தெரு கடைகளில் விற்கும் அதே சுவையில் சற்றும் மாறாமல் இந்த வெஜிடபிள் சாண்ட்விச்சை இவ்வளவு சுலபமாக வீட்டிலேயே செய்ய முடியும் என்று தெரிந்தால் தட்டாமல் நீங்களும் செய்து கொடுப்பீர்கள்

sanwitch
- Advertisement -

அம்மாக்கள் என்னதான் விதவிதமான உணவுகளை சமைத்துக் கொடுத்தாலும் இப்போதுள்ள குழந்தைகள் அதிகமாக விரும்பி கேட்பது பானிபூரி, பீட்சா, பர்கர், சாண்ட்விச் இது போன்ற உணவுகளை தான். ஏனென்றால் இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. இந்த உணவுகள் அனைத்தும் பார்ப்பதற்கே குழந்தைகளை கவரும் வகையில் செய்யப்படுகிறது. எனவே பலரும் வீட்டில் இதனை எப்படி செய்வது என்பது தெரியாமல் யோசித்து கொண்டிருப்பதால் தான் குழந்தைகள் எப்பொழுதும் கடைத் தெருவுக்குச் சென்று இந்த உணவினை வாங்கி சாப்பிடுவதில் அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அங்கு செய்யப்படும் இந்த உணவுகளில் உடலுக்கு தேவையான பல வேதியியல் பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இவற்றை தவிர்ப்பதற்கு இந்த உணவுகளை எப்படி வீட்டிலேயே செய்வது என்பதை தெரிந்து கொண்டால் உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம் எப்பொழுதும் பாதிக்காமல் இருக்கும். வாருங்கள் இந்த வெஜிடபிள் சான்ட்விச்சை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பிரட் – 3, குடைமிளகாய் – 1, வெங்காயம் – 1, சிறிய தக்காளி – 1, ஸ்வீட் கார்ன் – ஒரு ஸ்பூன், நறுக்கிய வெள்ளரிக்காய் – ஒரு ஸ்பூன், மயோனைஸ் – 4 ஸ்பூன், டொமேட்டோ சாஸ் – 2 ஸ்பூன், சீஸ் – 1 பீஸ், புதினா – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, பூண்டு – 2 பல், எலுமிச்சை பழச்சாறு – ஒரு ஸ்பூன், சர்க்கரை – அரை ஸ்பூன், பச்சை மிளகாய் – 1, உப்பு – அரை ஸ்பூன், பட்டர் – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கொத்து புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய், 2 பல் பூண்டு, அரை எலுமிச்சைப் பழத்தின் சாறு, அரை ஸ்பூன் சர்க்கரை மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து, அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அனைத்தையும் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு வெங்காயம், தக்காளி மற்றும் குடை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் நறுக்கிய வெள்ளரிக்காய் மற்றும் ஸ்வீட் கான் இவை அனைத்தையும் சேர்த்து, அதனுடன் மூன்று ஸ்பூன் மயோனைஸ் சேர்த்து நன்றாக கலந்து வைக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு முதலில் ஒரு பிரட் துண்டை எடுத்து அதில் செய்து வைத்துள்ள கிரீன் சட்னி சேர்த்து நன்றாக பரப்பி தடவிக் கொள்ள வேண்டும். பின்னர் அதன்மீது மயோனைஸ் சேர்த்து கலந்து வைத்துள்ள காய்கறி கலவையை பரவலாக வைத்து விட வேண்டும். பிறகு மற்றொரு பிரட் துண்டை எடுத்து அதன் மீது இரண்டு ஸ்பூன் டொமேட்டோ சாஸ் சேர்த்து தடவி விட வேண்டும்.

பின்னர் அதன்மீது ஒரு வெங்காயம், தக்காளி மற்றும் குடைமிளகாயை வட்ட வடிவில் அறிந்து அதனை ஆங்காங்கு வைத்துவிட வேண்டும். பிறகு இதனையும் அந்த மற்றொரு பிரட்டின் மீது வைத்து கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு பிரட் துண்டில் மயோனைஸ் தடவி, அதனை இவற்றின் மேல் வைத்து மூடி, ஒரு தோசைக்கல்லை அடுப்பின் மீது வைத்து, பட்டர் சேர்த்து அதில் இந்த பிரட்டை வைத்து அதன்மீது அரை கப் தண்ணீர் உள்ள கிண்ணத்தை வைத்து விட வேண்டும். பிறகு மறுபுறம் திருப்பி போட்டு அனைத்தும் சிவந்து வெந்ததும் பரிமாறி கொடுத்துப் பாருங்கள். அதன் பிறகு உங்கள் குழந்தைகள் தெரு கடைகளுக்கு செல்வதை நிறுத்தி விடுவார்கள்.

- Advertisement -