வெறும் 10 ரூபாய் செலவில், 10 நிமிடத்தில் சன் டேன் ஆன கை, கால்களை வெள்ளையாக்க இது ஒரு சூப்பர் ஐடியா. இதுவரை கேள்வி படாத மரவள்ளிக் கிழங்கின் அழகு குறிப்பு.

san-tan
- Advertisement -

கருப்பான சருமத்தை எளிதில் வெள்ளையாக்க கூடிய குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். நாம் எல்லோருமே சன் டேனால் நிச்சயமாக பாதிக்கப்பட்டிருப்போம். குறிப்பாக ஆடை அணிந்திருந்த பகுதி ஒரு நிறத்திலும், ஆடைக்கு வெளியே இருந்த பகுதி வேறொரு நிறத்திலும், பிளாக் அன்ட் ஒயிட்டாக தெரியும். இதை சரி செய்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளது. ஆனால் எல்லாவற்றையும் விட ஒரு பெஸ்ட் குறிப்பை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போகும் பொருள் மரவள்ளி கிழங்கு. நம்முடைய ஊர்களில் இது சுலபமாகவே நமக்கு கிடைக்கும்.

மரகவல்லி கிழங்கை வாங்கி மண் போக கழுவி விட்டு, தோல் சீவி தேவையான அளவு மரவள்ளி கிழங்குகளை துண்டு துண்டாக வெட்டி மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை துருவியும் மிக்ஸி ஜாரில் அரைத்தால் சுலபமாக அரைபட்டு நமக்கு கிடைக்கும். இதில் தண்ணீர் ஊற்றி அறைக்க வேண்டாம். பால் அல்லது தயிர் ஊற்றி அரைத்து விழுதாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். (இது ரொம்பவும் நைசாக அரைபடாது லேசாக திப்பி திப்பியாகத்தான் இருக்கும் பரவாயில்லை.)

- Advertisement -

இந்த விழுதை உங்களுடைய கைகளிலும் கால்களிலும் நன்றாக தடவி விட்டு, (சன் டேன் ஆன இடத்தில் எல்லாம் தடவிக் கொள்ளலாம்) காய வைக்க வேண்டும். 10 லிருந்து 20 நிமிடம் இந்த பேக் காய்ந்ததும், இந்த பேக்கின் மேலே தண்ணீரை ஸ்பிரே செய்து, நன்றாக ஈரம் ஆக்கிவிட்டு, அப்படியே வட்ட வடிவில் மசாஜ் செய்து கழுவி விடுங்கள். உங்களுடைய கை, கால்கள் உடனடியாக வெள்ளையாக மாறிவிடும். சன் டேனை நீக்கி சருமத்தை பொலிவாக மாற்ற இந்த டிப்ஸ் நிச்சயம் வொர்க் அவுட் ஆகும்.

எல்லோரும் இந்த குறிப்பை பயன்படுத்தலாம். முகத்திற்கு இந்த பேக்கை போட வேண்டும் என்றால் சின்னதாக ஒரு பேட்ச் டெஸ்ட் எடுத்துவிட்டு முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். சில பேருக்கு கழுத்து பகுதி, கழுத்துக்கு கீழே இருக்கும் முதுகு பகுதி எல்லாம் ரொம்பவும் வெயில் பட்டு பட்டு அந்த இடமே கருத்துப் போய் இருக்கும். பிளவுஸ் போடும் பெண்களுக்கு இது புரியும்.

- Advertisement -

அப்படிப்பட்ட நீண்ட நாள் கருப்பு நிற சருமத்தைக் கூட வெள்ளையாக்க இந்த குறிப்பு பயன்படும். ஒருமுறை போடும்போது நல்ல ரிசல்ட் தெரியும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த குறிப்பை தொடர்ந்து பின்பற்றி வர உங்களுடைய சருமம் நிரந்தரமாக வெள்ளை நிறமாக மாறி வரும். முயற்சி செய்து பாருங்கள். உங்களுடைய சருமம் ரொம்பவும் சென்சிடிவ் ஆக இருக்கிறது. இது முதல் முறை பயன்படுத்தும் போதே அரிப்பு, அலர்ஜி ஏற்படுகிறது என்றால் குறிப்பை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். (இப்படி விழுதாக அரைத்துப் போட உங்களுக்கு சிரமம் இருந்தால், இந்த கிழங்கை நன்றாக துருவி, பிழிந்தால் இதுடைய பால் வெள்ளையாக நமக்கு கிடைக்கும். அதை எடுத்துக் கூட சன் டேன் ஆன இடத்தில் தடவி மசாஜ் செய்து காய விட்டு பின்பு கழுவி விடலாம்.)

கூடுமானவரை தினமும் வெயிலில் செல்லக்கூடியவர்கள் முகத்திற்கு சன் டேன் க்ரீம் போட்டுக் கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும். அதிகப்படியான சூரிய கதிர்கள் நம் சருமத்தில் படும்போது சருமம் சீக்கிரம் சுருங்கி, கருத்து போய் அழகை இழக்க கூடிய நிலைமைக்கு வந்துவிடும். சரும பாதுகாப்பிற்கு உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் டேன் மிக மிக அவசியம் என்பதை இந்த இடத்தில் நினைவு கூர்ந்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -