உங்களின் கண் திருஷ்டி தோஷம் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்

murugan

நாம் அனைவருமே பல காரணங்களை கருத்தில் கொண்டு சக மனிதர்களிடம் பகை கொண்டு அலைகிறோம். ஆனால் நமக்குள்ளாக இருக்கும் கோபம் எனும் உட்பகையை போக்கினாலே நமக்கு எதிரிகள் என்று எவருமில்லை. எனினும் இந்த உலகில் நாம் பகைமை பாராட்டவில்லை என்றாலும், நம் மீது பொறாமை, பகை கொண்டு நமக்கு தீமைகள் விளைவிக்க பலர் இருக்கின்றனர் என்பது கசப்பான உண்மை. இவையனைத்தையும் போக்கும் ஷண்முகர் காயத்ரி மந்திரம் இதோ.

palani murugan

ஷண்முகர் காயத்ரி மந்திரம்

ஓம் ஷண்முகாய வித்மஹே
மஹா ஸேநாய தீமஹி
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்

Sivanmalai Murugan

தேவர்களை காக்க அவதரித்த சக்தி வடிவான ஷண்முகர் என்படும் முருகனுக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்ததும் ஷண்முகரை மனதில் நினைத்து துதித்து வருவது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள், சஷ்டி தினங்களில் முருகன் சந்நிதியில் முருகனுக்கு தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 27 அல்லது 108 முறை துதித்து வருவதால் உங்களின் எதிரிகளை வெற்றி கொள்ளலாம். நிலம் சம்பந்தமான பிரச்சனைகள், நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றில் உங்களுக்கு வெற்றி கிட்டும். கண் திருஷ்டி மற்றும் துஷ்ட சக்திகள் பாதிப்பு நீங்கும்.

kantha sasti kavasam lyrics

அனைத்திற்கும் முதன்மையானவராக இருக்கும் அந்த ஷண்முகரை நாங்கள் தியானிக்கிறோம், தேவர்களின் படை தளபதியான ஸ்கந்தனாகிய சண்முகர் எங்களுக்கு எல்லா வளங்களையும், ஞானத்தையும் வழங்கட்டும் என்பதே இந்த காயத்திரி மந்திரத்தின் பொதுவான பொருளாகும். சிவபெருமானின் சக்தி வடிவாமாக தோன்றியவர் ஷண்முகம் எனப்படும் ஆறு முகங்களை கொண்ட சண்முகர் எனப்படும் முருகப்பெருமான். இந்த ஷண்முக காயத்ரி மந்திரத்தை துதிப்பவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

தெய்வீகம் வீடியோ : Dheivegam
இதையும் படிக்கலாமே:
முயற்சிகளில் வெற்றியுண்டாக மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Shanmuga gayathri mantram in Tamil. It is also called as Shanmuga manthiram in Tamil or Murugan manthirangal in Tamil or Murugan gayatri mantras in Tamil.