கரும்பு சாறு அல்வா செய்முறை

karumbu halwa
- Advertisement -

தைப்பொங்கல் முடிந்து விட்டது. பொங்கலுக்கு சாமி கும்பிடுவதற்காக அனைவரின் இல்லங்களிலும் கரும்பு வாங்கி வைத்து வழிபடும் வழக்கமும் இருக்கிறது. இப்படி வாங்கிய கரும்பை ஒரு சில இல்லங்களில் யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அப்பொழுது அந்த கரும்பு வீணாகும் சூழ்நிலை ஏற்படும். அப்படி கரும்பை வீணாக்காமல் கரும்புச்சாறு எடுத்து அதில் அல்வா எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

கரும்பில் அதிக அளவு சுண்ணாம்பு சத்து இருப்பதால் ஒரு சிலருக்கு இந்த கரும்பு ஒத்துக் கொள்ளாது. கொஞ்சம் சாப்பிட்டால் கூட அந்த சுண்ணாம்பு செத்தால் நாக்கில் ஒருவித மரத்துப்போகும் தன்மை ஏற்பட்டுவிடும் ஒரு சிலருக்கு நாக்கில் புண் வரும். அது மட்டுமல்லாமல் பலவீனமான பற்களைக் கொண்டவர்களும் கரும்பை விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் கரும்பில் பல எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து இருக்கிறது இந்த கரும்பை நாம் கரும்பு சாராக எடுத்தும் அருந்தலாம் இப்படி அல்வாவாக செய்து கொடுத்தும் அசத்தலாம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • கரும்புச்சாறு – 2 கப்
  • சோள மாவு – 2 ஸ்பூன்
  • முந்திரி – 1/4 கப்
  • நெய் – 4 ஸ்பூன்
  • நாட்டுச்சர்க்கரை – 3 ஸ்பூன்
  • உப்பு – ஒரு சிட்டிகை

செய்முறை

முதலில் கரும்பை கணுக்கணுவாக வெட்டி அதில் இருக்கும் தோலை நீக்கிவிட வேண்டும். கணுவில் இருக்கக்கூடிய தடிமனான பகுதியையும் நறுக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து அதில் இருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு கரும்புச் சாறை ஒரு பவுலில் சேர்த்து அதில் சோளமாவை சேர்த்து கட்டி விழுகாத அளவிற்கு நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது காய்ந்ததும் இரண்டு ஸ்பூன் அளவு நெய்யை ஊற்ற வேண்டும். நெய் நன்றாக காய்ந்ததும் அதில் முந்திரிப் பருப்பை போட்டு நன்றாக பொன்னிறமாக வரும் அளவு வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இதே கடாயில் தயார் செய்து வைத்திருக்கும் கரும்புச்சாறை ஊற்றி கைவிடாமல் கிண்ட வேண்டும். குறைந்த தீயில் வைத்து தான் இந்த அல்வாவை செய்ய வேண்டும்.

- Advertisement -

சிறிது நேரத்திலேயே கரும்புச்சாறு கெட்டியாகும். இப்பொழுது நாட்டுச் சர்க்கரை மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அல்வா பதத்திற்கு வரும்பொழுது மீதமிருக்கும் நெய்யையும் வறுத்து வைத்திருக்கும் முந்திரியையும் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அல்வா பதத்திற்கு வந்த பிறகு அதை எடுத்து தட்டில் வைத்து பரிமாறி விடலாம். விருப்பம் இருப்பவர்கள் பாதாம், பிஸ்தா என்று பருப்பு வகைகளை இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: கத்திரிக்காய் பச்சடி செய்முறை

சாமி கும்பிடுவதற்காக வாங்கிய கரும்பை பிறருக்கு தராமல் அதே சமயம் வீணாக்காமல் இந்த முறையில் அல்வா செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தலாம்.

- Advertisement -