வீட்டில் சுப காரியங்கள் நடக்க அடுத்தடுத்து தடையா? கோவிலுக்கு இந்த ஒரு பொருளை வாங்கி தானமாக கொடுங்கள். சுப காரிய தடை விலகும்.

meenatchi-kungumam
- Advertisement -

வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் ஒன்றன்பின் ஒன்றாக சுப காரியங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். சுப காரியங்கள் என்றால் அந்த வரிசையில் வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமண வயது ஆன உடனேயே திருமணம் நடக்க வேண்டும். ஆண் பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்கு திருமண வயது வந்தவுடன் திருமணம் நடக்கவேண்டும். திருமணமானவர்களுக்கு காலாகாலத்தில் குழந்தைப் பேறு கிடைக்க வேண்டும். குழந்தை பேறு கிடைத்து விட்டால் அந்த குழந்தைகளுக்கு முடி இறக்குவது, காது குத்துவது போன்ற சுப காரியங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும். சரிங்க, எங்க வீட்ல திருமணம் வளைகாப்பு காதுகுத்து என்று தொடர்ந்து சுப காரியங்கள் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது என்றாலும்கூட, வீட்டில் பூஜை புனஸ்காரங்கள், கோவிலுக்கு செல்வது, வீட்டில் சிறிய பூஜை செய்வது, பண்டிகை நாட்களை தவறவிடாமல் வழிபாடு செய்வது, என்ற சுப காரியங்கள் தொடர்ந்து நடக்க வேண்டும்.

Hindu Marriage

நிறைய பேர் வீடுகளில் வீட்டில் சுப காரியத்தை தொடங்கினாலும் அதில் ஒரு தடை ஏற்படும். வீட்டில் சாதாரணமாக வெள்ளிக்கிழமை பூஜை செய்தால் கூட வீட்டில் சண்டை வந்துவிடும். அடுத்த வாரம் வீட்டில் குல தெய்வத்தை நினைத்து பூஜை வைக்கலாம் என்று நினைப்பார்கள். ஆனால் அந்த பூஜை செய்வதில் தடை வந்துவிடும். கோவிலில் அபிஷேகத்திற்காக கொடுத்து இருப்பார்கள். ஆனால், அந்த அபிஷேகத்தை செய்யும் முடியாமலோ அல்லது அந்த அபிஷேகத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தடை வந்துவிடும். இப்படி எந்த ஒரு நல்ல காரியத்தைத் தொட்டாலும் அதில் தடை.

- Advertisement -

சில பேர் வீடுகளில் பூஜைக்காக ஒரு பொருளை கூட வாங்கி வைக்க முடியாது. சமையலறைக்கு புதியதாக ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்தால் அதுவும் முடியாது. புத்தாடை எடுப்பதற்கு கூட தடை இருக்கும். அதாவது கையில் காசு பணம் இல்லை அதனால், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முடியவில்லை என்றால் அது வேறு. ‘எல்லாம் இருக்கிறது, ஆனால் எதுவும் நடக்கவில்லை’ எனும் பட்சத்தில் ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத கெட்ட ஆற்றல் நம்மை கைதியாய் வைத்திருக்கின்றது என்பதுதான் அர்த்தம்.

kungumam

வாரம்தோறும் வரக்கூடிய வெள்ளி செவ்வாய் கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும். உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய எந்த அம்மன் கோவிலாக இருந்தாலும் சரி, அந்த அம்மன் கோவிலுக்கு குங்குமத்தை வாங்கி தானம் கொடுப்பதாக வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறினால் உங்கள் வீட்டில் சுப காரிய தடை விலகினால், உங்களால் முடிந்த குங்குமத்தை 1/2 கிலோ, 1 கிலோ எவ்வளவு முடியுமோ, ஆனால் நல்ல தாழம்பூ வாசனை நிறைந்த குங்கும வாங்கி அந்த அம்மன் கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டும். இப்படி செய்தால் வீட்டில் இருக்கும் சுபகாரியத் தடை விலகும். 100 கிராம் குங்குமம் வாங்கி கொடுத்தாலும் அது குங்கும தானம் தான்.

- Advertisement -

அடுத்தபடியாக உங்களால் முடியும் பட்சத்தில், உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு பித்தளையால் செய்யப்பட்ட பொருளை வாங்கி தானமாக கொடுக்கலாம். எடுத்துக்காட்டுக்கு கோவிலில் பயன்படுத்தும் மணி, பஞ்ச பாத்திரம், பித்தளையில் செய்யப்பட்ட சிறிய சொம்பு, போன்ற பொருட்களை கோவிலுக்கு தானமாக வாங்கி கொடுப்பது என்பது சிறப்பு.

poojai pathiram

உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று அங்கு உள்ள அர்ச்சகரிடம் கேளுங்கள். கோவிலுக்கு என்ன தேவை என்பதை. அவர் கோவிலில் இல்லாத பொருட்களை சொல்லும்போது, அந்த பொருட்களில் உங்களால் என்ன பொருளை வாங்கி தர முடியுமோ, அந்த பொருளை வாங்கி தானம் கொடுப்பது மிகவும் சிறப்பானது.

sombu

நம் வீட்டின் அருகில் வருமானம் இல்லாத சிறிய கோவில்களில் தீபம் ஏற்றுவதற்கு கூட எண்ணெய் வாங்க முடியாத சூழ்நிலை இருக்கும். அப்படிப்பட்ட கோவிலுக்கு தீபம் ஏற்றுவதற்கு நல்லெண்ணெய்யை வாங்கி தானம் கொடுப்பதில் கிடைக்கக்கூடிய மனத்திருப்தி வேறு எதிலும் கிடைக்காது. உங்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்தால் நழுவ விடாதீர்கள். உங்களால் முடிந்த தானத்தை கோவிலுக்கு கொடுத்து பலன் பெருங்கள் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -