உங்க வீட்டில் பழைய துடைப்பத்தை, என்ன செய்வீங்க? இப்படி மட்டும் பண்ணீங்கன்னா, கட்டாயம் உங்க வீட்டு லக்ஷ்மி வெளியே போயிரும்.

lakshmi
- Advertisement -

உங்கள் வீட்டை கூட்டி சுத்தம் செய்யும் துடைப்பமானது மகாலட்சுமியின் அம்சம். கட்டாயம் அடுத்தவர்களுக்கு உங்கள் வீட்டில், பயன்படுத்திய துடைப்பத்தை தானமாக கொடுக்க கூடாது. குறிப்பாக உங்கள் வீட்டில் பயன்படுத்தி தேய்ந்து போய், வெளியே தூக்கிப் போடும் நிலையில் இருக்கும் துடப்பம் கூட, கட்டாயம் வேறொருவர் கைக்கு செல்லக்கூடாது. முடிந்தவரை உங்கள் கைகளால் காசுகொடுத்து கூட, யாருக்கும் துடைப்பத்தை வாங்கித் தராதீர்கள்.

brooms

உங்களுடைய வீட்டில் பயன்படுத்தி தேய்ந்த துடைப்பத்தை குப்பையில் கட்டாயம் போடக்கூடாது. அடுத்தவர்களுக்கு தானம் கொடுக்க கூடாது. அப்போது என்னதான் செய்ய வேண்டும்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம், வீட்டில் பயன்படுத்திய துடைப்பத்தை பழசான பின்பு, என்ன செய்வார்கள்! என்ன செய்தால், அதனால் நமக்கு லட்சுமி கடாட்சம் ஏற்படும். நம் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும். என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

அந்த காலங்களில் எல்லாம், இப்போது நாம் வீட்டை கூட்டி சுத்தம் செய்யும் நவீன விளக்குமாறு கிடையாது. தென்னங்குச்சி விளக்குமாறு, பூந்தொட்டம் இப்படிப்பட்ட இயற்கையான துடப்பங்களை தான் பயன்படுத்தி வந்தார்கள். இதனால், அவர்கள் அதை வெட்ட வெளியில் வைத்து கொளுத்தி விடுவார்கள். அது சாம்பலாகி விடும். அப்படியே காணாமல் போய்விடும். ஆக, பழைய துடிப்பதை எரித்து விடலாம் தவறில்லை. மொத்தமாக ஒரு ஓரமாகப் போட்டு வைத்திருந்து கூட, வருடத்திற்கு ஒருமுறை போகி அன்று அந்த காலங்களில் எல்லாம் எரிப்பதை நாம் எல்லோரும் பார்த்திருப்போம் அல்லவா? அதுபோல்தான். ஆனால், மொத்தமாக தேய்ந்த துடைப்பத்தை வீட்டிற்குள்ளும் வைத்துக் கொள்ளக் கூடாது. அந்த காலங்களில் வீட்டில் ஒதுக்குப்புறமாக, எங்கேயாவது போட்டு வைத்திருப்பார்கள் வீட்டிற்குள் வைத்திருக்க மாட்டார்கள்.

சில பேருக்கு சொந்தமாக தோட்டம் துரவு இருக்கும். அந்த இடங்களில் மரத்தடியில் கொண்டுபோய் வைத்து விட்டார்கள் என்றால், காகம் குருவி பறவை இவைகளெல்லாம் கூடு கட்டுவதற்கு அந்த துடைப்பத்தை எடுத்துக்கொண்டு போய்விடும். இப்படியாக பறவைகள், நாம் போடும் துடைப்பதில் இருந்து, குச்சிகளை கொண்டு போய் கூடு கட்டுவது நம் குடும்பத்திற்கு நல்ல பலனைத் தருவதாக சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் நமக்கு இதெல்லாம் எவ்வளவு சாத்தியம் என்று தெரியவில்லை. ஏனென்றால், வெளியிடங்களில் கொண்டுபோய் பழைய துடைப்பத்தை போட முடியாது. உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டில், மொட்டை மாடியில் கொண்டு போய் வைக்கலாம். பறவைகள் அங்கு வந்து எடுத்துக் கொண்டு செல்லும்.

broom

இப்போதெல்லாம் பிளாஸ்டிக்கை பிடி வைத்துதான் துடைப்பம் வருகிறது. அந்த பிளாஸ்டிக்கை மட்டும் குப்பையில் போட்டுவிட்டு, வீட்டை சுத்தம் செய்யும் அந்த துடைப்பத்தின் கீழ்ப்பகுதியை மட்டும், குப்பையில் தூக்கி போடாமல் முடிந்தவரை மொட்டை மாடியிலோ அல்லது வெட்டவெளி இடங்களிலோ அல்லது ஏதாவது ஒரு மரத்தடியிலோ போட்டுவிடுங்கள்.

- Advertisement -

குறிப்பாக, சிலபேர் வீட்டை காலி செய்யும் போது, இறுதியாக அந்த வீட்டில் இருந்து மொத்தமாக எல்லா பொருட்களும் எடுத்துப் போகக் கூடாது என்று சொல்லி, தங்களிடம் இருக்கும் பழைய துடைப்பத்தை விட்டுவிட்டு செல்வார்கள். இது மிகப்பெரிய தவறு. உங்கள் வீட்டு மகாலட்சுமியை நீங்கள் குடியிருந்த, அந்த வீட்டிலேயே விட்டுவிட்டு செல்வதாக அர்த்தம்.

thudaippam1

வீடு காலி செய்யும்போது, பழைய துடைப்பதற்கு பதிலாக நீங்கள் குடியிருந்த அந்த வீட்டில், வேறு ஏதாவது பொருட்களை விட்டு செல்லும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். வீட்டை காலி செய்து போகும் போது, பழைய துடைப்பத்தை, கட்டாயம் நீங்கள் இருந்த வீட்டில் விட்டுச் செல்லக்கூடாது என்பதை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்.

எங்களால் துடைப்பத்தை குப்பையில் தான் போட முடியும். வேறு வழியே இல்லை! என்று சொல்லுபவர்களுக்கு, ‘முடிந்தவரை செவ்வாய், வெள்ளி இந்த தினங்களில் குப்பையில் தூக்கி போடாதீர்கள். மற்ற தினங்களில் உங்கள் வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள். அந்தத் துடைப்பத்தை அடுத்தவர்கள் எடுத்து கூட்ட முடியாத அளவிற்கு, கைபிடியையும், கூட்டும் பகுதியையும் இரண்டாக பிரித்து தூக்கிப் போட்டு விடுங்கள். அவ்வளவுதான்! ‘ஒரு துடைப்பத்திற்க்கு கூடவா இவ்வளவு சாஸ்திரம்? என்று மலைத்துக் கொள்பவர்களுக்கு இந்த பதிவு அல்ல. துடைப்பதிலும் இத்தனை சாஸ்திரங்கள் உள்ளதா? என்று நம்புபவர்கள் இதைப் பின்பற்றி கொள்ளலாம்.’

இதையும் படிக்கலாமே
இந்த வாரம் அமாவாசையை அடுத்து வரும், சூரிய கிரகணத்தன்று, முன்னோர்களின் சாபம் நீங்க என்ன செய்ய வேண்டும்? இப்படி செய்தால் முன்னோர்களின் ஆசிர்வாதமும் பரிபூரணமாக கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thudappam vaikkum murai. Broomstick in Tamil. Thudappam Tamil. Velakamaru in Tamil. Thodappam in Tamil.

- Advertisement -