பந்துவீச்சு தான் இவ்வளவு வேகம் என்றால், விக்கெட் வீழ்த்துவதிலும் இவ்வளவு வேகமா ? – சாதனை படைத்த தென்னப்பிரிக்க வீரர்

இலங்கை அணி தற்போது தென்னாபிரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்த அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 13ஆம் தேதி துவங்கி நாடடைபெற்று வருகிறது.

Steyn 1

இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடிய தென்னாபிரிக்க அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனை தொடர்ந்து ஆடிய இலங்கை 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்க அணி தரப்பில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் அதிகபட்சமாக 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள டேல் ஸ்டெயின் 437 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் கபில் தேவ் மற்றும் ஹெராத் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 8ஆம் இடம் பிடித்தார். மேலும், ஒரு வேகப்பந்து வீச்சாளர் இவ்வளவு விரைவாக இத்தனை விக்கெட்டுகளை வீழ்த்துவது மெக்ராத்துக்கு பிறகு இவரே.

Dale

இந்த பட்டியலில் உள்ள மற்ற அனைத்து வீரர்களும் 450 விக்கெட்டுகளை வீழ்த்த 130 போட்டிகள் எடுத்து கொண்டுள்ளனர். ஆனால், ஸ்டெயின் மிகவேகமாக இந்த இடத்திற்கு வந்துள்ளார். ஆனால், வயது காரணாமாக இன்னும் ஓரிரு ஆண்டில் அவர் ஓய்வு முடிவினை அறிவிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்கலாமே :

வெற்றியை விமர்சையாக கொண்டாட சர்க்கஸ் காரர் போல தலைகீழாக நடந்து சென்ற பென் ஸ்டோக்ஸ் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்