சமையல் அறையில் நேரத்தை மிச்சம் செய்ய சூப்பரான 6 டிப்ஸ்! இவ்ளோ நாளா இது கூட தெரியலையேன்னு ஆச்சரியப்படுவீங்க!

kitchen-garlic

சமையல் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியமானது சமையல் குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொள்வது என்பது. இவ்வளவு நாளாக சமையல் செய்றோம், இது கூட தெரியலன்னு தோன்ற அளவுக்கு சூப்பரான டிப்ஸ் தான் இதில் பார்க்க இருக்கிறோம். சமையல் அறையில் செய்ய அடிக்கடி சிரமப்படும் இந்த விஷயங்களை இனி நீங்களும் சுலபமாக கையாளலாம். அப்படியான சமையல் குறிப்புகள் என்னென்ன? அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

wheat-flour

டிப் 1:
கோதுமை மாவு பயன்படுத்துபவர்கள் அதனை மொத்தமாக வாங்கி ஸ்டோர் செய்து கொள்வார்கள். இப்படி மொத்தமாக எடுத்து வைக்கும் பொழுது நீண்ட நாட்கள் பெரும்பாலும் வருவதில்லை. கோதுமை மாவு கட்டிகளாக மாறிவிடும் அல்லது பூச்சிகள் வரக்கூடும். இந்த இரண்டும், இந்த ஒரு விஷயத்தை செய்தால் வராமல் தடுக்கலாம். கோதுமை மாவு அரைத்து வந்தவுடன் அதனை எடுத்து வைக்கும் பொழுது அதில் சில பிரியாணி இலைகளை போட்டு வைக்கவும். பிரியாணி இலைகளை போட்டால் கோதுமை மாவு அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். மேலும் அதில் வண்டுகள், பூச்சிகள் போன்ற தொந்தரவுகளும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும்.

டிப் 2:
அடிக்கடி அப்பளம் பயன்படுத்துபவர்கள் இப்படி செய்தால் நீண்ட நாள் வரை நமத்துப் போகாமல் இருக்கும். பயன்படுத்தி விட்டு மீதியிருக்கும் அப்பளங்களை சரியாக சேமித்தால் மறுமுறை நீங்கள் பயன்படுத்தும் பொழுது புத்தம் புதியதாகவே இருக்கும். ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் சில கல் உப்புக்களை போட்டு அதன் மேல் டிஷ்யூ பேப்பர் வைத்து அப்பளங்களை சேகரித்து வைத்தால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் நமத்து போகாமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும்.

appalam-fry

டிப் 3:
அதே போல் அப்பளங்களை பொரித்து எடுத்த உடன் அப்படியே வைக்காமல் வாயகன்ற பாத்திரத்தில் அடியில் டிஷ்யூ பேப்பர் வைத்து அப்பளங்களை வரிசையாக நிற்க வைத்தால் அப்பளத்தில் இருக்கும் எண்ணெய் முழுவதும் டிஷ்யூ பேப்பர் உறிந்து கொள்ளும். அப்பளம் ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாமல் ஆயில் ப்ரீயாக உங்களுக்கு கிடைக்கும். நிற்க வைக்காமல் அப்படியே நீங்கள் டிஷ்யூ பேப்பரில் வைத்தாலும் அதில் பயனில்லை. எண்ணெய் அவ்வளவாக டிஷ்யூ பேப்பர் உரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்.

- Advertisement -

டிப் 4:
பூண்டு உரிப்பதற்கு பலருக்கும் சிரமமாகவே இருக்கும். பூண்டில் இருக்கும் மகத்துவமான மருத்துவ குணங்கள் அதை உரிப்பது சோம்பேறித்தனப்பட்டு நமக்கு பயன்படாமல் போய் விடக்கூடாது. பூண்டு உரிக்க சோம்பேறித்தனம் படுபவர்கள் இப்படி செய்து பாருங்கள். நொடியில் உரித்து விடலாம். உங்களுக்கு தேவையான பூண்டுகளை எடுத்து அதனை வாணலியில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். சூடு ஆறியதும் கைகளால் கசக்கினால் போதும். சுலபமாக பூண்டு தோல்கள் உரிந்து விடும். இதற்காக கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. மொத்தமாக பூண்டை இப்படி வறுத்து எடுத்து ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம் தேவையான பொழுது கைகளாலேயே கசக்கி சுலபமாக உரித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

garlic 3-compressed

டிப் 5:
முந்திரி, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை அதிகமாக வாங்கி வைப்பவர்கள், அதனை நீண்ட நாட்களுக்கு பிரஷ்ஷாக எப்படி வைத்திருப்பது தெரியுமா? சாதாரணமாக நாம் அவற்றை டப்பாவில் போட்டு வைத்தால் சில நாட்களிலேயே அவைகள் நமத்து போய்விடும். வாங்கும் பொழுது எப்படி இருந்ததோ, அப்படியே இருப்பதற்கு சர்க்கரையை மிக்ஸியில் தூளாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் வைக்கும் டப்பாவில் டிஷ்யூ பேப்பரை வைத்து அதில் சிறிதளவு சர்க்கரைத் தூளை கொட்டி பின்னர் நட்ஸ் வகைகளை சேகரித்து வைத்தால் நீண்ட நாட்கள் வரை பிரஷ்ஷாக இருக்கும்.

nuts

டிப் 6:
நாம் பழைய டூத் பிரஷ்களை உபயோகிக்கும் பொழுது சில பொருட்களை சரியாக சுத்தம் செய்ய முடியாமல் தவிர்ப்போம். அதற்கு டூத் பிரஷ்ஷின் மையப் பகுதியில் லேசாக நெருப்பில் காட்டி வளைத்து வைத்துக் கொண்டால் சுலபமாக வளைந்து கொடுக்கும் தன்மையை பெற்றிருக்கும். இதனை வைத்து நாம் எந்த பொருட்களையும் சந்து பொந்துகளில் கூட விட்டு ஈசியாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
புதினாக் கீரையில் மட்டுமல்ல இந்தக் கீரையில் துவையல் செய்தாலும் உடம்பில் பல பிரச்சனைகள் தீரும் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.