சுக்ரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Sukran peyarchi astrology

நேற்று(06-02-2018) சுக்கிர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இதன் காரணமாக உங்கள் ராசிக்கு என்ன பலன் என்று விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்

mesham

மேஷ ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 11ஆம் இடமான லாப ஸ்தானத்திற்கு சுக்ர பகவான் வருகிறார். இதன் காரணமாக உங்களுக்கு பண வரவு அதிகரிக்கும். விரியாபாரம் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பதோடு சேர்ந்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உற்றார் உறவினர்களிடையே உங்கள் மதிப்பு கூடும். புதிய வாகனம் வாங்குவது, சொத்து வாங்குவது போன்ற செயல்களை செய்யலாம்.

ரிஷபம்

rishabam

- Advertisement -

ரிஷப ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 10ஆம் இடத்தில் சுக்ர பகவான் அமர்கிறார். இதன் காரணமாக உங்கள் தொழில் திறன் அதிகரிக்கும். வேலை செய்யும் இடங்களில் நன் மதிப்பை பெறுவீர்கள் ஆனால் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் தேவை. கவன குறைவாக பேசும் வார்த்தைகளால் வீட்டில் தேவை இல்லாத சண்டை சச்சரவுகளில் சிக்கிகொள்வீர்கள். ஆகையால் கவனமாக இருங்கள்.

மிதுனம்

midhunam

மிதுன ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் சுக்ர பகவான் அமர்கிறார். இதன் காரணமாக உங்கள் குடும்ப உறவு மேம்படும். கூட்டு தொழிலில் ஈடுபட்டிருப்பரவல்களிடம் ஒற்றுமை ஓங்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சில நேரங்களில் வேலை காரணமாக பயணிக்க வேண்டி இருக்கும். தேவைப்படும் சமயங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
பிப்ரவரி மாத பலன்கள்

கடகம்

kadagam

கடக ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 8ஆம் இடத்தில் சுக்ர பகவான் அமர்கிறார். இதன் காரணமாக உங்கள் உடல்நலத்தில் நீங்கள் அதீத அக்கறைகொள்வது அவசியமாகிறது. அதே போல தாய் தந்தை மற்றும் மனைவியின் உடல்நலத்திலும் கவனம் தேவை. பண வரவை பொறுத்தவை சிறப்பாக இருக்கும். ஆகையால் தான தர்மம் செய்து புண்ணியத்தை பெறலாம். உடல்நல பிணியை போக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரபகவானுக்கு வெள்ளைநிற ஆடையை அணிவித்து, விளக்கேற்றி வணங்கி வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

சிம்மம்

simmam

சிம்ம ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் சுக்ர பகவான் அமர்கிறார். இதன் காரணமாக உங்கள் துணையின் மீது நீங்கள் அதீத அக்கறைகொள்வீர்கள். இதுவரை சண்டையிட்டிருந்தாலும் உங்கள் மனைவியின் மீது உங்களுக்கு காதல் வரும். தொழிலை பொறுத்தவரை நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. பத்திரங்களில் கையெழுத்திடும் சமயங்களில் நன்கு படித்து கையெழுத்து போடுவது அவசியம். மனைவியை தவிர மற்ற பெண்களை ஏறெடுத்து பார்க்காமல் இருப்பது நல்லது. சில நேரங்களில் அது உங்களுக்கு சிக்கலை உண்டாகி விடும்.

