சமையல் ருசிக்க ராஜதந்திரமான இப்படிப்பட்ட ஐடியாவை எல்லாம் யாரும் உங்களுக்கு சொல்லித் தர மாட்டாங்க.

tips3
- Advertisement -

நாம் செய்யக்கூடிய சமையல் ருசியாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு சின்ன சின்ன எளிமையான குறிப்புகள் உள்ளது. அதை பின்பற்றினாலே போதும் நம்முடைய சமையலை சுலபமாக்கிவிடலாம். அதே சமயம் ருசியாகவும் மாற்றிவிடலாம். அது மட்டும் இல்லாமல் சமையலறையில் நாம் எதிர் கொள்ளக்கூடிய சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு உண்டான எளிமையான தீர்வுகளும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. சமையலில் ஆர்வம் உள்ளவர்கள் சமையலறை மேல் அக்கறை உள்ளவர்கள் இந்த சின்ன சின்ன குறிப்புகளை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். பிடித்த குறிப்பை முயற்சி செய்து பாருங்கள்.

biriyani1

குறிப்பு 1:
நீங்கள் செய்யும் பிரியாணி மட்டும் ருசிக்க மாட்டேங்குதா. மிக்ஸி ஜாரில் கொஞ்சம் மல்லித்தழை, கொஞ்சம் புதினா தழை, காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் 4 பல், போட்டு இதை விழுதாக அரைத்து அப்படியே நீங்கள் செய்யும் பிரியாணியில் எண்ணெயில் வெங்காயம் தக்காளி வதக்கும்போது, அரைத்த இந்த விழுதையும் போட்டு வதக்கி, பிரியாணி சமைத்தால் அதனுடைய வாசம் சூப்பராக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
வாழைப்பூ, வாழைக்காய், வாழைத்தண்டு, மோர் குழம்பு, அரைத்து விட்ட கூட்டு, இவைகள் செய்யும்போது இதற்காக தாளிக்கும் எண்ணெய், தேங்காய் எண்ணெயாக இருக்கட்டும். அப்போது இந்த சமையலின் ருசி இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும்.

குறிப்பு 3:
பொதுவாகவே கட்டி பெருங்காயம் வெயில் காலத்தில் அப்படியே ஒட்டிக்கொள்ளும். அதை பிரித்து எடுத்து சமைப்பது ரொம்ப ரொம்ப கடினம். அந்த பெருங்காய டப்பாவில் காம்போடு ஒரு பச்சை மிளகாய் போட்டு வைத்தால் பெருங்காயம் கட்டி பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
பாசுமதி அரிசியை குக்கரில் வேகவைக்கும் போது, அல்லது குண்டானில் வேக வைக்கும் போது அது குழையாமல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் இருக்க, அதில் 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்க்கவும். இல்லை என்றால் கொஞ்சம் நெய் சேர்க்கவும். பாஸ்மதி அரிசி உதிரி உதிரியாக வெந்து கிடைக்கும்.

vasambhu

குறிப்பு 5:
ரவை, சேமியா, பருப்பு வகைகள், பயறு வகைகளை, மாவு வகைகள் எல்லாம் டப்பாவில் நீண்ட நாட்கள் ஸ்டோர் செய்தால் அதில் சீக்கிரம் வண்டுபிடிக்கும் அல்லவா. ஒரு வசம்பு துண்டை இடித்து அந்த டப்பாவில் போட்டு வைத்தால் அதில் சீக்கிரம் வண்டு பிடிக்காமல் இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 6:
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரை இனி கீழே ஊற்றாதீங்க. அந்த தண்ணீரைக் கொண்டு ரொம்பவும் பிசுபிசுப்பான எண்ணெய் பாத்திரங்கள், ரொம்பவும் அழுக்கப்படிந்த சில்வர் பாத்திரங்கள் மேலே ஊற்றி பிறகு அந்த பாத்திரத்தை தேய்த்து கழுவினால் உடனடியாக அந்த பாத்திரம் பளபளப்பாக புதுசு போல மாறும்.

குறிப்பு 7:
காய்ந்த மிளகாயை, மசாலா அரைப்பதற்கு வறுக்கும் போது அதிலிருந்து நெடி அதிகமாக வரும். சில பேருக்கு இருமல் தும்மல் வரும் அல்லவா. காய்ந்த மிளகாய் வறுக்கும்போது அதில் சிறிதளவு கல் உப்பு போட்டால் அந்த நெடி வராது.

குறிப்பு 8:
தயிரில் தோல் சீவிய இஞ்சி 1 துண்டு போட்டு வைத்தால் அந்த தயிர் எளிதில் புளிக்காது. இந்த வெயில் காலத்தில் இது உங்களுக்கு நல்ல உபயோகமாக இருக்கும்.

idli1

குறிப்பு 9:
இட்லி மாவு அரைக்கும் போது, உளுந்து ரொம்ப ரொம்ப கம்மியாகி இட்லி கல்லு போல வருதா. பொரித்த அப்பளத்தில் தண்ணீரை ஊற்றி கொஞ்ச நேரம் ஊற வைத்து, அதை நன்றாக மிக்ஸி ஜாரில் விழுது போல அரைத்து, இட்லி மாவில் ஊற்றி கரைத்து, இட்லி வார்த்து பாருங்கள். இட்லி புசுபுசுவென பூ போல பொங்கி வரும்.

gulab-jamun1

குறிப்பு 10:
என்னதான் முயற்சி செய்தாலும் நீங்கள் செய்த குலோப் ஜாமுன் விரிசல் விடுகிறதா. குலோப் ஜாமுன் செய்வதற்கு ஜீரா காய்ச்சுவீர்கள் அல்லவா. அதை நன்றாக ஆற வைத்த பின்பு, சுட சுட சுட்டு எடுத்த குலோப் ஜாமுனை அப்படியே ஆரிய ஜீராவில் போடும் போது, குலோப் ஜாமுன் வெடிப்பு விடாது. உடைந்து போகாமல் நன்றாக ஊறி சூப்பராக குண்டு குண்டாக கிடைக்கும்.

- Advertisement -