- Advertisement -
Homeஅழகு குறிப்புகள் | Beauty tips in Tamilமுடி உதிர்வை தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெற இந்த பொருட்களை பயன்படுத்தினாலே போதும். முடி உதிர்தல்...

முடி உதிர்வை தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெற இந்த பொருட்களை பயன்படுத்தினாலே போதும். முடி உதிர்தல் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் போய்விடும்.

- Advertisement -

முடி உதிர்தல் என்ற பிரச்சினை இந்த காலத்தில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படுகிறது. அதற்கான முழுமையான காரணம் என்ன என்று யாரும் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. இருப்பினும் நாம் விளம்பரங்களில் காட்டும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்தி இதை தேய்த்தால் முடி உதிர்தல் நின்று விடும். அதை தேய்த்தால் முடி உதிர்தல் நின்றுவிடும் என்று மாற்றி மாற்றி உபயோகப்படுத்துகிறோம். அவ்வாறு உபயோகப்படுத்துவதாலேயே பல பேருக்கு முடி உதிர்தல் என்பது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் முடி உதிர்தலை நிறுத்தி அடர்த்தியாக வளர்வதற்கு ஒரு எளிய தண்ணீரை எப்படி பயன்படுத்துவது என்று தான் பார்க்க போகிறோம்.

இயற்கையான முறையில் நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் எந்தவித பக்க விளைவுகளும் இருக்காது என்பதை உணர்ந்து கொண்டு நம் முகத்திற்கும் சரி, தலைமுடிக்கும் சரி, நாம் சாப்பிடும் உணவாக இருந்தாலும் சரி, அவற்றை இயற்கையான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதையும் தாண்டி மனதை என்றும் அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டாலேயே நாம் என்றும் இளமையாக இருப்போம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு ஆளி விதையை சேர்க்க வேண்டும். பிறகு இரண்டு ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் பாதி வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து அதில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு, வடிகட்டியை பயன்படுத்தி இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பவுலில் எடுத்துக் கொள்ள வேண்டும். தலைக்கு தேய்க்க பயன்படுத்தும் தேங்காய் எண்ணெயில் ஒரு ஸ்பூன் அளவிற்கு இந்த தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த தண்ணீரை நம்முடைய தலையில் நன்றாக வேர்க்கால்களில் படும் அளவிற்கு தேய்த்து மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

குறைந்தபட்சம் ஐந்து நிமிடம் ஆவது மசாஜ் செய்ய வேண்டும். பிறகு 40 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும். 40 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து வரவேண்டும். இதில் இருக்கும் மூன்று பொருட்களுமே முடி உதிர்வை தடுத்து முடியை அடர்த்தியாக வளரச் செய்வதற்கு உதவக்கூடிய பொருட்கள் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இதை நாம் வாரத்திற்கு ஒரு முறையாவது உபயோகித்து வந்தோம் என்றால் நம்முடைய தலைமுடி உதிர்தல் என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். முடி உதிதல் பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் இதை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காண முடியும்

இதையும் படிக்கலாமே: எட்டு வாரங்களில், குட்டி குட்டியா புத்தம் புது முடிகள் வளர்ந்து, எட்டி பார்ப்பதை பார்த்து சந்தோஷப்பட வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

இந்த எளிமையான முறையை பயன்படுத்தி உங்களுடைய முடி உதிர்வை தடுத்து முடியை அடர்த்தியாக வளர வைக்க முடியும்.

சற்று முன்