உங்களுக்கு ஆபத்துகள் ஏற்படாமல் இருக்க, காரிய தடை நீங்க மந்திரம்

sri-chakram

வைணவ கடவுளான திருமாலின் கைகளில் திருச்சங்கு ஒரு கையிலும் ஸ்ரீ சக்ரம் மற்றொரு கையிலும் இடம்பெற்றிருக்கும். இந்த ஸ்ரீ சக்ரம் தீமைகளை வேரறுக்க திருமால் பயன்படுத்திய ஆயுதமாகும். அந்த சக்ராயுதமும் ஒரு ஆழ்வாராக கருதப்பட்டு சக்ரத்தாழ்வார் என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இந்த சக்ரத்தாழ்வாரின் மூல மந்திரம் மிகவும் சக்திவாய்ந்ததாகும். திடீரென்று ஏற்படும் ஆபத்துகளிலிருந்து நம்மை காக்கும் அற்புத மந்திர சக்திவாய்ந்த இந்த மூல சுதர்சனர் மந்திரம் அடிக்கடி படித்து வருவது சிறந்தது.

chakrathalwar

சுதர்சனர் மூல மந்திரம்

ஓம்; ஸ; ஹ; ஸ்ரா; ர; ஹூம்; பட்

திருமாலின் ஸ்ரீ சக்கரமான சக்ரத்தாழ்வர் எனப்படும் சுதர்சனர் மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை அனைத்து நாட்களிலும் துதிக்கலாம் என்றாலும் திருமாலின் வழிபாட்டிற்குரிய புதன் மற்றும் சனிகிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், விஷ்ணு கோவிலுக்கு சென்று, பெருமாளுக்கு முன்பு நின்று சுதர்சன மூல மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வந்தால் வாகனங்களில் செல்லும் போதோ அல்லது ஆபத்தான பணிகளில் ஈடுபடும் போதும் விபத்துகள் மற்றும் திடீரென்று ஏற்படும் ஆபத்துகளிலிருந்து காக்கும். உங்களுக்கு தொழில், வியாபாரங்களில் தொல்லைகள், இடைஞ்சல்கள் ஏற்படுத்துபவர்கள் அடங்கிபோவார்கள். தீய சக்திகள், செய்வினை மாந்திரிகம் போன்றவை உங்களை பாதிக்காது. காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படாமல் அனைத்திலும் சிறப்பான வெற்றியை கொடுக்கும்.

sudarshan chakram

- Advertisement -

எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுவதற்கு முதலில் துணிவு வேண்டும். துணிந்தவர்க்கு தெய்வம் துணை என்று ஒரு பழமொழி கூட உண்டு. ஆனால் இன்று பலரும் வாழ்வாதாரத்திற்காகவும், மக்களின் சேவைக்காகவும் தங்களுக்கே ஆபத்தை தரும் வகையிலான பணிகளை தினந்தோறும் செய்கின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு ஆபத்து எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதே போல தொழில் செய்பவர்களுக்கும் எதிரிகளால் எந்த விதத்திலும் தொல்லையோ ஆபதோ வரலாம். வேண்டுபவர்களுக்கு தாமதிக்காமல் வந்து அருள் புரியும் தெய்வம் திருமால். அவரின் ஆயுதமான “ஸ்ரீ சக்ரம்” எனும் சுதர்சன சக்கரத்தாழ்வார் மூல மந்திரம் துதிப்பவர்களுக்கு நன்மைகள் மட்டுமே உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
சனி பாதிப்புகளை போக்கும் மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Sudharsan moola mantra in Tamil. It is also called as Chakarathalwar mantra in Tamil or Moola mantras in Tamil or Dusta shakti nivarana mantra in Tamil or Sudharsanar manthiram in Tamil.