கருப்பாக இருக்கும் உங்களுடைய சருமத்தை ஒரே நிமிடத்தில் வெள்ளை நிறத்துக்கு மாற்ற 1 ஸ்பூன் ஷாம்பூ போதும்.

- Advertisement -

உடல் முழுவதும் கருப்பாக இருந்துவிட்டால் அது பிரச்சினை கிடையாது. உடல் முழுவதும் வெள்ளையாக இருந்து விட்டாலும் அது பிரச்சனை கிடையாது. ஆனால் நம்மில் நிறைய பேருக்கு முகம் ஒரு நிறத்தில் இருக்கும். கழுத்து ஒரு நிறத்தில் இருக்கும். கழுத்துக்குப் பின் பக்கம் இன்னும் கருப்பாக இருக்கும். கைகளில், ஆடைக்கு உள்பக்கம் இருக்கும் நிறம் ஒரு மாதிரி இருக்கும். ஆடைக்கு வெளிப்பக்கம் இருக்கக்கூடிய நிறம் வேறு ஒரு மாதிரி இருக்கும். பெண்கள் போடக்கூடிய பிளவுஸில் கை கொஞ்சம் சின்னதாக வைத்தாலும், அந்த இடத்தில் ஒரு அடையாளம் தெரியும். கழுத்துப்பகுதி கொஞ்சம் லோவாக வைத்து விட்டால், கழுத்தில் இருக்கக்கூடிய நிறம் இரண்டு நன்றாக வெளியே தெரியும். இது பார்ப்பதற்கு கொஞ்சம் நம்முடைய அழகைக் குறைக்கும் அல்லவா. சன் டேனை உடனடியாக நீக்க ஒரு சூப்பர் ஐடியா உங்களுக்காக.

ஒரு சிறிய பௌலிலை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஷாம்பூ – 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன், பேக்கிங் சோடா – 1/2 ஸ்பூன், காபி தூள் – 1 டேபிள்ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு நன்றாக அடித்துக் கலக்க வேண்டும். இந்த பேக் அப்படியே ஸ்மூத்தாக நுரை பொங்க பொங்க நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

உடனடியாக வெள்ளையாக மாற வேண்டுமென்று இந்த பேக்கை முகத்தில் போட வேண்டாம். முகத்தில் இந்த பேக்கை பயன்படுத்தக்கூடாது. தவிர கழுத்துப்பகுதி, கை, கால், முட்டி, கருமையாக இருக்கக்கூடிய உங்களுடைய அந்தரங்க பகுதிகளிலும் இந்த பேக்கை தாராளமாக பயன்படுத்தலாம். இந்த பேக்கை கருப்பாக இருக்க கூடிய இடத்தில் நன்றாக அப்ளை செய்து விட்டு 5 நிமிடம் லேசாக மசாஜ் செய்து கொடுங்கள். அதன் பின்பு ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

அதன் பின்பு குளிர்ந்த நீரில் பேக் போட்ட இடத்தை கழுவி விடுங்கள். அவ்வளவு தான். உங்களுக்கே வித்தியாசம் தெரியும் பாருங்கள். வாரத்தில் 2 நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம். தினந்தோறும் இந்த பேக்கை சருமத்தில் போடுவது அவ்வளவு சரியாக இருக்காது. காரணம் இதில் நாம் பேக்கிங் சோடா சேர்த்து இருக்கின்றோம். (ரொம்பவும் சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் உங்களுக்கு அலர்ஜி ஏற்படுகிறதா என்பதை ஒரு சிறிய இடத்தில் இந்த பேக்கை போட்டு பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அதன் பின்பு பேக் போட்டுக் கொள்ளலாம்.)

- Advertisement -

உங்கள் தலைக்கு நீங்கள் எந்த ஷாம்புவை பயன்படுத்துகிறீர்களோ, அந்த ஷாம்புவை பேக் போட பயன்படுத்தலாம். நீங்கள் குடிப்பதற்காக பயன்படுத்தும் இன்ஸ்டன்ட் காபி பவுடர் எந்த ப்ரான்ட் வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முதலில் உங்களுடைய இரண்டு கைகளில் ஒரு கைக்கு மட்டும் இந்த பேக்கை அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்போதுதான் பேக் போட்ட கைக்கும், பேக் போடாத வைக்கும் உள்ள வித்தியாசத்தை  உணர முடியும். அக்குள் பகுதி, கழுத்துப் பகுதியில் இருக்கக்கூடிய கருமை நிறத்தை போக்க இந்த பேக் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -