விருச்சிகம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சூரியன் – இதனால் உங்கள் ராசிக்கு என்ன பலன்

astrology

நவகிரகங்களில் முதன்மை நாயகனாகவும், உலகிற்கே ஒளியை தருபவருமாக சூரிய பகவான் இருக்கிறார். வருகிற நவம்பர் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6. 48 மணிக்கு சூரிய பகவான் “துலாம்” ராசியிலிருந்து “விருச்சிகம்” ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இந்த சூரியனின் பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படவிருக்கும் பலன்கள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேஷம்

Mesham Rasi

மேஷ ராசிக்கு எட்டாவது ரசியாகிய விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் ஒரு சிலருக்கு உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல் வாங்கலில் சுமாரான நிலையே இருக்கும். தந்தை வழி உறவுகளுடன் பிரச்சனைகள் உண்டாகலாம். பெண்களுக்கு உடல் மற்றும் மன சோர்வு ஏற்படும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே சிறக்க முடியம். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சராசரியான லாபம் மட்டுமே கிடைக்கும்.

ரிஷபம்

Rishabam Rasi

- Advertisement -

ரிஷப ராசிக்கு ஏழாமிடமாகிய விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் உடல் மற்றும் மனம் உற்சாகத்துடன் இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். கடன் தொகைகள் அனைத்தும் வட்டியுடன் உங்களுக்கு வந்து சேரும். கலைஞர்கள் பொருள், புகழ் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உருவாகும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு கட்சி பொறுப்புகள், பதவிகள் போன்றவை கிடைக்கும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.

மிதுனம்

midhunam

மிதுன ராசிக்கு ஆறாவது ராசியான விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகியிருப்பதால் ஒரு சிலருக்கு கண்களில் பாதிப்புகள் ஏற்பட கூடும். பணியிடங்களில் சக ஊழியர்கள் உயரதிகாரிகள் ஆகியோருடன் அனுசரித்து செல்வது நல்லது. தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். பணவரவிற்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது. அலைச்சல்களால் உடல், மன சோர்வு ஒரு சிலருக்கு ஏற்படும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு பெரிய அளவில் லாபங்கள் ஒன்றும் இருக்காது. பெண்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட கூடும்.

கடகம்

Kadagam Rasi

கடக ராசியினருக்கு ஐந்தாம் ராசியான விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் ஒரு சிலருக்கு வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படக்கூடும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களால் மருத்துவ செலவு ஏற்படும். ஒரு சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்வார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் ஏற்படும். மாணவர்கள் கல்வி, போட்டிகள் போன்றவற்றில் சிறப்பார்கள். புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் மன மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்

simmam

சிம்ம ராசியினருக்கு நான்காம் ராசியான விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகியிருப்பதால் குடும்ப பொருளாதார நிலை சற்று இறுக்கமாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருது வேறுபாடுகள் தோன்றலாம். தொழில், வியாபாரங்களில் சற்று மந்த நிலையே இருக்கும். உடல்நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவை சற்று தாமதமாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்குக்கான செலவு ஏற்படும். பணவரவுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.

கன்னி

Kanni Rasi

கன்னி ராசியினருக்கு மூன்றாம் ராசியான விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் பொருள் வரவிற்கு பாதிப்பு இருக்காது. உடலாரோக்கியத்தில் சிறிது பாதிப்புகள் இருக்கும். வேலை தேடும் நபர்களுக்கு சிறிது தாமதத்திற்கு பிறகு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஒரு சிலர் புனித பயணங்களை மேற்கொள்வீர்கள். அரசியலில் இருப்பவர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். குடும்ப பொருளாதார நிலை சராசரியாக இருக்கும்.

துலாம்

Thulam Rasi

துலாம் ராசியினருக்கு இரண்டாவது ராசியான விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் தந்தை வழியில் உடல் நல பாதிப்பால் மருத்துவச் செலவுகள் ஏற்படும். தம்பதிகளுக்கிடையே விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். புதிய தொழில் மற்றும் வியாபார முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி வைக்க வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் ஆத்திரத்தை தவிர்த்து பொறுமையை கடைபிடிக்க வேண்டும். ஒரு சிலர் ஆன்மீக பயன்களை மேற்கொள்வீர்கள்.

விருச்சகம்

Virichigam Rasi

விருச்சிக ராசியினருக்கு அவர்களின் ராசியிலேயே சூரியன் பெயர்ச்சியாவதால் பொருள் வரவு நன்றாக இருக்கும். வெளிநாடுகள் செல்லும் முயற்சி வெற்றியடையும். பணியிலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் ஊதிய உயர்வுகள் ஏற்படும். புதிய முயற்சிகளை சற்று ஒத்திப்போடுவது நல்லது. உடல் நலத்தில் கவனமுடன் இருப்பது அவசியம். உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் உருவாகும். உறவினர்கள் மற்றும் வெளியாட்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்கள் வழியில் தன வரவுகள் உண்டாகும்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசியினருக்கு பன்னிரெண்டாவது ராசியான விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் மாணவர்கள் கல்வியில் சற்று பின் தாங்கும் நிலை ஏற்படும். பழைய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்க்க முடியும். ஒரு சிலருக்கு வெளிநாடுகள் செல்லக் கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் சற்று தடை, தாமதத்திற்கு பின்பே வெற்றி கிட்டும். சிலர் புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். விவசாயத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சராசரியான லாபம் கிடைக்கும்.

மகரம்

Magaram rasi

மகர ராசியினருக்கு பதினோராவது ராசியான விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். உடல் மற்றும் மனதில் புதிய பலமும் உற்சாகமும் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை ஒத்தி வைப்பது நல்லது. குழந்தை இல்லாமல் வாடியவர்களுக்கு குழந்தை பிறகும். பணம் சம்பந்தமான விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் தீர்க்க முடியும். வெளிநாடு செல்லும் முயற்சி சற்று தாமதத்திற்கு பின்பு வெற்றி கிட்டும்.

கும்பம்

Kumbam Rasi

கும்ப ராசியினருக்கு பத்தாவது ராசியான விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் நல்ல லாபம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுடன் சற்று அனுசரித்து செல்வது நல்லது. ஒரு சிலர் மக்களால் பாராட்டப்படும் காரியங்களை செய்து புகழ் பெறக்கூடும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பிரிந்த உறவினர்கள் நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் தேடி வரும்.

மீனம்

Meenam Rasi

மீன ராசியினருக்கு ஒன்பதாவது ராசியான விருச்சிக ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாவதால் குடும்பத்தில் இருப்பவர்கள் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவார்கள். கடன் வாங்கக்கூடிய நிலை ஏற்பட்டாலும் அதை மீண்டும் அடைத்து விட முடியும். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கங்களோடு இருக்கும். உங்களுக்கு ஆகாதவர்கள் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்த முயலக்கூடும் என்பதால் எதிலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சிலர் ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளக்கூடும்.

ஜோதிடம், ஜாதகம், வார பலன், ஆன்மிக தகவல்கள் என அனைத்தையும் ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்யுங்கள்.