வெயில் காலத்தில் கூந்தல் உதிர்வதை தடுப்பது எப்படி? கோடை கால எண்ணெய் இப்படி தயாரித்தால் முடி அடர்த்தியா வளருமே எதுக்கு கவலைப் படனும்?

hair-coconut-oil
- Advertisement -

கோடை காலம் வந்துவிட்டாலே பல பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்கும் அதிலும் குறிப்பாக தலைமுடி உதிர்தல் பிரச்சனை வேகமாக நிகழும். எல்லா சீசன்களிலும் ஒரே மாதிரியான எண்ணெயை பயன்படுத்தாமல் சீசனுக்கு ஏற்றார் போல எண்ணெயை தயாரித்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை வெகுவாக கட்டுப்படும். இதனால் முடி அடர்த்தியாக வளரவும் துவங்கும். அந்த வகையில் கோடை காலத்தில் ஏற்ற எண்ணெய் எது? அதை எப்படி சுலபமாக வீட்டிலேயே தயார் செய்வது? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாகவே இப்பொழுது தலைக்கு எண்ணெய் தேய்ப்பது என்பது வெகுவாக குறைந்து வருகிறது. அதுவும் கோடை காலத்தில் எண்ணெய் தேய்க்கவில்லை என்றால் அவ்வளவுதான், தலைமுடியானது மிகுந்த வறட்சியுற்று முடி உடைதல் அதிகமாக ஏற்படும். வாரம் ஒரு முறையாவது எண்ணெய் குளியல் செய்து வந்தால் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கலாம் என்பது நம்முடைய முன்னோர்கள் சொல்லித் தந்த ஒன்று ஆனால் அதை யாரும் இப்பொழுது கடைப்பிடிப்பது கிடையாது.

- Advertisement -

கோடை காலத்தில் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து உஷ்ணத்தை தணிக்க கூடிய இந்த பாட்டி காலத்து மூலிகை எண்ணெயை வீட்டில் எப்படி தயாரிக்கப் போகிறோம் என்பதை காணலாம் வாங்க!

முதலில் 50ml அளவிற்கு தேங்காய் எண்ணெயை செக்கில் ஆட்டியதாக பார்த்து ஆர்கானிக் ஸ்டோர்களில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை லேசாக இரும்பு சட்டியில் ஊற்றி காய்ச்சுங்கள். எண்ணெய் காயும் பொழுது கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவிற்கு பிரஷ் ஆக சேர்த்து கொள்ளுங்கள். ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து நாலு செம்பருத்தி பூக்களை போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் சூட்டிலேயே கருவேப்பிலை மற்றும் செம்பருத்தியின் எசன்ஸ் எண்ணெயில் இறங்கும். எண்ணெய் நன்கு குளிர்ந்து ஆறியதும் அதனை ஒரு பாட்டில் அல்லது டப்பாவில் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். இதை தினமும் நீங்கள் தலைக்கு தேய்க்க வேண்டும். வாரம் இரண்டு முறை தலைக்கு தேய்த்த பிறகு மறுநாள் நீங்கள் முடியை அலச வேண்டும். ஒரு சிறிய கப்பில் எண்ணெயை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். தலையின் மண்டை ஓட்டு பகுதியில் இருந்து ஆரம்பித்து நுனி முடி வரை வரை எல்லா இடங்களிலும் கைகளால் மசாஜ் செய்தபடி தேய்த்துக் கொடுங்கள். நகம் படாமல் கைகளைக் கொண்டு நன்கு சொரிந்து மசாஜ் செய்யுங்கள்.

மசாஜ் செய்த பிறகு ஒரு முறை தலையை முட்டி கால் வரை கீழே குனிந்து எந்திரியுங்கள். இதனால் தலைக்கு சரியான ரத்த ஓட்டம் சென்று தலைமுடியின் ரத்த ஓட்டம் சீராகும். ரத்த ஓட்டம் இல்லாமல் இருந்தாலும் தலை முடி பிரச்சனை அதிகரிக்கும். இவ்வாறு குனிந்து எழுவதால் தலைக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும். மேலும் மசாஜ் செய்வதால் முடியின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
நான் மட்டும் ஏன் இவ்வளவு கருப்பா இருக்கேன்னு இதுவரை நீங்க ஃபீல் பண்ணி இருக்கீங்களா? இந்த டிப்ஸ் தெரிஞ்சா இனிமே அந்தக் கவலையே இருக்காது. நீங்க தான் அழகில் குயின்.

மாதம் ஒருமுறை இந்த எண்ணெயை பிரஷ்ஷாக செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பல்வேறு மூலிகைகளையும் சேர்த்து செய்யலாம் ஆனால் கோடை காலத்துக்கு இதுவே போதுமானது. உச்சந்தலையில் அழுக்கை தங்க விடாதீர்கள். வாரம் இரண்டு முறை இந்த எண்ணெயை தடவிய மறுநாள் தலைக்கு அலசி பாருங்கள், கண்டிப்பாக கோடை காலத்திலும் உங்க முடி சூப்பரா வளரும்.

- Advertisement -