சந்தோஷமும் சுபிட்சமும் உங்கள் வீடு முழுவதும் நிரம்பி வழிய இந்த பழத்தை உங்களுடைய வீட்டில் வாங்கி வையுங்கள் போதும். கவலைகள் அனைத்தும் காணாமலே போய்விடும்.

pine-apple

வீட்டில் இருப்பவர்கள் மனக் கவலை இல்லாமல் சந்தோஷமாக தங்களுடைய வாழ்நாளை கழித்து வந்தாலே போதும். இல்லறம் இனிமையாக மாறும். சந்தோஷம் வீட்டிற்குள், சந்தோஷமாக நுழைவதற்கு முதலில் வீட்டில் இருப்பவர்கள் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் அடுத்தவர்கள் செய்த நல்ல காரியத்திற்கு, உதவிக்கு பதிலாக அவர்களிடம் இருந்து பிரதி பலனை எதிர் பார்க்கவே கூடாது. நாம் அடுத்தவர்களுக்கு செய்யக்கூடிய நல்லதுக்கு பதிலாக, அவர்கள் நமக்கு நன்மை செய்ய வேண்டும், நன்றி கடனாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போதே பிரச்சனைகள் தொடங்கி விடுகின்றது.

froot

சரி நம்முடைய பதிவிற்கு செல்வோம். ஒரு வீட்டில் நல்ல விசேஷங்கள் அல்லது சுபகாரியங்கள் நடக்கிறது என்றால் அந்த இடத்தில் பழ வகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். சுபகாரியங்களில் சுபத்தை மேலும் அதிகரிக்க, இந்த பழ வகைகள் காலம் காலமாக பயன்படுத்தப்படுகின்றது. சுவாமிக்கு அபிஷேகம் செய்வதிலும் பல பழ வகைகளை சேர்த்து, பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக கொடுப்பதில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

நேர்மறை ஆற்றலை ஒரு வீட்டில் அதிகரிக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் பலவகைப்பட்ட பழங்கள் இருந்தாலே போதும். அதாவது உங்களுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு சாப்பிட தேவையான பழ வகைகளை வாங்கி எப்போதும் வீட்டில் வைத்திருக்க வேண்டும். இது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது.

froot1

வாழைப்பழம், ஆரஞ்சு பழம், கொய்யா பழம், மாம்பழம், ஆப்பிள் இப்படி பலவகைப்பட்ட பழங்களை வாங்கி ஒரு அழகான பேசனில் அடுக்கிவைத்து உங்களுடைய வரவேற்பறையில், ஒரு மேஜையின் மீது அல்லது டைனிங் டேபிளின் மீது அல்லது சமையலறை மேடையின் மீது வைத்து விட்டால், உங்களுடைய வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் இருந்து கொண்டே வரும். இந்த பழங்களை நீங்கள் சாப்பிடவும் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி அழகாக பழங்கள் உங்களுடைய வீட்டில் வரவேற்பறையில் அடுக்கி வைத்தால் கண் திருஷ்டியும் ஏற்படாது. பெரிய பெரிய பணக்காரர்களுடைய வீட்டில் டைனிங் டேபிளின் மேல் கட்டாயம் பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

- Advertisement -

பழங்களை நிரப்பி வைத்திருக்கும் இந்த பழ வகைகளில் கட்டாயமாக இருக்க வேண்டிய பழம் எது, என்று உங்களுக்கு தெரியுமா? அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. அன்னாசிப் பழம் பார்ப்பதற்கு கலச சொம்பு தோற்றத்தை தரும். கலசத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் எந்த அளவிற்கு இல்லத்தில் சுபிட்சம் நிரம்பி வழியுமோ, அதே அளவு, ஒரு அன்னாசிப்பழம் உங்களுடைய வீட்டில் இருந்தால், இல்லம் இனிமையாக மாறும்.

froot2

இந்த அன்னாசி பழத்தை வாங்கி உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இது அவ்வளவு சீக்கிரமாக கெட்டுப் போகாது. காயாக இருக்கும் அன்னாசிப் பழம், பழுக்க பழுக்க உங்களுடைய வீடு முழுவதும் இதனுடைய வாசம் நிறைந்திருக்கும். அந்த வாசத்தை சுவாசிக்கும் உங்களுடைய மனம் எப்போதுமே இனிமையாக இருக்கும். சண்டை சச்சரவுகள் வருவது குறையும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும்.

froot3

உங்கள் வீட்டில் வாங்கி வைத்த இந்த அன்னாசிப்பழத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் சாப்பிட்ட பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவேளை உங்கள் வீட்டில் வாங்கி வைத்து அன்னாசிப்பழம் கெட்டுப் போய்விட்டால் அதை எடுத்து தூர போட்டுவிடலாம் அதிலும் தவறொன்றும் கிடையாது. மீண்டும் ஒரு புதிய அன்னாசி பழத்தை வாங்கி உங்களது பழ கூடையில் வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். இதன் மூலம் உங்களுடைய வீட்டில் பல நன்மைகள் நடப்பதை உங்களால் உணர முடியும். நீங்கள் முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.