கறுத்துப்போன கல் வைத்த கவரிங் நகைகளை இனி தூக்கிப் போடாதீங்க. இப்படி சுத்தம் செய்தால் 5 நிமிடத்தில் பழைய கல் வைத்த நகை, தங்கம் போல ஜொலி ஜொலிக்கும்.

jwell
- Advertisement -

நிறைய பேர் கல் வைத்த மோதிரம், கல் வைத்த நெக்லஸ், வளையல் என்று கவரிங்கில் வைத்திருப்பார்கள். தங்கத்திலும் சிலபேர் கல் வைத்த நகைகளை வைத்திருப்பார்கள். கவரிங் கல் வைத்த நகையாக இருந்தாலும் சரி, தங்கத்தில் கல் வைத்த நகையாக இருந்தாலும் சரி அதை, வீட்டிலேயே பாலீஷ் போட்டது போல் பளபளப்பாக சுத்தம் செய்வது எப்படி என்பதைப் பற்றிய குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கவரிங் நகைகளுக்கு இந்த டிப்ஸை பயப்படாமல் எல்லோரும் முயற்சி செய்து பார்ப்பீர்கள். ஆனால், தங்க நகைக்கும் இந்த குறிப்பை ட்ரை பண்ண கொஞ்சம் எல்லோருக்கும் பயம் இருக்கும். சிறிய மோதிரம், மூக்குத்தி, சிறிய கம்பல், இவைகளுக்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணிப் பார்த்துட்டு, பிறகு பெரிய நகைகளுக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

இந்த குறிப்புக்கு முதலில் நமக்கு பூந்திக்கொட்டை தேவை. நாட்டு மருந்து கடைகளில் பூந்திக்கொட்டை கிடைக்கும். அதை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து 2 பூந்திக் கொட்டைகளை மட்டும் எடுத்து உடைத்து உள்ளே இருக்கும் கொட்டையை நீக்கிவிட்டு, மேல் தோலை மட்டும் நல்ல தண்ணீரில் போட்டு 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

2 மணி நேரம் உறிய பின்பு இந்த பூந்திக் கொட்டைகளை அப்படியே தண்ணீரோடு அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவேண்டும். நுரை பொங்க பொங்க கொதித்து வரும். அடுப்பை சிம்மில் வைத்து கொதிக்க வைத்து, அதன் பின்பு அடுப்பை அணைத்து விட்டு, தண்ணீரை நன்றாக ஆற வைக்க வேண்டும். ஆறிய பின்பு பூந்திக் கொட்டைகளை கையால் கசக்கினால் நசுங்கி அதனுடைய சாறு அந்த தண்ணீரில் இறங்கும். பூந்திக் கொட்டை திப்பிகளை மட்டும் புழிந்து எடுத்து கீழே போட்டு விடுங்கள்.

இந்த பூந்திக்கொட்டை தண்ணீர் நுரைக்கும். இந்த தண்ணீரோடு கொஞ்சமாக 1/2 ஸ்பூன் அளவு பல் தேய்க்கும் பேஸ்டை போட்டு நன்றாக கரைத்து விடுங்கள். இப்போது இந்த தண்ணீரில் கல் வைத்த நகைகளை போடுங்கள். 2 நிமிடங்கள் இந்த தண்ணீரில் நகை இருந்தால் போதும். அதன் பின்பு சாஃப்டான பல் தேய்க்கும் பிரஷ் வைத்து இந்த தண்ணீரை தொட்டு தொட்டு நகையை தேய்த்து கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இது கல்வைத்த நகை என்பதால் ரொம்ப அழுத்தம் கொடுத்து தேய்க்கக்கூடாது. கல் கொட்டுவதற்கு வாய்ப்பு உள்ளது. இப்படி தேய்க்கும் போது கல்லில் ஒட்டி பிடித்திருக்கும் எண்ணெய் பிசுக்கு அழுக்கு எல்லாமே வெளியே வந்து விடும். அதன் பின்பு நகையை நல்ல தண்ணீரில் கழுவி விட்டு ஒரு காட்டன் துணியை வைத்துத் துடைத்து பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய நகை பளபளப்பாக மாறியிருக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு:
எந்த பிராண்ட் பேஸ்ட் வேண்டும் என்றாலும் இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். வெள்ளைக் கல் பதித்த நகைகளுக்கு மட்டும் இந்த குறிப்பு கிடையாது. வேறு எந்த நிறத்தில் கல் பதித்து இருந்தாலும் சரி அந்த நகைகளை மேல் சொன்ன முறைப்படி சுத்தம் செய்யலாம்.

- Advertisement -