வெற்றியை விமர்சையாக கொண்டாட சர்க்கஸ் காரர் போல தலைகீழாக நடந்து சென்ற பென் ஸ்டோக்ஸ் – வைரல் வீடியோ

Ben-Stokes

இங்கிலாந்து அணி மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கட் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து முடிந்து உள்ளது. இதில் மேற்கு இந்திய தீவுகள் அணி (2-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது.

WestIndies

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரூட்டின் சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் வெற்றி பெரும் தருவாயில் இங்கிலாந்து அணி வீரரான பென் ஸ்டோக்ஸ் செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றியை கொண்டாட நினைத்த பென் ஸ்டோக்ஸ் சிலிப் பகுதியில் நின்று கொண்டிருந்த போது திடீரென்று தலைகீழாக நடக்க ஆரம்பித்தார். அதை பார்த்த வீரர்கள் அவரை வியந்து பார்த்தனர். இதோ அந்த வைரல் வீடியோ :

பிட்டாக இருக்கும் பென் ஸ்டோக்ஸ் இதுபோன்று செய்வது எளிதான ஒன்று. ஏற்கனவே ஒரு மதுபான விடுதியில் ஒரு நபரை தாக்கி வழக்கினை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

இவர்தான் சிறந்த கிரிக்கெட்டர். இவர் கிரிக்கெட் விளையாடும் போட்டிகளை மைதானத்தில் நான் காசு கொடுத்து கூட பார்க்க தயார் – வாசிம் ஜாபர் பேட்டி

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்