சூரிய பகவான் துதி

sooriyan-1
- Advertisement -

விண்ணில் பல நட்சத்திரங்கள், கோள்கள் இருந்தாலும் பூமிக்கு ஒளி மற்றும் அதில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஆற்றலை தருகின்ற ஒரு கோளாக அல்லது நட்சத்திரம் சூரியன் இருக்கிறது. சூரியனின் ஆற்றல் எத்தகையது என்பதை பழங்காலத்திலேயே உணர்ந்த உலகின் பல நாகரீக மக்கள் சூரிய வழிபாட்டை செய்து வந்திருக்கின்றனர். தினந்தோறும் காலையில் சூரியனை வழிபடுவது சிறப்பானதாகும். அப்படி வழிபடும் போது சூரியனின் அருளால் பல நன்மைகளை பெற துதிக்க வேண்டிய சூரிய பகவான் துதி இதோ.

sooriya-bagwan

சூரிய பகவான் துதி

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி

- Advertisement -

சூரியனின் தன்மைகளை கூறும் அற்புத தமிழ் துதி இது. இந்த துதியை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் சூரியனை நமஸ்கரித்தவரே 10 முறை துதிப்பது நல்லது. ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், கிழக்கு திசையை பார்த்தவாறு நின்று சூரியன் உதிக்கின்ற போது இத்துதியை 10 அல்லது 27 முறை துதித்தால் உடல் மற்றும் மனோபலம் பெருகும். உடலில் இருக்கும் நோய்கள் நீங்கும். வேலைகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கச் செய்யும், வியாபாரம் மற்றும் தொழில்கள் மேன்மையடைந்து லாபங்கள் பெருகும். மக்கள் செல்வாக்கு உண்டாகும்.

Lord sooriyan

விண்ணில் இருக்கும் அனைத்து கோள்களும் பல கோடான கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனிலிருந்தே தோன்றியதாக நவீன விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த அறிவியல் உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்த முன்னோர்கள் பாரதத்தின் பாரம்பரிய மதமான இந்து மதத்திலும், யோக காலையில் சூரிய நமஸ்காரம் என்கிற முறையிலும் சூரிய பகவானின் வழிபாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் நவகிரகங்களின் நற்சக்திகளும் நமக்கு கிடைக்கப் பெறுமாறு செய்தனர்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Suriyan thuthi in Tamil or Suriya bhagavan thuthi in Tamil.It is also called as Suriyan manthiram in Tamil or Suriya slogam in Tamil.

- Advertisement -