ஒவ்வொருவரும் வாழ்க்கையில் நாளெல்லாம் பாடுபடுவது நல்ல நிலைமையில் வாழ வேண்டும் என்பதற்கு தான். இன்றைய காலக்கட்டத்தில் நல்ல நிலைமையில் வாழ வேண்டும் என்றால் அதற்கு அடித்தளமாகவும், ஆதாரமாகவும் விளங்குவது பணம் தான். அந்த பணத்தை ஈட்டத்தான் நாம் இத்தனை பாடும் படுகிறோம். இப்படி பாடுபட்டால் மட்டும் பணம் நம்மிடம் தங்கி விடுகிறதா? என்றால் அதுவும் கிடையாது. அப்படியானால் என்ன செய்வது அதற்கான ஒரு எளிய தீபமுறையில் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
சுக்கிர யோகம் பெற ஏற்ற வேண்டிய தீபம்
இந்த தீபத்தை வெள்ளிக்கிழமையில் தான் ஏற்ற வேண்டும். அதுவும் நாளைய தினம் அமாவாசையுடன் கூடிய வெள்ளிக்கிழமை. இதை சுக்கிர வார அம்மாவாசை என்று அழைப்பார்கள். இந்த நாளில் நாம் ஏற்றக் கூடிய ஒரு தீபமானது நம்முடைய வாழ்க்கையில் செல்வ வளத்தை பல மடங்கு மாற்றிவிடும் என்று சொல்ல ப்படுகிறது. அது மட்டும் இன்றி பண மழையை பொழியக் கூடிய சுக்கிர பகவானின் அருளை நமக்கு முழுவதுமாக பெற்று தரக்கூடியதாகவும் அமைகிறது.
நாளைய தினம் அமாவாசையில் நிறைந்திருப்பதால் காலை நேரத்தில் இந்த தீப வழிபாடை தவிர்த்து விடுவது நல்லது ஏனெனில் அமாவாசை நாளில் முதலில் நாம் முன்னோர் வழிபாட்டை தான் செய்ய வேண்டும். அதன் பிறகு தான் தெய்வ வழிபாட்டையே செய்ய வேண்டும். ஆகையால் காலையில் வீட்டில் அமாவாசை வழிபாடை முடித்துக் கொண்டு மாலை நேரத்தில் இந்த தீபத்தை ஏற்றலாம்.
அதற்கு மாலை 6 மணிக்கு மேல் பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு நல்ல வாசம் மிக்க மலர்களை சூட்டி தீபங்களை ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு சிறிய தட்டு எடுத்துக் கொள்ளுங்கள் அதை சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டில் சிறிதளவு வெள்ளை மொச்சை பயிரை போட வேண்டும். இதை நீங்கள் வீட்டிலிருந்து எடுக்கக் கூடாது புதிதாக கடையிலிருந்து வாங்கி வந்து தான் வைக்க வேண்டும். உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு இனிப்பை நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள்.
இந்த வெள்ளை மூச்சை நாளைய தினம் வாங்குவதே உங்களுக்கு அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் இந்த வெள்ளை மொச்சை பரப்பிய தட்டின் மேல் ஒரு அகல் விளக்கை வையுங்கள் அதில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து விட்டு மகாலட்சுமி தாயார் சுக்கிர பகவான் இவர்களை மனதார நினைத்துக் கொண்டு உங்களின் பணப்பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த நேரத்தில் உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமி தாயார் ஸ்தோத்திரம் ஸ்தோத்திர பகவான் மந்திரம் எது தெரிந்தாலும் சொல்லலாம். அதன் பிறகு பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த மொச்சை பயிரை அன்றைய நாள் முழுவதும் பூஜையறையில் இருக்கட்டும்.
மறுநாள் காலையில் இந்த பயிரை எடுத்து ஓடும் நேரிலோ அல்லது ஏதேனும் ஒரு மரத்தின் அடியிலோ போட்டு விட்டு விடுங்கள். இந்த முறையில் நாளை நீங்கள் ஏற்றக்கூடிய தீபமானது மகாலட்சுமி தாயார் சுக்கிர பகவான் இருவரின் அருளையும் பரிபூரணமாக பெற்றுத் தந்து உங்களின் பணப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து பணவரவை அதிகரித்து தரும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:பண வரவு அதிகரிக்க வியாழக்கிழமை செய்ய வேண்டிய பரிகாரம்
எந்த ஒரு காரியத்தையும் நம்பிக்கையுடன் செய்யும் பொழுது அதற்கான பலனை நிச்சயம் பெறலாம். இந்த தீப வழிபாட்டையும் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கை உடன் செய்து பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.