சூன்யம் என்பது உண்மையா – குருமாரின் விளக்கம் (சிறு கதை)

- Advertisement -

“ஷிகோகு” என்பது புகழ்பெற்ற ஒரு ஸ்தலம், அங்குள்ள கோவிலுக்கு ஏராளமான மக்கள் வருவார்கள். பக்தர்கள், ஞானிகள், துறவிகள் என எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். அங்கிருந்த ஒரு ஜென் குருவின் பெயர் “டோகன்”. அவர் எப்போதும் மவுன நிலையிலேயே இருப்பார். பலரும் அவரை வணங்கிச் செல்வர்.

zen story

அப்போது அவ்வூருக்கு “டெஸு” என்ற ஞானி வந்தார். தத்துவ, ஞானங்களில் புலமை பெற்றவர். ஏற்கனவே பல ஊர்களுக்கு சென்று, பல அறிஞர்களை வாதத்தில் வென்றவர். இவர் எங்கு சென்றாலும் அங்குள்ள ஞானிகளையும், குருமார்களையும் பரிகசித்து, அவர்களிடம் விவாதம் புரிவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

- Advertisement -

இவ்வூருக்கு வந்து இங்குள்ள கோவிலை தரிசித்த பின் டோகன் குருவை கண்டார் டெஸு. இவராகவே அவருடன் வாதம் செய்ய ஆரம்பித்தார். டோக்கன் எதுவும் பேசவில்லை. டெஸு பேசுவதை மெளனமாக கேட்டுக்கொண்டிருந்தார். பலவகையான தத்துவங்களை விளக்கி பேசி, இறுதியில் “எல்லாமே மாயை” என்றார்.

“அப்படியா”? என்றார் டோகன்.

- Advertisement -

“ஆம், இவ்வுலகம் பொய், நாம் கண்களால் காண்பது அனைத்தும் மாயை, இறுதியில் எஞ்சி நிற்பது வெறும் சூன்யம்” தான் என்றவர் தொடர்ந்து. “புத்தர், பௌத்தம், மனம் எல்லாம் வெறும் சூன்யம்” தான் என்றார். டோகன் எதுவும் பேசவில்லை, டெஸுவே தொடர்ந்து பேசினார்.

zen story

“அரசன் மற்றும் ஆண்டி என்பது எப்படி சமூக மாயையோ, ஏழ்மை, வளமை எப்படி நிலையற்றதோ ,அறிஞன் ,மூடன் என்பது எப்படி பொய்யோ, அதுபோல் சோம்பல், உழைப்பு, ஞானம், அஞ்ஞானம் என அனைத்துமே பொய், நிலையானது, நிரந்தரமானது “சூன்யம்” மட்டுமே என்றார்”.

- Advertisement -

டெஸு இப்படி பேசி முடித்ததும், குரு டோகன் மூலையில் ஊன்றிவைத்திருந்த தனது ஊன்றுகோலை எடுத்து டெஸுவின் மொட்டைத் தலையில் ஓங்கி அடித்தார். “ஆ”…என்று அலறிய டெஸு, தன் தலையைத் தடவிக் கொண்டே “ஏன் இவ்வாறு செய்தீர்கள்”? என்று டோகனிடம் கோபமாக கேட்டார்.

“என்ன சொல்கிறீர்கள்”..? என்றார் டோகன்.

zen story

“எதற்காக என்னை அடித்தீர்கள்?”உங்களைப் போன்ற ஒருவரிடமிருந்து இத்தகைய செயலை நான் எதிர் பார்க்கவில்லை”. “அடியாவது, வலியாவது. அடி, வலி, கூச்சல், சந்தோஷம் எல்லாமே மாயை. வலி என்பது பொய், கோபம் என்பது மனதின் பிரமை. இவை எல்லாமே சூன்யம் தான், எல்லாம் சூன்யமாக இருக்கும் போது வலி ஏது? கோபமேது?. அந்த வலி எதிலிருந்து தோன்றியது, சூன்யத்திலிருந்து வந்ததா?

“ஆ …. என்று அலறினீர்களே….அந்தக் கூச்சல் பொய் தானே..பொய் என்றால் அந்த பொய் எதிலிருந்து பிறந்தது..?சூனியம் கூச்சலை வெளியிடுமா “. இவற்றைக் கேட்டு அப்படியே திகைத்து நின்றார் ஞானி டெஸு.

இதையும் படிக்கலாமே.
அர்ஜுனனின் அம்புகள் மட்டும் அபூர்வ சக்தி பெற்றதன் காரணம் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல தமிழ் கதைகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

இக்கதையின் மையம்:
“பலவகையான இறந்தகால ஞானங்களை கற்றிருப்பதால், நிதர்சன உண்மையான நிகழ்காலம் பொய்யாகிவிடாது”.

- Advertisement -