குறிப்பிட்ட சில பிரச்சனைகள், குறிப்பிட்ட சில தெய்வத்தை வணங்கும் போது தான் சரியாகும். ஆனால் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தால் நமக்கு இருக்கும் எல்லா பிரச்சனைகளும் தீரும். தடைகளை தகர்க்க கூடிய விக்ணங்களை தீர்க்கக்கூடிய அற்புதமான ஒரு விநாயகர் வழிபாட்டை பற்றி தான் இன்று நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு திருமண தடை இருக்கிறதா, திருமண வயதை கடந்தும் திருமணமாகாமல் இருப்பவர்கள், இந்த வழிபாட்டை மேற்கொண்டால் சீக்கிரம் திருமணம் நடக்கும். திருமணம் ஆகி குழந்தை பாக்கியம் இல்லையா, இந்த வழிபாட்டை செய்யுங்கள். சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும். நல்ல வேலை கிடைக்காமல், நல்ல சம்பளம் இல்லாமல் வறுமையில் வாடி கஷ்டப்படுறீங்களா.
இந்த வழிபாட்டை செய்யுங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வருமானம் பெருகும். இது தவிர வேறு ஏதாவது முயற்சிகளில் தடை இருக்கிறதா. வியாபாரம் சரியாக நடக்கவில்லையா. தீராத நோய்நொடி பிரச்சனையா. எதுவாக இருந்தாலும் சரி இந்த வழிபாட்டை செய்தால் நிச்சயம் அந்த பிரச்சனைக்கு உண்டான தீர்வு கிடைத்து விடும். அப்படி ஒரு சக்தி வாய்ந்த விநாயகர் வழிபாடு இது.
கஷ்டம் தீர்க்கும் விநாயகர் வழிபாடு
உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு செல்லுங்கள். ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றவும் அந்த தேங்காய் எண்ணெயில் சின்னதாக வெட்டிவேர் போடவும் ஒரு வெட்டிவேர் துண்டை எடுத்து அதை சுருட்டி அந்த எண்ணெயில் முக்கி விடுங்கள்.
பிறகு பஞ்சு திரி போட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு விநாயகருக்கு 3 தோப்புக்கரணம் போட்டு, விநாயகரை 16 முறை வலம் வர வேண்டும். இந்த வழிபாட்டை தொடர்ந்து 16 வாரம் திங்கட்கிழமைகளில் செய்வது சிறப்பு. அப்படி இல்லை என்றால் 16 வாரம் வரக்கூடிய சங்கடகர சதுர்த்தி அன்று செய்யும் போது, உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறைய தொடங்கிவிடும். சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயை இந்த தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்ற பிள்ளைகளுக்காக தாய் தந்தையினர் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். உங்களுக்கே பிரச்சனை இருந்தால், நீங்களே பிள்ளையார் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை செய்யுங்கள். பெண்களால் மட்டும் தொடர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியாது. இடையில் மாதவிடாய் நாட்கள் வந்தால், அதை தவிர்த்து விட்டு மீண்டும் இந்த வழிபாட்டை தொடங்கலாம். 16 வாரம் சரியாக கணக்கு வைத்துக் கொள்ளுங்கள்.
பிள்ளையாருக்கு மிக மிக உகந்தது தேங்காய் எண்ணெய். ஆகவே வேறு எண்ணெயில் இந்த தீபத்தை ஏற்றலாமா என்ற சந்தேகத்திற்கு இடமே கிடையாது. சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயில் தான் இந்த தீபம் ஏற்ற வேண்டும். கட்டாயம் வெற்றியை கொடுக்கும் வெட்டிவேரை அதில் போடுங்கள். ஒரே ஒரு விளக்கு தான்.
இதையும் படிக்கலாமே: வளமான வாழ்க்கை அமைய வாங்க வேண்டிய பொருள்
இதை பிள்ளையாருக்கு ஏற்றி விட்டால், உங்கள் அனைத்து சங்கடங்களில் இருந்தும் விடுபடலாம். எளிமையான இந்த ஆன்மீகம் சார்ந்த வழிபாடு அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.