- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுக்கிர ஹோரை சுக்கிர வழிபாடு

சுக்கிர ஹோரை சுக்கிர வழிபாடு

- Advertisement -

போராட்டங்களும், இழுபறிகளும் நிறைந்த இந்த வாழ்க்கையில் எல்லோரையும் முண்டியடித்துக் கொண்டு ஜெயிப்பது என்பது பலருக்கும் கடினமாகத் தான் இருக்கும். “போர்ன் வித் சில்வர் ஸ்பூன்” என்பார்கள். பிறக்கும் பொழுதே செல்வந்தர்களாக பிறப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள், ஆனால் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து செல்வந்தராக உயர்வது என்பது மதிப்பு மிக்கது! இந்த மதிப்பை தேடித் தரக் கூடியது சுக்கிர வழிபாடு ஆகும். சுக்கிர ஹோரையில் சுக்கிர பகவான் வழிபாடு செய்வதால் கிடைக்கக் கூடிய பலன்கள் என்னென்ன? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

ஒரு மனிதனுடைய ஜாதகத்தில் நவகிரகங்களும் எவ்வளவு மோசமான இடத்தில் அமர்ந்திருந்தாலும், சுக்கிரன் சரியான நிலையில் இருந்தால் எப்பேர்ப்பட்ட வறுமை நிலையில் இருந்தும், மிகப்பெரிய செல்வந்தராக உயர்ந்து விடலாம். சுக்கிரன் அழகு, அன்பு, செல்வம், படைப்பாற்றல் ஆகியவற்றுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். இவரை வழிபட்டால் நல்ல அழகும், அன்பான உள்ளமும், நிறை செல்வமும், படைப்பாற்றல் திறனும் வளரும். ஒரு மனிதனுக்கு இதைத் தவிர வேறு என்ன வேணும்?

- Advertisement -

சுக்கிர ஹோரையில் சுக்கிர பகவானை வழிபட்டு வந்தால் சகல விதமான சௌபாக்கியங்களும் நம்மை தேடி வரும். சுக்கிர பகவானுக்கு உகந்த கிழமை வெள்ளி. வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் நவகிரக சன்னதிக்கு சென்று அங்குள்ள சுக்கிர பகவானுக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, வெள்ளை நிற நைவேத்திய பொருட்களை தயார் செய்து படைத்து, விளக்கு ஏற்றி வழிபடுங்கள். பின் அங்கு வரும் பக்தர்களுக்கு அதை தானம் செய்யுங்கள்.

கீழ் வரும் இந்த சுக்கிர மந்திரத்தை சுக்கிர ஹோரையில் வெள்ளிக்கிழமையில் 21 முறை உச்சரித்து மனதார வறுமை நீங்கி, செல்வம் உயர பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும். எவ்வளவு கஷ்ட நிலையில் இருந்தாலும், பொருளாதார ரீதியாக நீங்கள் முன்னேற வேண்டும் என்று நினைத்தால் இவ்வழிபாட்டை மேற்கொண்டு சுக்கிர அருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -

சுக்கிர பகவான் மந்திரம்:

சுக்கிரமூர்த்தி சுப சுக மீவாய்,
வக்ரமின்றி வரமிகத் தருவாய்,
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே,
அள்ளிக் கொடுப்பாய், அடியார்க்கருளே!!!

வெள்ளிக்கிழமையில் சாதாரணமாக நீங்கள் பூஜைக்கு தயார் செய்வது போல தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் சுக்கிர பகவானுடைய சாந்த ஸ்வரூப படம் ஒன்றை வைத்து வெள்ளை நிறத்தில் தயிர் சாதம், தேங்காய் சாதம் போன்ற அன்ன பிரசாதங்களை தயார் செய்து வைத்து படைக்க வேண்டும். சுக்கிர பகவானுக்கு வெள்ளை நிற மணம் மிகுந்த மல்லிகை மலர்களை சாற்றுங்கள். பின்னர் ஒரு வெள்ளி கிண்ணத்தில் காய்ச்சிய பசும்பால் ஊற்றி வையுங்கள். பின்னர் மேற்கூறிய மந்திரத்தை உச்சரித்து, சுக்கிர பகவானை வழிபடுங்கள்.

இதையும் படிக்கலாமே:
மார்ச் மாதம் முழுவதும் கஷ்டமில்லாமல் வாழ பரிகாரம்

இப்படி தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும், நீங்கள் சுக்கிர ஓரையில் சுக்கிர பகவான் வழிபாடு செய்து வந்தால், சிறுக சிறுக உங்களுடைய உழைப்பால் நீங்கள் முன்னேற்றம் அடைந்து, உங்களுடைய திறன் அதிகரித்து, செல்வங்கள் உயர ஆரம்பிக்கும். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் கஷ்டப்படுபவர்களுக்கும், இல்லாத ஏழை எளிய மக்களுக்கும் வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய சித்திரன்னங்களை தயாரித்து தானம் செய்யுங்கள். வெள்ளை நிற வஸ்திரம் போட்டுக் கொள்ளுங்கள். அது போல வெள்ளியால் ஆன மோதிரம் அணிய, சுக்கிர அருள் உண்டாகும். வெள்ளி, வைர கற்கள் போன்றவை சுக்கிரனுக்கு உகந்தவை. வெள்ளியால் ஆன சாவிக் கொத்தை பயன்படுத்துங்கள், தொழில் முன்னேற்றம் உண்டாகும்.

சற்று முன்