பிப்ரவரி மாத பலன் – ஒவ்வொரு தேதிக்கும் எண் கணித அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது

astrology

நீங்கள் பிறந்த தேதியை கொண்டு பிப்ரவரி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

1, 10, 19, 28-ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

one

இந்த மாதம் நீங்கள் பூர்வ புண்ணிய பலன்களை அனுபவிப்பீர்கள். உங்கள் வைராக்கியத்தால் வெற்றி பெறுவீர்கள். தெய்வ அனுகூலம் உண்டாகும். இனிமையான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். இரவு நேரப் பயணங்கள் , நீண்ட தொலைவுப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தாயின் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையால் அனைத்து காரியங்களிலும் சாதனை படைப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி இருப்பினும், குழந்தைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையற்ற மருத்துவச் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையால் பணவரவு உண்டாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அவ்வப்போது மனக் குழப்பங்கள் வந்து நீங்கும்.

பரிகாரம்:

ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு மற்றும் ஸ்ரீ கருட பகவான் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

2, 11, 20, 29 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

two

இந்த மாதம் உங்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாகும். பெற்றோர்களின் அன்புக்குப் பாத்திரமாவீர்கள். தெய்வ அருள் உண்டு. குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்ள உகந்த காலமாகும். வீடு, வாகன சேர்க்கை உண்டாகும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. படிக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று பாராட்டினை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து, விட்டுக்கொடுத்துச் சென்றால் விரோதத்தைத் தவிர்க்கலாம். சிறிய அளவில் கடன் வாங்கும் சூழல் உருவாகும் என்பதால் சிக்கனம் தேவை. எதிர்பாரத அதிர்ஷ்டம் உண்டு. குழந்தைகள் நலனில் கவனம் தேவை. குழந்தைகளை அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. தாய் மற்றும் தந்தை வழியில் ஆதாயம் உண்டு. சகோதர சகோதரர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. தேவையற்ற பயம் மற்றும் குழப்பத்தைத் தவிர்க்கவும்.

பரிகாரம்:

ஸ்ரீ சூரிய நாராயணர் வழிபாடு மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

3, 12, 21, 30 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

three

இந்த மாதம் விழிப்பு உணர்வுடன் செயல்பட்டால் அனைத்திலும் வெற்றி பெறலாம். பேச்சில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்த்தல் நல்லது. குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடியுங்கள். கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்துச் செல்வதால் அன்பு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் வெளியூர்ப் பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். தாய் உடல் நலனில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களுடன் கருத்து மோதல் வந்து நீங்கும். வாகனங்கள் பழுதடைந்து செலவு வைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகுமென்றாலும் சிறு செலவினங்களும் உண்டு. தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்ப்பது நல்லது. செலவுகளைக் கட்டுபாட்டில் வைத்திருந்தால், வீண் செலவுகளைத் தவிர்க்கலாம். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. வாழ்க்கை துணைக்காக ஆடம்பர செலவுகள் செய்ய நேரிடும்.

பரிகாரம்:

தட்சிணாமூர்த்தி, அம்பிகை வழிபாடு நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே:
அய்யனார் கோவில் கல் யானை கரும்பு தின்ற உண்மை சம்பவம் !

4, 13, 22, 31 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

four

இந்த மாதம் நீங்கள் தடைகளை படிக்கற்களாக மாற்றி வெற்றி பெறுவீர்கள். எதிலும் தீர சிந்தித்து விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பல வகையில் தனவரவு உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் திருவினையாக்கும். பேச்சில் கவனம் தேவை. குடும்ப விவகாரங்களைப் பெரிதுபடுத்த வேண்டாம். மனதில் தைரியம், உற்சாகம் அதிகமென்பதால் செயல்களில் வீர்யம் அதிகரிக்கும். வீடு, வாகன, நிலங்களின் சேர்க்கை உண்டாகும். தாய் மற்றும் உறவினர்களின் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் முன்னேற்றத்துக்காக திட்டமிட்டுச் செயல்படுவீர்கள். பூர்வீகச் சொத்துகளால் லாபம் உண்டாகும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். கடன் வாங்க முயற்சிப்பவர்களுக்கு கடன் கிடைக்கும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.

பரிகாரம்:

ஸ்ரீ ராகவேந்திரர் மற்றும் ஸ்ரீ விநாயகப்பெருமான் வழிபாடு நன்மை தரும்.

5, 14, 23 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

five

இந்த மாதம் உங்களின் அறிவுத்திறன் வெளிப்படும். உங்கள் பேச்சு அனைவரையும் வசீகரிக்கும். புதிய பொருட்களை வாங்கி வீட்டு வசதிகளை மேம்படுத்துவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகளில் நிதானம் தேவை. எதிரிகள் விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் செயல்திறன் அதிகரிக்கும். காதல் முயற்சிகள் வெற்றி பெறும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் குழப்பம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் சென்றால் அன்பு அதிகரிக்கும். தந்தை வழியில் ஆதரவு உண்டு. தொழில் விஷயமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். வியாபாரம் செய்பவர்கள் பல வகையில் லாபம் பெறுவார்கள்.

