உங்களுக்கு எதிரிகள் தொல்லை, செய்வினை பாதிப்புகள் நீங்க இதை செய்யுங்கள் போதும்

sudharsanam

ஞானத்தையும், முக்தியையும் வழங்கும் கடவுளாக சிவபெருமான் வழிபடப்படுகிறார். ஆனால் செல்வ வளத்திற்கும் சுகபோக வாழ்க்கைக்கும் கடவுளாக இருக்கும் திருமாலை பல விதமான மக்களும் வழிபடுகின்றனர். நாராயணனாக இருக்கும் திருமாலின் அணிகலன்கள் ஒவ்வொன்றுமே தெய்வீக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. மகாவிஷ்ணு தனது வலது கையில் ஏந்தி இருக்கும் சுதர்சன சக்கரம் தீமையானவை அனைத்தையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்த திருமாலின் ஆயுதமாக இருக்கிறது. சுதர்சன சக்கரத்தின் முழுமையான அருளைப் பெறுவதற்காக செய்யப்படுவதே சுதர்சன ஹோமமாகும். இந்த சுதர்சன ஹோமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Sudarshana vishnu

பௌர்ணமி தினங்கள், புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தினங்களில் வருகின்ற ஏகாதசி, துவாதசி தினங்களில் சுதர்சன ஹோமம் செய்தால் பலன்கள் வேகமாகவும், அதிகமாகவும் கிடைக்கும். இந்த சுதர்சன ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்துகொள்ளலாம். கோயில்களில் செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.

சுதர்சன ஹோமத்தை செய்து கொள்வதால் தனிப்பட்ட முறையிலும் தொழில், வியாபார வழியில் ஏற்படும் எதிர்ப்புகள், எதிரிகள் என அனைத்தும் ஒழியும். உங்களுக்குள் நேர்மறையான சக்திகள் நிரம்பி நன்மைகள் உண்டாகும். துக்கங்கள், துயரங்கள் போன்றவை உங்களை என்றும் அணுகாது.வேலை மற்றும் தொழில், வியாபாரம் ஆகியவற்றில் வேகமான முன்னேற்றங்கள் ஏற்படும். மகாவிஷ்ணுவின் பூரணமான கடாட்சம் உங்களுக்கு கிடைக்கச் செய்யும். நீண்ட நாள் நோய்களிலிருந்து விடுதலைக் கிடைக்கும். விபத்துக்கள் ஏற்படாமல் உங்களையும், உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் காக்கும். செய்வினை, மாந்திரீகம் ஏவல்கள், துஷ்ட சக்திகள் போன்றவை உங்களை எப்போதும் அணுகாமல் காக்கும்.

இதையும் படிக்கலாமே:
பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sudarshana homam in Tamil. It is also called as Ethirigal oliya in Tamil or Homangal in Tamil or Homam pooja in Tamil or Homangal palangal in Tamil.