ஸ்டார் ஹோட்டல் சுவையில் இப்படி சுவையான முட்டை மசாலா கிரேவியை ஒரு முறை செய்து பாருங்கள். சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும், இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும்

egg
- Advertisement -

முட்டை என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும். முட்டையில் உடம்பிற்கு தேவையான புரதச் சத்துக்கள் அதிகமாக இருக்கிறது. அதிலும் குழந்தைகளுக்கு இதன் அவசியம் அதிகம் இருக்கிறது. எனவே முட்டை வைத்து செய்து கொடுக்கும் எந்த வகையான உணவு வகைகளையும் அனைவரும் தாராளமாக சாப்பிடலாம். அவ்வாறு ஸ்டார் ஓட்டல்களில் செய்யக் கூடிய முட்டை கிரேவியை அதே சுவையில் வீட்டிலேயே எளிமையாக செய்து விட முடியும். அதிலும் இந்த கிரேவி செய்வதற்கு மிகுந்த குறைந்த அளவிலான நேரம் தான் செலவாகும். இதனை எப்படி சுவையாக செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்:
முட்டை – 5, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 3, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 15 பல், இஞ்சி சிறிய துண்டு – 2, வரமிளகாய் – 3, தேங்காய் – 5 செல்லு, சோம்பு – இரண்டரை ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், கசகசா – ஒரு ஸ்பூன், ஏலக்காய் – 5, கிராம்பு – 4, பட்டை சிறிய துண்டு – 2, எண்ணெய் – 5 ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், முந்திரி – 5, மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், தனியா தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பிரியாணி இலை – 2, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஐந்து முட்டைகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும். பிறகு ஒரு வெங்காயம் மற்றும் 2 தக்காளியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் 5 தேங்காயை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.

பின்னர் அதனுடன் ஒன்றரை ஸ்பூன் சோம்பு, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, கசகசா, ஐந்து முந்திரி மற்றும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி தழை சேர்த்து பேஸ்ட்டு போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

எணெணெய் நன்றாக காய்ந்ததும் அதில் 15 பல் பூண்டை தோலுரித்து சேர்க்கவேண்டும். பிறகு அதனுடன் சின்ன வெங்காயம் சேர்க்க வேண்டும். இவைக் கொஞ்சம் சிவந்து வந்ததும், 2 தக்காளியை நான்காக அரிந்து சேர்க்க வேண்டும். பின்னர் இவற்றுடன் 3 வரமிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பிறகு இந்த மசாலாவை சிறிது நேரம் ஆறவைத்து, மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதே கடாயை அடுப்பில் வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் ஒரு ஸ்பூன் சோம்பு மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் இவற்றுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி, வெங்காய பேஸ்ட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்ட பின்னர், தேங்காய் சேர்த்து அரைத்த விழுதையும் இவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு இறுதியாக வேகவைத்த முட்டைகளை லேசாக கீறி இவற்றில் சேர்த்தால் போதும். சுவையான ஸ்டார் ஹோட்டல் முட்டை கிரேவி தயாராகி விட்டது.

- Advertisement -