ஒவ்வொருவரும் வசதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். அந்த வசதியான வாழ்க்கையை வாழ்வதற்கு நமக்கு போதுமான அளவு பணவரவு என்பது வரவேண்டும். அப்படிப்பட்ட பணவரவை தரக்கூடிய கிரகமாக திகழக்கூடியவர் தான் சுக்கிர பகவான். சுக்கிர பகவானின் அருள் ஒருவருக்கு பரிபூரணமாக இருந்து விட்டால் அவர் வசதி வாய்ப்பில் எந்தவித குறையும் இல்லாமல் இருப்பார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுக்கிர பகவானின் அருளை பெறவும் சுக்கிரவசியம் ஏற்படவும் தயிரை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுக்கிர வசியம் ஏற்பட பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கு போதுமான அளவு பண வரவை தரக்கூடிய கிரகமாக திகழக்கூடியவர் சுக்கிர பகவான் என்பது நம் அனைவருக்கும் தெரியும். மேலும் சுக்கிர பகவானின் அருளால் அனைத்து விதமான வசதி வாய்ப்புகளோடு சுகபோகமாக வாழ முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுக்கிர பகவானை வசியம் செய்வதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
இந்த பரிகாரத்தை சுக்கிர பகவானுக்குரிய கிழமையான வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்குரிய கிழமை என்பது நம் அனைவருக்குமே தெரியும். மகாலட்சுமிக்குரிய கிரகமாக திகழக் கூடியவர் சுக்கிர பகவான் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. அதனால் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர பகவானுக்கு மகாலட்சுமி தாயாருக்கும் உரிய பொருளாக கருதப்படக்கூடிய தயிரை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்யும் பொழுது சுக்கிர பகவானின் அருளும் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளிக்க செல்வதற்கு முன்பாக ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிரை எடுத்து உள்ளங்கையில் வைத்து இரண்டு உள்ளங்கைகளையும் நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு இதை அப்படியே நம்முடைய முகத்தில் தடவிக் கொள்ள வேண்டும். உள்ளங்கையில் மகாலட்சுமி தாயார் வீற்றிருக்கிறார் என்பது நம் அனைவரும் அறிந்த உண்மையே. அதில் தயிரை வைத்து தேய்ப்பதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற முடியும். மேலும் அதை நம்முடைய முகத்தில் நாம் தைப்பதன் மூலம் சுக்கிர வசியம் மகாலட்சுமி தாயாரின் வசியமும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. சிறிது நேரம் கழித்து நாம் எப்பொழுதும் குளிக்க செல்வது போல் சென்று விடலாம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தயிரை இந்த முறையில் நம்முடைய முகத்தில் தடவி பிறகு குளிக்க செல்வதன் மூலம் சுக்கிர வசியம் உண்டாகும். மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் நம்முடைய முகத்தில் ஒருவித புத்துணர்ச்சியும் தெளிவும் உண்டாகும். தெய்வீக கலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நமக்கு இருக்கக்கூடிய பணத்தடைகள் அனைத்தும் நீங்கி பணவரவு என்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது
இதையும் படிக்கலாமே:ஸ்ரீ பஞ்சமி வழிபாடு
தயிரில் பல அற்புதமான மருத்துவ குணம் இருக்கிறது. மேலும் இது மகாலட்சுமி தாயாருக்கும் சுக்கிர பகவானுக்கும் உரியதாக கருதப்படுகிறது. அதனால் தயிரை இந்த முறையில் நாம் பயன்படுத்தும் பொழுது நம்முடைய முக அழகும் அதிகரிக்கும் சுக்கிர பகவான் மற்றும் மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.