சுக்ரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Sukran peyarchi astrology

நவகிரகங்களில் “களஸ்திரகாரகனாக” போற்றப்படுவர் “சுக்கிர பகவான்” ஆவர். ஜோதிடத்தில் ஒரு மனிதனுக்கு இல்லற சுகத்தையும், பொன் பொருள் சேர்க்கையையும், கலைகளில் ஈடுபாடு மற்றும் எல்லாவகையான இன்பங்களையும் அள்ளித் தருபவராக கருதப்படும் “சுக்கிர பகவான்” ஜூன் மாதம் 9 ஆம் தேதி மதியம் 2.54 மணியளவில் “மிதுன” ராசியிலிருந்து “கடக” ராசிக்கு பெயர்ச்சியாகியிருக்கிறார். அப்படியான சுக்கிரன் கிரக பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படக் கூடிய பலன்களை இங்கு காணலாம்.

மேஷம்

mesham

மேஷ ராசிக்கு நான்காம் ராசியான கடக ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியாவதால் இந்த மாதம் உங்களுக்கு சராசரியான தனவரவுகளே இருக்கும். வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்குவது சற்று காலதாமதமாகலாம். வயதில் மூத்தவர்களிடம் எதிலும் அனுசரித்து செல்வதே நல்லது. குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சற்று உடல் நிலை பாதிக்கக்கூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய தொழில், வியாபார முயற்சிகளில் கடின உழைப்பின் மூலமே ஓரளவு லாபம் ஈட்ட முடியும்.

ரிஷபம்

rishabam

ரிஷப ராசியினருக்கு மூன்றாம் ராசியான கடகத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சியடைந்துள்ளதால் சகோதர, சகோதரி வழியில் சுபிட்சமான உறவு ஏற்படும். அவர்களால் தன லாபம் உண்டாவதற்கான வாய்ப்பும் உண்டு. உடல் நிலை நன்றாக இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கும், அரசாங்கத்தில் உயர் பதவிகள் பெறக்கூடிய யோகம் உண்டாகும். குடும்ப பெண்களுக்கு பொன் ஆபரண சேர்க்கை ஏற்படும். புதிய வீடு, வாகனம் , அசையா சொத்துகள் வாங்கி குவிப்பீர்கள்.

மிதுனம்

midhunam

மிதுன ராசியினருக்கு இரண்டாமிடமாகிய கடக ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியடைந்திருப்பதால் தாய் வழியில் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவு ஏற்படும். கொடுக்கல், வாங்கல் சுமூகமாக இருக்கும். மாணவர்கள் கடினமாக முயற்சித்தால் மட்டுமே கல்வியில் சிறக்க முடியம். வெளிநபர்களிடம் பணம் சம்பந்தமான விஷயங்களில் சிறிது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கலைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பொருளும் புகழும் ஈட்டக்கூடிய சூழல் ஏற்படும்.

Advertisement

கடகம்

kadagam

கடக ராசியினருக்கு அந்த ராசியிலேயே சுக்கிர பகவான் உச்சமடைவதால். உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். திடீர் பணவரவுகள் ஏற்படும். நெடு நாட்களாக திருமணம் தள்ளிப்போன ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் கைகூடும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்களுக்கு விரும்பிய படியான வேலை கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள் பாராட்டுகளும் விருதுகளும் பெறக்கூடிய அமைப்பு ஏற்படும். வெளிநாடுகளுக்கு பயணிக்க கூடிய யோகம் ஏற்படும்.

சிம்மம்

simmam

சிம்ம ராசியினருக்கு பனிரெண்டாம் வீடான கடக ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சிய டைந்திருப்பதால் நீங்கள் எந்த ஒரு விஷயத்திலும் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும். ஒரு சிலர் ஆன்மிக தலங்களுக்கு தீர்த்த யாத்திரை மேற்கொள்வீர்கள்.சமூகத்தில் பெரிய நிலையில் இருப்பவர்களின் தொடர்பால் உங்களுக்கு பல நன்மைகள் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாங்கிய கடன்கள் அனைத்தையும் வட்டியுடன் கட்டி முடிப்பீர்கள்.

