வறண்ட சருமம் உள்ளவர்கள், வெயில் தொல்லையால் சரும பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்க வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன்பு இதை செய்து விட்டு கிளம்பலாமே!

kadalai-maavu-itching
- Advertisement -

அடிக்கிற வெயிலுக்கு பலரும் ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றை வாங்க தவிக்கின்றனர். இன்னும் மூன்று மாதத்திற்கு அடித்து வெளுத்து வாங்க இருக்கும் இந்த கோடை காலத்தில் வெயிலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நிறைய தண்ணீர் பருக வேண்டும். அது மட்டுமல்லாமல் உடலை எப்போதும் உஷ்ணத்தில் இருந்து பாதுகாத்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள தினமும் காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய ஒரு சிறு குறிப்பு தான் இது! இதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

வெயில் காலம் ஆரம்பித்து விட்டாலே வியர்க்குரு மட்டுமல்லாமல் மற்ற சில சரும பாதிப்புகளும் நம்மை ஆட்கொள்ள துவங்கிவிடும். கூடுமானவரை வெயில் காலங்களில் இறுக்கமான உடைகளை அணிவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். சற்று தளர்ந்த ஆடைகளையும், காற்று புகும் படியான ஆடைகளையும் தேர்ந்தெடுத்து அணிய வேண்டும். காற்று உள்ளே நுழைய முடியாதபடி இருக்கும் லெகின்ஸ் போன்ற உடைகளை பெண்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இல்லை எனில் இந்த வெயில் காலத்தை சமாளிப்பது கஷ்டம் ஆகிவிடும்.

- Advertisement -

குறிப்பாக பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை 50 கிலோ எடை உள்ளவர்கள் 3 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். உங்கள் எடைக்கு தகுந்தவாறு நீங்கள் தண்ணீரை அதிகம் பருகினால் தான் உடல் உஷ்ணத்தை கிரகித்துக் கொள்ளும். வறண்ட சருமம் கொண்டவர்கள் மற்றும் வெயிலினால் கருத்த தேகம் உடையவர்கள் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக இந்த பேக் போட்டு பின்னர் குளிக்க செல்லுங்கள்.

இளநீரில் இருக்கும் சத்துக்கள் நீர்க்கடுப்பு, சிறுநீரக தொற்றுக்கள் ஏற்படாமல் பாதுகாக்கும் என்பதால் தினமும் ஒரு இளநீர் குடிப்பது ஆரோக்கியம் நல்கும். இளநீர் குடிப்பது மட்டும் அல்லாமல் அதிலிருந்து கொஞ்சம் இளநீரை எடுத்து அதில் கடலை மாவு ஒரு டீஸ்பூன், தயிர் அரை டீஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதை அப்படியே முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

குறைந்தது பத்திலிருந்து, பதினைந்து நிமிடத்திற்கு அப்படியே உலர விட்டு பின்பு குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்பினால் எவ்வளவு வறண்ட சருமம் கொண்டவர்களும் அன்றைய நாள் முழுவதும் ஈரப்பதத்துடன் இருப்பீர்கள். அது மட்டுமல்லாமல் வெயிலினால் கருத்துப் போன சருமம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். இதை தினமும் தடவுவதால் சரும பாதிப்புகள், வெயில் தாகத்தினால் ஏற்படக்கூடிய தொந்தரவுகள் எதுவும் நம்மை அண்டாமல் இருக்கும்.

வெயிலுக்கு தயிராக எடுத்துக் கொள்வதை விட மாறாக மோராக அதிகம் எடுத்துக் கொள்வது வெயில் காலத்திற்கு சிறந்த பலன்களைக் கொடுக்கக் கூடிய அற்புத பானமாக இருக்கும். தயிரை எதுவும் சேர்க்காமல் நன்கு நீர்க்க கரைத்து குடித்துக் கொண்டே இருங்கள். வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி முகத்தை தண்ணீரால் அலம்பி கொண்டே இருக்க வேண்டும். அதிக அளவு சோப்பு போடுவதை தவிர்த்து கடலைமாவு, பயத்தமாவு போன்ற இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பொருட்களை கொண்டு முகத்தை அலம்புவது நல்லது. வெயிலுக்காக ஜில்லென்று குளிர் பானங்கள் பருகினால் அது உஷ்ணத்தை மேலும் அதிகரிக்குமே தவிர குறைக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -