சுக்கிர பகவானால் யோகம் பெரும் லக்னக்காரர்கள்

sukura jathagam
- Advertisement -

நம்முடைய ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிகளுக்கும் ஒவ்வொரு கிரகங்கள் தெய்வமாக இருந்து செயல்படுபவர்கள் அந்த கிரகங்களின் தன்மையை பொறுத்து அந்த ராசிக்காரர்கள் நற்பலனை அடைவதும் அடையாமல் போவதும் நிகழும் அந்த வகையில் சுக்கிர பகவானால் எப்போதும் யோகத்தை பெறும் லக்னக்காரர்களை பற்றி ஜோதிடம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சுக்கிர பகவான் எப்பொழுதும் கொஞ்சம் சுயநலமாக செயல்பட கூடியவர். தன்னுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்று நினைப்பவர். ஆகையால் தான் அவருக்கு நான்காம் இடத்தில் திக்பலம் அடைய வைத்துள்ளார்கள். வசதி, வாய்ப்புகள், பட்டம், பதவி, வண்டி, வாகனம், முதலீடு போன்றவற்றை குறிக்கக் கூடியது நான்காம் இடம். அந்த இடத்திற்கு அதிபதியான சுக்கிர பகவான் ஒருவருடைய வாழ்க்கையில் அனைத்து சுகங்களையும் தரக்கூடியவராக திகழ்கிறார்.

- Advertisement -

மேஷம்

சுக்கிரனுக்கு இரண்டு வீடுகள் உண்டு என்று சொல்வார்கள். கால புருஷனுடைய இரண்டாம் இடமும் ஏழாம் இடமும் ஆகையால் சுக்கிர பகவான் மேஷம் ரிஷபம் இரண்டிற்குமான கிரக தெய்வமாக விளங்குகிறார். அந்த வகையில் மேஷ ராசி லக்னக்காரர்களுக்கு நான்காம் இடத்தில் இருக்கும் சுக்கிர பகவான் வாழ்க்கைத் துணையின் மூலமாக பலவிதமான வசதி வாய்ப்புகளை கொடுப்பார். பொருளாதாரத்தின் தன்மையிலும் தாராளமாக வாரி வழங்குவார். கூட்டுத் தொழில் இவர்களுக்கு பெரிய அளவில் கை கொடுக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியே கொடுக்கும். ஆகையால் பணவரவிற்கு தடையில்லாமல் கோடிகளை குவிக்க கூடிய யோகக்காரர்கள் இவர்கள்.

ரிஷபம்

ரிஷப லக்னக்காரர்களுக்கும் நான்காம் இடத்தில் சுக்கிரன் இருக்கிறார். இவர் லக்னாதிபதியாகவும் இந்த ராசியில் செயல்படுகிறார். இவர்களுக்கு நல்ல வேலையின் மூலமாக பலவிதமான வாய்ப்புகளை தருவார். உயர் பதவிகள் சொத்து சுகம் சேர்க்கும் வாய்ப்பை தருவார். வண்டி வாகனம் வீடு போன்றவற்றை கடன் மூலமாக வாங்கக் கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தினாலும் அவற்றையெல்லாம் எளிதில் அடைக்க கூடிய வாய்ப்பையும் தருவார்.இவர்கள் எப்பொழுதும் பிறருடன் போட்டி போட்டு வெற்றி அடைவதில்லை இன்பம் காண்பவர்களாக இருப்பார்கள். இது சுக்கிர பகவானுக்குரிய நிலைத்த வீட்டிற்கான லக்னம் என்பதால் எப்பொழுதும் நிலையான சுகபோகங்களை தந்து கொண்டே இருப்பார்.

- Advertisement -

மிதுனம்

இந்த மிதுன லக்னத்திற்கும் சுக்கிர பகவான் நான்காம் இடத்தில் இருக்கிறார். இவர் இதில் நீச்சம் அடைந்து திக்பலத்தை பெற்று மீண்டும் இழந்த வலிமையை பெறுவார். ஆகையால் இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் எப்போதும் உயர்வு தாழ்வாக இருக்கும். இவர்கள் அடிக்கடி வீடு மாற்றம் செய்வதன் மூலமாகவும் ஊர் மாற்றம் செய்து கொள்வதன் மூலமாகவும் அதாவது வெளியூர் பிரயாணம் வேலைகள் தொடர்பானவற்றில் அதிக அளவு வெற்றி காண்பார்கள்.

வெளிநாட்டில் வசிப்பதன் மூலமும் பூர்வீகத்தை விட்டு வெளியேறுவதன் மூலமாகவும் இவர்களுக்கு யோகங்கள் கிடைக்கும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதில் மிகுந்த அலாதி பிரியம் கொண்ட இந்த ராசிக்காரர்கள் அதன் மூலம் மகிழ்ச்சியான மனநிலையை பெறுவார்கள்.

இதையும் படிக்கலாமே: சூரியனின் பார்வையால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள்

இந்த பதிவில் உள்ள தகவல்கள் ஜோதிட சாஸ்திரத்தின் பொதுவான கருத்துக்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்டவை ஆகும். இது அவரவர் கிரக சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் தன்மைக்கு உட்பட்டவை. இந்த பதிவில் உள்ள தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்குமேயானால் பயன்படுத்தி பலன் அடையலாம்.

- Advertisement -