வெயிலின் தாக்கத்திலிருந்து எவ்வாறு சருமத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும், அதன் அவசியம் பற்றியும் தெரிந்து கொள்வோமா?

face6
- Advertisement -

புற ஊதா கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம், ஏனெனில் அவை சருமத்தின் இயல்பான பளபளப்பை இழக்கச் செய்கின்றனபலருக்கும், தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அந்த அழகை எப்படி பெறுவது என்பது பற்றிய விஷயங்கள் தெரியாது. சிலர் இன்ஸ்டண்ட்டாக அழகாக வேண்டும் என்று க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த க்ரீம்கள் முழுதும் கெமிக்கல்கள் நிறைந்துள்ளதால் சிறிது நாட்களுக்கு முகம் பொலிவடைவது போல தோற்றமளித்தாலும் கூட, நாளடைவில் உங்களுக்கு வேறு சில பிரச்சனைகளை அளிக்கும் அல்லது சருமம் மேலும் கருப்பாகிவிடும். எனது இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து சருமத்தை எவ்வாறு காத்துக் கொள்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

என்றைக்குமே இயற்கையான முறையில் அழகை பெருவது தான் சிறந்த வழியாகும். இயற்கை முறையில் நீங்கள் அழகை பெறுவது என்பது சற்று தாமதமானதாக இருந்தாலும் கூட, உங்களுக்கு அது ஒரு நிரந்தர தீர்வாக அமையும். இதற்காக நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு காண்போம். உங்கள் சருமத்தை நீங்கள் ஹைட்ரேட்டாக வைத்திருக்கவில்லை என்றால் அது உங்கள் நிறத்தை வறட்சியாக்கும். மேலும் வயதான கோடுகள் மற்றும் சுருக்கங்கள் போன்ற ஆரம்ப அறிகுறிகளுக்கும் அது வழிவகுக்கும்.

- Advertisement -

காலையிலும், இரவிலும் சருமத்தை ஹைட்ரேட் செய்வது சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கும். ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக்கொண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவி வந்தால் சருமம் மென்மையாகும். வறண்ட சருமம் இருப்பவர்கள் பசும் பாலை தினமும் இரவு முகத்திற்கு தடவி வர முகம் எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருக்கும்.

உங்கள் சருமத்திற்கு திறம்பட சிகிச்சையளிக்கவும், ஆரோக்கியமான பளபளப்பை அடையவும், உங்கள் தோல் என்ன வகை என்பதை அறிந்து கொள்வது அவசியம். எண்ணெய் சருமமா, உலர் சருமமா அல்லது கலவையா என தெரிந்துகொள்வது அவசியம். இது உங்கள் தோல் வகைக்கு எந்த வகையான தோல் பராமரிப்பு பொருட்கள் பொருந்தும் என்பதைப் புரிந்து கொள்ள உதவும்.

- Advertisement -

அழகை பேணிக்காப்பதில் கடலை மாவு, முல்தானி மெட்டி முக்கிய பங்கு வகிக்கிறது. பொலிவிழந்த சருமத்தை இளைமையூட்ட 2 ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும். பின்னர் முகத்தில் நன்றாக தடவி ஊற விடவும், நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளிச் என தோன்றும்.

உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்ள ஒரு நல்ல டோனரை நீங்கள் கொண்டிருப்பது அவசியம். உங்கள் சருமத்தை சுத்தப்படுத்திய பிறகு, ஒரு டோனரைப் பயன்படுத்தி உங்கள் சருமத்தை ஈரப்படுத்தவும். இது சருமத்தின் Ph அளவை பராமரிக்கவும், முகத்தில் இருக்கும் சிறு துளைகளை குறைக்கவும் இது உதவும். குளிக்கும் போது கடலை மாவு பூசி குளித்தால் முகம் வழுவழுப்பாகும். சுருக்கம் ஏற்படாது. இளமையாக காட்சியளிக்கலாம். 2 ஸ்பூன் கடலை மாவுடன், 2 ஸ்பூன் ரோஸ்வாட்டர், 4 ஸ்பூன் பால் சேர்த்து கலக்கி, பின்னர் நன்றாக முகத்தில் பூச வேண்டும். 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் சருமம் மென்மையாக இருக்கும். கடும் வெயிலில் சென்றாலும் முகம் கருக்காது.

- Advertisement -