கன்னி

kanni

கன்னி ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் சுக்ர பகவான் அமர்கிறார். இதன் காரணமாக சில நேரங்களில் தேவை இல்லாத பிரச்சனை வர வாய்ப்புள்ளது. எதிலும் கவனமாக செயல்பட்டு நிதானமாக இருப்பது அவசியம். பணி இடங்களில் தேவை இல்லாமல் அடுத்தவரின் விடயங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம். மருத்துவ செலவுகள் அவ்வப்போது வந்து செல்லும். வாழ்க்கை துணையை அனுசரித்து செல்வது நல்லது. திங்கட்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று அர்ச்சனை செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

துலாம்

thulam

துலாம் ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 5ஆம் இடத்தில் சுக்ர பகவான் அமர்கிறார். இதன் காரணமாக உங்கள் மனதில் அன்பு அதிகரிக்கும். வீட்டில் எல்லோரிடமும் அன்பு பாராட்டுவீர்கள். வாழ்க்கை துணையின் அனுசரணை இருக்கும். பண விஷத்தை பொறுத்த வரை நல்ல வருவாய் இருக்கும். தொழில் செய்வோர், அன்பாக பேசி வாடிக்கையாளர்களை அசத்துவீர்கள்.

விருச்சிகம்

virichigam

விருச்சிக ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 4ஆம் இடத்தில் சுக்ர பகவான் அமர்கிறார். இதன் காரணமாக புதிய பொருட்கள் பலவற்றை வாங்கி வீட்டை அலங்கரிப்பீர்கள். அன்னையின் உடல்நிலையில் அக்கறை தேவை. குழந்தைகள் நற்பெயரை பெற்று தருவார்கள். வாழ்க்கை துணையின் அனுசரிப்பு இருக்கும். சிவபெருமானை வழிபட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
பிப்ரவரி மாத பலன்கள்

தனுசு

dhanusu

தனுசு ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 3ஆம் இடத்தில் சுக்ர பகவான் அமர்கிறார். இதன் காரணமாக நண்பர்களால் உதவி கிடைக்கும். உங்களின் பேச்சு திறமையால் நட்பு வட்டம் பெருக்கும். உடல்நல கோளாறுகள் அவ்வப்போது ஏற்பட்டு சரியாகும். உங்களின் எதிரிகளே அஞ்சும் வகையில் சில துணிச்சலான செயல்களில் ஈடுபடுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து உயரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.

மகரம்

magaram

மகர ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 2ஆம் இடத்தில் சுக்ர பகவான் அமர்கிறார். இதன் காரணமாக வீட்டில் மகிழ்ச்சி பொங்கும் செயல்களை நீங்கள் செய்வீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும். தொழில் செய்யும் இடங்களில் நல்ல ஒத்துழைப்பு இருக்கும். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். ஏதேனும் வாய்ப்பிற்காக காத்திருப்பவர்களுக்கு வாய்ப்பு தேடி வரும். அன்பை வெளிப்படுத்தி மரியாதையை சம்பாதிப்பீர்கள்.

கும்பம்

kumbam

கும்ப ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 1ஆம் இடத்தில் சுக்ர பகவான் அமர்கிறார். இதன் காரணமாக ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உண்ணும் உணவால் சில பிரச்சனைகள் வரலாம். ஆகையால் பாக்கெட் உணவுகள், ரசாயனம் கலந்த உனவுகளை தவிர்ப்பது நல்லது. எதிரிகளால் சில தொல்லைகள் வரலாம். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்கை அம்மனை வழிபட்டு வர பிரச்சனைகள் விலகும்.

மீனம்

meenam

மீன ராசி நண்பர்களை பொறுத்தவரை உங்கள் ராசிக்கு 12ஆம் இடத்தில் சுக்ர பகவான் அமர்கிறார். இதன் காரணமாக சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் வரும். இந்த காலகட்டத்தில் பணவரவு அதிகரிக்கும். ஆகையால் தகுந்த முறையில் பணத்தை முதலீடு செய்வது நல்லது. சிலர் ஆடை ஆபரணங்களை வாங்கி குவிப்பர். சில பிரச்சனைகள் வந்தாலும் அதில் இருந்து எளிதில் விடுபடுவீர்கள்.

ராசி பலன், வார பலன், மாத பலன் என ஜோதிடம் சார்ந்த அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் ஆப் ஐ டவுன்லோட் செய்யுங்கள்.