சுமங்கலிப் பெண்கள் மொட்டை அடிக்கலாமா? மொட்டை அடிப்பதால் உண்டாகும் நன்மை மற்றும் தீமைகள் என்னென்ன?

mottai
- Advertisement -

பெண்கள் என்றாலே அழகு என்று பொருள்படும். ஒரு பெண் கருப்பாக இருந்தாலும், நிறமாக இருந்தாலும் அது அழகுதான். வீட்டில் ஒரு பெண் இருந்தால் மட்டுமே அந்த வீடு பொலிவுடன் காட்சி அளிக்கும். எந்த ஒரு நல்ல காரியம் தொடங்குவதாக இருந்தாலும் பெண்களை முன்னிறுத்தி தான் செய்யப்படுகிறது. லட்சுமி கடாட்சம் பெண்களை வைத்து தான் இருக்கிறது. என்னதான் ஆண்கள் அனைத்து வேலைகளையும் பெண்களுக்கு ஈடாக செய்தாலும் ஒரு வீட்டில் ஒரு பெண் இல்லை என்றால் அந்த வீடு வீடாக இருப்பதில்லை. இவ்வாறு பெண்களுக்கான சிறப்புகள் பல இருக்கின்றன. ஒரு பெண் பார்ப்பதற்கு மகாலட்சுமி போல இருக்கிறாள் என்று பலரும் சொல்வதுண்டு. இவ்வாறான பெண்கள் தலையில் முடி இல்லாமல் இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இருப்பதில்லை. தங்களின் அழகை இழந்து இப்படி மொட்டையடிக்கும் வேண்டுதலை செய்வது நன்மையா? தீமையா? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

women1

மனிதன் உயிர்வாழ அவசியமாக இருப்பது நிலம், நீர், காற்று இவை மூன்றும் தான். இதில் நீரைக் குறிக்கும் ஆறுகள் பல பூமியில் பாய்ந்து ஓடுகின்றன. இவைகளுக்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர்களை பார்த்தோம் என்றாலும் அவை கங்கா, யமுனா என்று பெண்களின் பெயர்களாகவே இருக்கின்றன. தெய்வங்களிலும் அதிகமான தெய்வங்கள் பெண் தெய்வங்களாக தான் இருக்கின்றன. நம்மைத் தாங்கி நிற்கும் இந்த பூமியையும் ஒரு பெண்ணாகத்தான் குறிப்பிடுகிறோம்.

- Advertisement -

இவ்வாறு போற்றப்படும் பெண்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். அவ்வாறு தனக்கு மிகவும் வேண்டியவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவர்கள் முதலில் முறையிடுவது கடவுளிடம் தான். அப்படி கடவுளை வேண்டி எனக்கானவர்கள் என்னிடம் நல்லபடியாக திரும்பி வர எனது முடியை காணிக்கையாக தருகிறேன் என்றும் வேண்டிக் கொள்கின்றனர்.

combing-hair

சில காலங்களுக்கு முன்னர் யாரேனும் தவறுசெய்து விட்டால் அவர்களுக்குத் தகுந்த தண்டனையாக மொட்டை அடித்து கரும்புள்ளி குத்தப்படும். இவ்வாறு செய்த பின்னர் அவர்கள் அவமானம் தாங்காமல் தனது உயிரையும் மாய்த்தள்ளனர். இவ்வாறு தலைமுடி என்பது ஒருவரின் மானம் சம்மந்தப்பட்ட விஷயமாகும். தலை முடி இல்லாமல் இருப்பது அலங்கோலமாக இருப்பதைக் குறிக்கிறது.

- Advertisement -

அதிலும் சுமங்கலிப் பெண்களுக்கு கூந்தல் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு வீட்டில் லட்சுமி கடாட்சம் அந்த வீட்டில் இருக்கும் பெண்ணை வைத்து தான் இருக்கிறது. அவர்கள் தங்களை எப்படி அழகாக வைத்துக் கொள்கிறார்களோ அந்த அளவிற்கு லட்சுமி தேவி நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்கிறாள். ஆனால் இந்த பெண்கள் மொட்டை அடித்துக் கொள்வது என்பது அலங்கோல தன்மையாகும். இப்படி அவர்கள் அதிக காரணத்திற்காக அடிக்கடி மொட்டை அடிப்பதை தவிர்க்கவேண்டும்.

ancient women

அதாவது நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேற இதுமாதிரி வேண்டுதலை பெண்கள் மேற்கொள்ளக்கூடாது. தனது உயிருக்கும் மேலான கணவன் மற்றும் குழந்தைகளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதனை சரி செய்யவே முடியாது என்ற நிலைமை வந்தால் மட்டுமே பெண்கள் இவ்வாறான வேண்டுதலை மேற்கொள்ள வேண்டும். அதனை தவிர்த்து நினைக்கும் போதெல்லாம் மொட்டை அடித்துக்கொள்வது அவர்கள் வீட்டின் ஐஸ்வர்யத்தையும், அதிர்ஷ்டத்தையும் தான் குறைக்கிறது.

- Advertisement -