கன்னி

kanni

கன்னி ராசியினருக்கு பதினொன்றாம் இடமான கடக ராசிக்கு சுக்கிரன் பெயர்ந்திருப்பதால் உடலாரோக்கியம் ஓரளவு ஆறாக இருக்கும். குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பணியிடங்களில் உங்களுக்கு ஆகாத சிலர் உங்களுக்கு எதிராக சதி செய்யக்கூடும் என்பதால் எதிலும் சற்றும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் தொழில் கூட்டாளிகளின் சிறந்த செயல்பாடுகளினால் பெரும் தன லாபத்தை ஈட்டுவீர்கள்.

துலாம்

thulam

துலாம் ராசியினருக்கு பத்தாவது ராசியான கடக ராசிக்கு சுக்கிரன் பெயர்ந்திருப்பதால் பிறந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். புதிய வீடு, வாகனம் மாற்று ஏனைய ஆடம்பர பொருட்களை வாங்கும் அமைப்பு ஏற்படும். சகோதர வழி உறவுகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிறருடனான பணம் சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. அரசியல் வாழ்வில் இருப்போர்கள் தங்களின் வாக்குறுதியை நிறைவேற்றும் சூழல் ஏற்படுவதால், மக்களின் மதிப்பும் செல்வாக்கும் ஏற்படும்.

விருச்சிகம்

virichigam

விருச்சிக ராசியினருக்கு ஒன்பதாவது ராசியான கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாவதால் எந்த ஒரு வேலையிலும் சற்று அலைச்சல் தாமதத்திற்கு பின்பே வெற்றி கிட்டும். பெண்களுக்கு சிறிது ஆரோக்கிய குறைவு ஏற்படும். பணியிடங்களில் பிறரிடம் தேவையற்ற விஆதங்களில் ஈ டுபடாமல் இருப்பது நல்லது. கலைஞர்கள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது. பண வரவுகள் நன்றாகவே இருக்கும். அந்நிய நபர்களால் நன்மைகள் ஏற்படும்.

தனுசு

dhanusu

தனுசு ராசியினருக்கு எட்டாவது ராசியான கடகத்திற்கு சுக்கிரன் பெயர்ந்திருப்பதால் ஒரு சிலர் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளால் அவதியுறக்கூடும். தேவையற்ற பயணங்களால் அலைச்சலும் பொருள் நஷ்டமும் ஏற்படும். மாணவர்கள் சற்று கடின முயற்சியை மேற்கொண்டால் கல்வியில் சிறக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றங்கள் கிடைக்கும். உறவினர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.

மகரம்

magaram

மகர ராசியினருக்கு ஏழாவது ராசியான கடக ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களுடன் சண்டைகள் ஏற்படலாம். சிறிய அளவிலான உடல்நல குறைபாடுகளால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். வீட்டில் திருமண வயதிலுள்ள பெண்களுக்கு திருமணம் கைகூடும். வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமாக இருப்பது அவசியம். விவசாயத் தொழிலில் இ ருப்போர்களுக்கு ஓரளவு லாபம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிறிது தடங்கல்களுக்கு பின் வெற்றி உண்டாகும்.

திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

கும்பம்

kumbam

கும்ப ராசியினருக்கு ஆறாவது ராசியான கடகத்திற்கு சுக்கிரன் பெயர்ந்திருப்பதால் நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும். உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் வியாபாரங்களில் உள்ளவர்கள் அதில் நல்ல லாபம் கிடைத்து மேலும் பல புதிய தொழில் நிறுவன ங்களை தொடங்கும் சூழ்நிலை உண்டாகும். ஒரு சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும், அதை அடைக்க கூடிய பணஉதவிகளும் சீக்கிரத்திலேயே கிட்டும்.

மீனம்

meenam

மீன ராசியினருக்கு ஐந்தாவது ராசியான உடனிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மை தரும். உங்கள் உடலும் மனம் ஆரோக்கியத்துடன் உற்சாகமாக இருக்கும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று அதிகமாக இருந்தாலும், அதற்கேற்ற பலன் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் ஏற்பட இடமுண்டு. வீட்டில் சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படும்.