடுத்து வந்து வைத்து வழிபாடு செய்து விட்டு திரும்பவும் எடுத்துக் கொண்டு போய் வைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:பண வரவை தரும் 5 டிப்ஸ்

இந்த முறையில் நாம் நாணய குவியலை வைத்து தனலட்சுமி தாயாரை வழிபாடு செய்தோம் என்றால் நம் வீட்டில் என்றென்றும் தனத்திற்கு பஞ்சமே இருக்காது. தனலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்