10 நாள் ஆனாலும் எலுமிச்சைப்பழம் பழுக்காமல், அழுகிப் போகாமல், காய்ந்து விடாமல் அப்படியே இருக்க என்ன செய்யலாம்?

lemon0
- Advertisement -

எலுமிச்சை பழம் என்பது தேவகனி என்று வர்ணிக்கப்படும் ஒரு அற்புத பழமாக இருந்து வருகிறது. இந்த எலுமிச்சை பழத்தை எப்பொழுதும் வீட்டில் வைத்திருப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆன்மீகம், மருத்துவம் என்று அனைத்து வகையிலும் பயன்படும் எலுமிச்சை பழத்தை நிறைய வாங்கி ஸ்டோர் செய்ய நினைப்பவர்கள் அதை எப்படி நீண்ட காலம் பராமரிப்பது? என்பதை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். அதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

lemon

தேவகனி என்று கூறப்படும் எலுமிச்சை பழம் நீங்கள் அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்தால் ஓரிரு நாட்களில் நிறம் மாறி காய்ந்து விடும் அல்லது அழுகி விட வாய்ப்புகள் உண்டு. அதனை வைக்க வேண்டிய முறையில் வைக்கும் போது 15 நாட்களுக்கு மேல் பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும். எலுமிச்சம் கனியை வங்கி வந்ததும் நன்கு காட்டன் துணியால் துடைத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு ஒரு எவர்சில்வர் டப்பாவில் நியூஸ் பேப்பர் விரித்து அதன் மீது எலுமிச்சை கனியை ஒவ்வொன்றாக அடுக்கி வைத்துக் கொள்ளலாம். இதனை அப்படியே பிரிட்ஜில் வைத்தால் 10 நாட்கள் வரை அப்படியே ப்ரஷ்ஷாக இருக்கும். இதுவே நீங்கள் பிளாஸ்டிக் டப்பா பயன்படுத்தினால் அதில் நீண்ட நாட்களுக்கு எலுமிச்சையை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாது, விரைவிலேயே காய்ந்து அல்லது அழுகி போய்விடும்.

எலுமிச்சை பழங்களை ஒவ்வொன்றாக துடைத்த பின் எடுத்து நியூஸ் பேப்பர் அல்லது டிஷ்யூ பேப்பர் கொண்டு தனித்தனியாக பொட்டலம் போல் மடித்து வைத்துக் கொள்ளலாம். எல்லா பொட்டலங்களையும் ஒரு பாலித்தீன் பையில் வைத்து மொத்தமாக ஃபிரிட்ஜில் வைத்தால் போதும்! உங்களுக்கு தேவையான பொழுது ஒவ்வொரு பொட்டலங்களாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இது போல் செய்து வைக்கும் பொழுது 10 லிருந்து 12 நாட்கள் வரை அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

- Advertisement -

elumichai lemon

பொதுவாக எலுமிச்சை கனியை வாங்கும் பொழுது முழு எலுமிச்சை பழமும் மஞ்சளாக இருக்கும் படி பார்த்து வாங்க கூடாது. பச்சை கலந்த மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் எலுமிச்சை பழம் இயற்கையாக கிடைக்கும் எலுமிச்சை பழமாக இருக்கும். புள்ளிகள் எதுவுமில்லாமல் முழு மஞ்சளுடன் இருக்கும் பழம் கல் வைத்து பழுக்க வைக்கப்படும் பழமாக இருப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.

எலுமிச்சை கனியை நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த நினைப்பவர்கள் அதனை இரண்டாக கத்தரித்து அதில் இருக்கும் சாற்றை மட்டும் எடுத்து தனியே ஒரு காற்று புகாத(ஏர் டைட்) கன்டெய்னரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். பழமாக இருப்பதை விட சாறாக இருக்கும் பொழுது நீண்ட நாட்களுக்கு நமக்கு பாதுகாப்பு இருக்கும். இதில் இருக்கும் சிட்ரஸ் எளிதில் கெட்டுப் போக செய்யாது. எனவே ஃப்ரீசர் பாக்ஸில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். தேவையான பொழுது நாம் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமும் ஒரு எலுமிச்சை கனியை பிழிந்து வெது வெதுப்பாக இருக்கும் தண்ணீர் அல்லது சாதாரண பச்சை தண்ணீருடன் சேர்த்து அருந்துங்கள். அது நம் உடலில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக செய்யும். உடலில் இருக்கும் உஷ்ணம் தணிந்து உடல் குளிர்ச்சி பெறும். இதனால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும் எனவே இறைவன் கொடுத்த அருட் கொடை எலுமிச்சம் பழத்தை எப்பொழுதும் வீட்டில் இந்த முறையில் பாதுகாப்பாக வைத்திருப்பது நலம் தரும்.

- Advertisement -