இன்று வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும்! கடன் பிரச்சனை விரைவாக தீர்ந்துவிடும்.

deepam-sukran

இன்று வெள்ளிக்கிழமை மாத சிவராத்திரி வந்துள்ளது. எப்போதும் வெள்ளியன்று சுக்ர தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். இதன் மூலம் எந்த கடன் பிரச்சனையாக இருந்தாலும் சரி நிவர்த்தி ஆகிவிடும். கடன் பிரச்சனை இன்று இருக்கும் நிலையில் பலருக்கும் பெரிய சுமையாக இருக்கிறது. ஒரு வேளை உணவிற்கும் பலர் கடன் வாங்க வேண்டிய நிலை தான் இருக்கிறது. சேமிப்பின் அருமையை உணரும் சரியான தருணம் இது என்றே கூறலாம்.

hundi

சேமிப்பது என்பது வாழ்க்கையில் அத்தியாவசிய ஒன்று. அதற்காக தேவைக்கு அதிகமாக சேர்த்து வைக்க வேண்டிய அவசியமில்லை. ‘கொடுத்து மகிழ்’ என்ற ஒரு கூற்று உள்ளது. பிறருக்கு கொடுப்பதிலும் சுகம் காணுங்கள். நீங்களும் நலமுடன் இருங்கள். வெள்ளிக்கிழமையில் சுக்ர ஹோரை எப்போது வருகிறது என்று முதலில் பார்த்துக் கொள்ளுங்கள். வெள்ளியன்று வரும் சுக்ர ஹோரையில் சுக்ர தீபம் ஏற்ற வேண்டும். இந்த சுக்ர தீபம் எப்படி ஏற்றுவது என்று இப்பதிவில் இனி காணலாம் வாருங்கள்.

இவ்வாறு சுக்ர ஹோரை பார்த்து ஏற்றப்படும் தீபத்தினால் நமக்கு உண்டாகி இருக்கும் கிரக தோஷம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. கிரகங்கள் தான் மனிதனை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. கிரகங்களின் ஆதிக்கம் இன்று உலகை உலுக்கி கொண்டும் இருக்கிறது. மனிதன் செய்யும் பாவத்திற்கு ஏற்ப அவ்வப்போது இறைவன் உலகிற்கு எச்சரிக்கை செய்து வருவார். இனியும் அறிவை பயன்பாடுத்தாமல் மனிதன் பாவம் செய்து கொண்டிருந்தால் தோஷங்களும் உண்டாகும். பிரபஞ்சமும் அழிந்து கொண்டிருக்கும். மனிதன் சரியான வழியில் சென்றால் மட்டுமே உலகம் மீண்டும் புத்துணர்வு பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.

sukran

இன்றைய நாளில் சுக்கிர ஹோரை பகல் 1 மணி முதல் 2 மணி வரை மற்றும் 3 மணி முதல் 4 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் சுப்ர தீபம் ஏற்றுங்கள். வாழ்வில் தோஷம் நீங்கி புத்துணர்வு பெறுங்கள். சக்கர தீபம் ஏற்றுவதற்கு இரண்டு பொருட்கள் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த இரண்டு பொருட்களைக் கொண்டு திரியாக செய்து அகல் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும்.

- Advertisement -

உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு மாதுளை மரத்தில் இருக்கம் குச்சியை அகல் தீபத்திற்கு திரி போடும் அளவிற்கு உரித்துக் கொள்ளுங்கள். திரி பச்சையாக இருப்பது முக்கியமானது. இதேபோல் வெட்டிவேரையும் திரி போடும் அளவிற்கு சரியான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். மாதுளை மரக் குச்சியையும், வெட்டிவேரையும் சேர்த்து பஞ்சு திரியுடன் திரித்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களும் சுக்கிரனுக்குரிய பொருட்களாக கருதப்படுகிறது. சுக்கிர திசை அடிக்க சுக்கிர பகவானை வேண்டி சுக்ர ஹோரையில் தீபம் ஏற்றுவதற்கு பெயர் தான் சுக்கிர தீபம் என்பது ஆகும்.

deepam

நம் வாழ்வில் எந்த ஒரு நல்ல செயலாக இருந்தாலும் சரி, சுக்கிரனுடைய அருள் கட்டாயம் தேவைப்படுகிறது. சுக்கிர பகவானின் அருள் பெற இந்த வழிமுறையை பயன்படுத்தி தீபமேற்றுவது சிறந்த பலனை அளிக்கும் என்பதை சாஸ்திர குறிப்புகள் கூறுகின்றன. அன்றாட வெள்ளிக்கிழமை பணிகளை முடித்துவிட்டு சுக்கிர ஹோரையில் குலதெய்வத்தை மனதில் நினைத்த பூஜை அறையில் அகல் தீபம் ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி, இந்த சுக்ர தீபத் திரியினால் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும். கடன் பிரச்சனை கட்டாயம் தீரும். சுக்கிரனின் அருள் பார்வை இருக்கும் பொழுது கடன் பிரச்சனை நம்மை நெருங்காது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடன் தீர்ந்து வாழ்வில் சுபீட்சம் அடையுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்டில் பழைய துடைப்பத்தை, என்ன செய்வீங்க? இப்படி மட்டும் பண்ணீங்கன்னா, கட்டாயம் உங்க வீட்டு லக்ஷ்மி வெளியே போயிரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Sukran vazhipadu palangal in Tamil. Sukra deepam. Sukran benefits. Sukran valipadu in Tamil. Sukran valipadu.