நீங்கள் விரும்பிய வேலை கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்

murugan

உழைப்பு தான் உலகை உய்விக்கிறது. மிகப்பெரும் மகான்களும், ஞானிகளும் கூட உழைப்பை போற்றியதோடு இல்லாமல் தங்களுக்கு மிகவும் பிடித்த, பிறருக்கு பயன் தரும் வகையிலான வேலைகளை செய்து வந்திருக்கின்றனர். தற்காலங்களில் பெருமளவில் இளைஞர்கள் கல்வி கற்கின்றனர். இவர்கள் அனைவருக்குமே எதிர்வரும் காலங்களில் வேலை கிடைக்க அவர்களின் திறமையோடு, தெய்வ அனுகிரகம் இருப்பது அவசியம். அதை தரும் சுப்பிரமணிய ஸ்லோகம் இதோ

palani murugan

சுப்பிரமணியர் ஸ்லோகம்

ராஜராஜஸகோத்பூதம் ராஜீவாயத லோசனம்
ரதீசகோடி ஸௌந்தர்யம் தேஹிமே விபுலாம் ச்ரியம்

வேலை தேடுபவர்கள் தினமும் துதிக்க வேண்டிய அற்புத மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டின் பூஜையறையில் இருக்கும் சுப்பிரமணியர் ஸ்வாமி படத்திற்கு முன்பு நின்றவாறு 108 முறை துதித்து சுப்ரமணியரான முருகப்பெருமானை வணங்க வேண்டும். கல்வி முடித்து வேலை தேடுபவர்களுக்கும், வேறு வேலையிலிருந்து புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களும் இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் துதித்து வந்தால் அவர்கள் விரும்பிய வகையான வேலை கிடைக்கப்பெறுவார்கள்.

Lord Murugan

தற்காலங்களில் உலகெங்கும் மக்கள் தொகை பெருத்து கொண்டே செல்கிறது. ஆனால் கல்வி கற்ற அனைவருக்குமே அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைப்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. ஒருவருக்கு வேலை கிடைக்க அவரின் தகுதி, திறமை ஆகியவற்றோடு தெய்வ அருளும் அவசியமாகிறது. இம்மந்திரம் கூறி வழிபடுபவர்களுக்கு அந்த தெய்வத்தின் அருளால் அவர்கள் விரும்பிய படியான வேலை கிடைக்கப்பெறுவர்கள்.

இதையும் படிக்கலாமே:
கண் திருஷ்டி நீங்க மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Subramanyar slokam in Tamil. It is also called as Murugan mantras in Tamil or Subramanya mantra in Tamil or Velai kidaika slogam in Tamil or Subramanya mantram in Tamil.