ஒரு முறையாவது வீட்டில் ஸ்ட்ரீட் ஸ்டைல் முட்டை தோசை செய்ததுண்டா? செம டேஸ்டாக இப்படி ஒரு முறை முட்டை தோசை செஞ்சு பாருங்க இதையா மிஸ் பன்னோம்ன்னு ஃபீல் பண்ணுவீங்க!

egg-dosa1_tamil
- Advertisement -

ரோட்டோட கடைகளில் கொடுக்கும் முட்டை தோசையின் சுவை ரொம்பவே அட்டகாசமாக இருக்கும். அதிலும் வெண்ணெய் சேர்த்து செய்யப்படும் இந்த தோசை சாப்பிட்டால் வாயில் எச்சில் ஊறிவிடும். அந்த அளவிற்கு சுவை அட்டகாசமாக இருக்கக் கூடிய இந்த தோசையை எப்படி நம்ம வீட்டிலும் செய்வது? ரொம்ப சுலபமாக முட்டை தோசை ஸ்ட்ரீட் ஸ்டைலில் செய்வது எப்படி? என்று இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்வோம் வாங்க.

ஸ்ட்ரீட் ஸ்டைல் முட்டை தோசை செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை – ஒன்று, தோசை மாவு – இரண்டு கரண்டி, நறுக்கிய வெங்காயம் – ஒரு கைப்பிடி, நறுக்கிய கருவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒன்று, கரம் மசாலா – கால் ஸ்பூன், மிளகாய் தூள் – கால் ஸ்பூன், உப்பு – சிட்டிகை அளவு, வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

ஸ்ட்ரீட் ஸ்டைல் முட்டை தோசை செய்முறை விளக்கம்
ரோட்டோர கடைகளில் கொடுக்கும் முட்டை தோசை செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தோசைக்கு இந்த ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்ப நீங்கள் எவ்வளவு தோசை வேண்டுமோ, அந்த அளவிற்கு பொருட்களையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு தோசை கல்லை வையுங்கள். தோசைக்கல் காய்ந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கரண்டி மாவை எடுத்து ஊற்றி மெலிதாக கல் முழுவதும் பரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணையை வையுங்கள். வெண்ணையை வைத்ததும் அதன் மீது பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை போடுங்கள்.

- Advertisement -

பச்சை மிளகாயை போட்டதும், பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அப்படியே வையுங்கள். பின்னர் அதன் மீது நறுக்கிய கருவேப்பிலை மற்றும் மல்லி தழைகளை போடுங்கள். மிளகாய் தூள், கரம் மசாலா ஆகியவற்றை கால் ஸ்பூன் அளவிற்கும் குறைவாக சேருங்கள். இவை அனைத்தையும் ஒன்றாக ஒரே இடத்தில் சேர்த்ததும், பின்னர் தோசை கரண்டியை வைத்து அழுத்தி, பின்னர் எல்லா இடங்களிலும் பரப்ப வேண்டும். மசாலாவை எல்லா இடங்களிலும் பரப்பியதும் ஒரு முட்டையை அப்படியே உடைத்து ஊற்றுங்கள். ஒரு சிட்டிகை அளவுக்கு உப்பை மேற்புறமாக தூவி, எல்லா இடங்களிலும் முட்டையை பரப்பி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
10 ரூபாய்க்கு பாக்கெட் புளியோதரை வாங்குவதை விட வீட்டிலேயே இப்படி செய்து வைத்தால், கோவில் புளியோதரை டேஸ்ட் கூட தோற்றுப் போய்விடுமே!

முட்டையை பரப்பியதும் மேற்புறமாக கொஞ்சம் மல்லியை தூவுங்கள். பின்னர் சுற்றிலும் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு காய விடுங்கள். ஒருபுறம் நன்கு வெந்து வந்ததும், மறுபுறம் திருப்பி போடுங்கள். ரெண்டு புறமும் சிவக்க வெந்து வந்ததும், எடுத்து பரிமாற வேண்டியது தான்! ரொம்பவே சுவையாக இருக்கக்கூடிய இந்த ஸ்ட்ரீட் ஸ்டைல் முட்டை தோசை, நீங்களும் இதே மாதிரி வீட்டில் எளிதாக செஞ்சி பாருங்க, உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். குறிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. இதற்கு தொட்டுக்க கூட எதுவுமே தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்.

- Advertisement -