இந்த நேரத்தில் யாருக்காவது பணத்தை கடனாக கொடுத்தால், அந்தப் பணம் திரும்ப வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

cash-sadman
- Advertisement -

அடுத்தவர்களுக்கு நாம் நல்லது செய்ய வேண்டும் என்று தான் சில உதவிகளை செய்கின்றோம். அந்த வரிசையில் நமக்கு தெரிந்தவர்கள், நண்பர்கள் யாராவது பணத்திற்காக கஷ்டப்படும் போது, நம் கையில் பணம் இருந்தால் கொடுத்து உதவும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு உள்ளது. இப்படி உதவி செய்பவர்களுடைய பெருந்தன்மையை நிச்சயமாக பாராட்டத்தான் வேண்டும். ஆனால் நாம் செய்யும் உதவி, உபத்திரமாக மாறிவிடக்கூடாது. நாம் அடுத்தவர்களுக்கு பணத்தை கொடுத்து உதவி செய்தால் அந்த உதவியின் மூலம் நமக்கும் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது. பணத்தை பெறுபவர்களுக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாது.

எந்த நேரத்தில் கடனை அடுத்தவர்களுக்கு கொடுக்க கூடாது. எந்த நேரத்தில் நாம் அடுத்தவர்களிடம் கடனை கைநீட்டி வாங்கக் கூடாது என்பதை பற்றிய ஒரு சிறிய ஆன்மீக ரீதியான தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள கொஞ்சம்.

- Advertisement -

தினந்தோறும் வரக்கூடிய சுக்கிர ஹோரையை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். சுக்கிர ஹோரை நடைபெறும் அந்த நேரத்தில் நீங்கள் யாருக்காவது கடனை உங்கள் கையிலிருந்து கொடுத்தால் அந்த கடன் நிச்சயமாக உங்களுக்கு திருப்பி வராது. அப்படியே அந்த தொகை உங்கள் கைக்கு திரும்பி வருவதாக இருந்தால், அதில் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும். கடன் கொடுத்த உங்களுக்கும், கடன் வாங்கியவர்களுக்கும் சண்டை சச்சரவு அடிதடி நடப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. அதன் பின்பு உங்களுடைய உறவு உடைந்து போவதற்குக் கூட வாய்ப்புகள் உள்ளது. அந்த அளவிற்கு பிரச்சனைகள் ஆன பின்புதான் அந்த பணம் உங்கள் கைக்கு மீண்டும் வந்து சேரும். இந்த பண உதவியை ஏன்தான் செய்தோமோ என்று யோசிக்கும் அளவிற்கு குளறுபடி ஏற்பட்டு விடும்.

நீங்களே இந்த விஷயத்தை சோதித்து கூட பார்க்கலாம். சுக்கிர ஹோரையில் யாருக்கேனும் கடன் கொடுத்து பாருங்கள். அதில் எவ்வளவு பிரச்சினை வருகிறது என்பது உங்களுக்கே தெரியும். ஆனால் இதை செய்தால் நல்லது நடக்கும் என்று சொல்லி, அந்த விஷயத்தை சோதித்துப் பார்ப்பதில் தவறு கிடையாது. ஒரு விஷயம் செய்தால் கெட்டது நடக்கும் என்று யாராவது சொன்னால், ‘இப்படி செய்தால் கெட்டது நடக்குமா? என்று முயற்சி செய்து பார்ப்பது தவறு’.

- Advertisement -

கூடுமானவரை சுக்கிர ஹோரையில் நீங்களும் யாரிடமும் போய் கடன் கேக்காதீங்க. சுக்கிர ஹோரையில் உங்கள் கையில் இருக்கும் பணத்தை கடனாக கொடுக்காதீர்கள். குறைவான காசுதான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. மிகவும் இக்கட்டான சூழ்நிலை. ஒரு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென்று நம் கையில் 500, 1000 கேட்கிறார்கள். உங்களின் நெருங்கிய சொந்தக்காரர். நெருங்கிய நண்பர்கள் என்றால் என்ன செய்வது? அந்த தொகையை நீயே வைத்துக்கொள் என்று உதவிக்காக அந்த பணத்தை கொடுத்து விடுங்கள். கடனாக திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்.

அவசரத் தேவைக்கு குறைந்த ரூபாயாக இருந்தால், ரொம்பவும் கஷ்டப்படும் குடும்பத்திற்கு, இப்படி செய்து கொள்ளலாம். சுக்கிர ஹோரையில் உங்களிடம் யாராவது வந்து நிறைய பணம் கடனாக கேட்டால், அந்த நேரத்தைத் தவிர்த்து விட்டு, அவர்களின் மனது நோகாதபடி ஒரு பதிலை சொல்லி சமாளித்து கொள்ளுங்கள். வேறு வழியே கிடையாது. நேரமும் காலமும் நமக்கு தகுந்தபடி செயல்பட வேண்டும் என்றால் சில விஷயங்களை நாம் பின்பற்றித்தான் ஆகவேண்டும். எல்லாம் நன்மைக்கே என்ற இந்த கருத்தோடு, இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -