உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்

uma-mageswarar-compressed

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒவ்வொரு விதமாக இருக்கிறது. மனிதனாக பிறந்த ஆண் அல்லது பெண் இருவரும் தக்க வயதில் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபட்டு எல்லா பேறுகளையும் பெற்று வாழ வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். திருமணம் நடக்க வேண்டியவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையவும், திருமணமான தம்பதிகளின் ஒற்றுமை மேலோங்கவும், நீண்ட ஆயுள் மற்றும் செல்வங்களை பெறவும் துதிக்க வேண்டிய “உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்” இதோ.

Arthanareswarar

உமா மகேஸ்வர ஸ்தோத்திரம்

நம:சிவாப்யாம் நவயௌவநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர்தராப்யாம்!
நகேந்த்ரகன்யா வ்ருஷகேத நாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!
நம:சிவாப்யாம் ஸரஸோத்ஸாவாப்யாம்
நமஸ்க்ருதா பீஷ்டவரப்ரதாப்யாம்!
நாராயணேநார்சித பாதுகாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம் !!

நம:சிவாப்யாம் வ்ருஷவாஹநாப்யாம்
விரிஞ்சி விஷ்ணு இந்த்ரஸுபூஜிதாப்யாம்
ஜம்பாகிமுக்யை ரவி வந்திதாப்யாம்
நமோநம:சங்கர பார்வதீப்யாம்!!
நம:சிவாப்யாம் ஜகதீச்வராப்யாம்
ஜகத்பதிப்யாம் ஜயவிக்ரஹாப்யாம்!
ஜம்பாரிமுக்யை ரபி வந்திதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

Sivan

நம:சிவாப்யாம் பரமௌஷதாப்யாம்
பஞ்சாக்ஷரீ பஞ்ஜரரஞ்ஜிதாப்யாம்!
ப்ரபஞ்ச ச்ருஷ்டிஸ்திதி-ஸம்ஹ்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
நம:சிவாப்யாமதிஸுந்தராப்யாம்
அத்யந்தமாஸக்ருதஹ்ருதம்புஜாப்யாம்!
அசேஷ லோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

- Advertisement -

நம:சிவாப்யாம் கலிநாசனாப்யாம்
கங்கால கல்யாணவபுர்தராப்யாம்!
கைலாஸசைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
நம:சிவாப்யாம் அசுபாபஹாப்யாம்
அசேஷலோகைகவிசேஷிதாப்யாம்
அகுண்டிதாப்யாம் ஸ்ம்ருதி ஸம்ப்ருதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!

amman

நம:சிவாப்யாம் ரவ வாஹநாப்யாம்
ரவீந்து வைச்வாநரலோசனாப்யாம்!
ராகா சசாங்காப முகாம்புஜாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
நம:சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம்!
ஜநார்தனாப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்

நம:சிவாப்யாம் விஷமேக்ஷணாப்யாம்
பில்வச்சதா மல்லிகதாமப்ருத்ப்யாம்!
சோபாவதீ சாந்தவதீச்வராப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
நம:சிவாப்யாம் பசுபாலகாப்யாம்

ஜகத்த்ரயீ ரக்ஷண பத்தஹ்ருத்ப்யாம்!
ஸமஸ்ததேவாஸுர பூஜிதாப்யாம்
நமோ நம:சங்கர பார்வதீப்யாம்!!
ஸ்தோத்ரம் த்ரிஸந்த்யம் சிவபார்வதீப்யாம்
பக்த்யா படேத் த்வாதசகம் நரோய:
ஸ ஸர்வஸெளபாக்யபலாநி புங்க்தே
சதாயுரந்தே சிவலோக மேதி!

ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய மந்திர அதிர்வுகள் நிறைந்த உமா மகேஸ்வர ஸ்தோத்திரம் இது. அற்புதமான இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் துதித்து சிவபார்வதியை வணங்குபவர்கள் நீண்ட ஆயுளை பெற்று, அனைத்து செல்வங்களையும் வாழ்வில் பெறுவார்கள். திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் இந்த ஸ்தோத்திரத்தை துதிப்பதால் மனதிற்கினிய வாழ்க்கை துணை அமைவார்கள். திருமணமான தம்பதிகள் இந்த ஸ்தோத்திரத்தை துதித்து வந்தால் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

என்றென்றும் இளமை தோற்றத்துடன் விளங்கும் சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவியே உங்களை வணங்குகிறேன். தவமிருப்பவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களை அருள்பவரான சிவனையும், அனைத்து உயிர்களின் மீது கருணை மழை பொழிகின்ற பார்வதி தேவியையும் வணங்குகின்றேன். தேவர்கள், மனிதர்கள் இன்ன பிற உயிரினங்கள் அனைத்தும் சிவபார்வதியை வணங்குகின்றன. தனது உடலில் சரி பாதியை சக்திக்கு வழங்கியவரும், அனைத்து லோகங்களையும் காத்தருளி, வணக்கம் அனைவருக்கும் மோட்சத்தை அருள்பவரே உங்களை மனதார வணங்குகிறேன் என்பதே இந்த ஸ்தோத்திரத்தின் சுருக்கமான பொருளாகும்.

இதையும் படிக்கலாமே:
லட்சுமி கடாச்சம் பெற துதிக்க வேண்டிய ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Uma maheswara stotram in Tamil or Uma maheswara manthiram in Tamil. It is also called as Uma maheswara mantra in Tamil or Uma maheswara slogam in Tamil or Uma maheswara sloka in Tamil.