பரிகாரம்:

ஸ்ரீ முனீஸ்வரர் வழிபாடு ஸ்ரீ குருபகவான் வழிபாடு நன்மை தரும்.

6, 15, 24 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

six

இந்த மாதம் உங்கள் சொல்லுக்கு மரியாதை அதிகரிக்கும். பலவகையில் பணவரவு உண்டாகும். வாழ்க்கைத்துணையால் பணவரவும் மகிழ்ச்சியும் உண்டாகும். மனதில் தைரியம், உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும், செயற்கரிய காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். வீடு, மனை, வாகனம் வாங்குவதற்கான முயற்சிகளில் சில சிக்கல்கள் வந்து நீங்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. தாய் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையால் அணுகூலம் உண்டு. மற்றவர்களிடம் விரோதம் பாராட்டாமல் விலகிச் செல்வது நல்லது. உத்தியோகம், தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரத்தில் பல வகையில் ஆதாயம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை உண்டாகும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தாய்நாடு வரும் சூழல் உண்டாகும். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டாகும்.

பரிகாரம்:

ஸ்ரீ ஆதிசேஷன் மற்றும் ஸ்ரீ மஹாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

7, 16, 25 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

seven

இந்த மாதம் நீங்கள் விழிப்புடன் செயல்பட்டால் வெற்றி காணலாம். பல வகையில் படிப்பினைகளைப் பெறும் காலம். மற்றவர்களின் சூழ்ச்சிகளை வெல்ல எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உங்கள் பூர்வ புண்ணிய பலத்தாலும், வைராக்கியத்தாலும் எதையும் வெல்லலாம். தெய்வ அனுகூலம் உண்டு. நீங்கள் செய்யும் உதவிகள், மற்றும் தியாகச் செயல்கள் உங்களுக்குப் புண்ணியம் தந்து, உங்களை சோதனைகளிலிருந்து மீட்கும். பொருளாதாரத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. தொழில் நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல நேரிடும். சுயதொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களைத் தவிர்க்கலாம். எதிலும் பேராசையைத் தவிர்ப்பது நல்லது.வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டு. சில அவமானங்கள், சங்கடங்களை சகித்துக்கொண்டால் வெற்றி பெறலாம்.

பரிகாரம்:

ஸ்ரீ விநாயகப்பெருமான் மற்றும் ஸ்ரீ நாகராஜா வழிபாடு நன்மை தரும்.

8, 17, 26 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

eight

இந்த மாதம் உங்களுக்கு மிக அதிர்ஷ்டமானதாகும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெறும். தெய்வ அனுகூலம் உண்டு. குருவின் வழிகாட்டுதல் தங்கள் வாழ்வின் மேன்மைக்கு உதவிகரமாக இருக்கும். ஆன்மிகப் பயணங்கள் அதிகரிக்கும். பல வகையில் பணவரவும், சொத்துச் சேர்க்கையும் உண்டாகும். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்துச் செல்வது நல்லது. வாழ்க்கைத்துணையால் தவிர்க்க முடியாத செலவினங்கள் உண்டு என்பதால் கவனம் தேவை. தொழில், உத்தியோகம் மற்றும் வியாபார விஷயமாக வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மூத்த சகோதரர்களிடம் கவனம் தேவை. மற்றவர்களின் ஆசை வார்த்தைகளைக் கேட்டு செயல்பட வேண்டாம்.

பரிகாரம்:

ஶ்ரீவிநாயகர் வழிபாடு மற்றும் ஶ்ரீஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.

9, 18, 27 ம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

nine

இந்த மாதம் உங்களுக்கு மிகவும் யோகமான காலம். பல வகைகளிலும் அதிர்ஷ்டம் உண்டாகும். பனவரவு அதிகரிக்கும். மனதில் தைரியம், உற்சாகம் அதிகரித்து தன்னம்பிக்கை மிகுந்து காணப்படும். எந்தச் சூழ்நிலையையும் எதிர்த்து நின்று வெற்றி பெறுவீர்கள். தாய் வழியில் ஆதாயம் உண்டு. தாய் மற்று உறவினர்களால் மகிழ்ச்சி உண்டு. வாகனங்களில் நீண்டதூரப் பயணம், இரவுநேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனத்துக்கு உரிய ஆவணங்களை பத்திரமாக வைத்திருப்பது நல்லது. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தெய்வ அனுகூலம் உண்டு. எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். தந்தை உடல் நலனில் கவனம் தேவை. தொழில், உத்தியோகத்தில் வளர்ச்சி உண்டு. வாழ்க்கைத் துணையால் செலவுகள் உண்டு.

பரிகாரம்:

ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் நாகதேவதை வழிபாடு நன்மை தரும்.

எண் கணித பலன்கள், ஜோதிட பலன்கள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை அனைத்தையும் ஒரே இடத்தில பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.