உங்கள் குடும்பத்தில் செல்வச் செழிப்பு உண்டாக இதை செய்யுங்கள்

surya

எந்த ஒரு மனிதனுக்கும் குடும்பம் தான் ஆதாரமாக இருக்கிறது. ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருமே எல்லாவிதமான இனியும் பெற வேண்டும் என்பதே குடும்பத்தில் இருக்கின்ற அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் நாம் தற்காலங்களில் காணும் பல குடும்பங்களில் ஏதாவது ஒரு பிரச்சனைகள் ஏற்பட்டு, அதனால் பொருளாதார ரீதியான கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டும் குடும்ப உறுப்பினர்கள் நிம்மதி இன்று தவிப்பதையும் காண்கிறோம். இத்தகைய குடும்பத்தை பாதிக்கின்ற அனைத்து வகையான பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரு வழிபாட்டு முறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Sooriyan

பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை எழுந்து, குளித்து முடித்ததும் சூரியன் உதயமாவதற்கு முன்பாக, ஒரு சிறிய செம்பு பாத்திரம் அல்லது குவளை முழுவதும் நீரை எடுத்துக் கொண்டு, கிழக்கு திசையை நோக்கி நின்ற வாறு சூரிய உதயம் ஏற்படும் வேளையில் “ஓம் சூர்ய நாராயணாய நமஹ” என்ற மந்திரத்தை கூறி கையில் வைத்திருக்கும் செம்பு பாத்திரத்தில் இருக்கும் நீரை சிறிது நீரிலோ அல்லது செடிகளிலோ விட வேண்டும். இவ்வாறு மூன்று முறை செய்ய வேண்டும்.

பிறகு அந்த சூரியனை நோக்கி நின்ற வாறு பெண்களாயின் தங்களின் மார்புக்கு நேராக இருகரங்கள் கூப்பிக் கொண்டும், ஆண்களாக இருப்பின் இரு கரங்களையும் கூப்பி தலைக்கு மேல் வைத்துக் கொண்டும் உங்கள் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்தை வழிபட வேண்டும். அதன் பிறகு சூரியனுக்கு உண்டான மந்திரங்கள் துதித்து சூரிய பகவானை மனதார வழிபட வேண்டும். சூரியனை வழிபட்டு முடிந்ததும் நீங்கள் நின்ற இடத்திலேயே மூன்று முறை சூரியனை சுற்றி வழிபட வேண்டும்.

praying

மேற்கண்ட முறையில் தினமும் சூரியனை வழிபட்டு வருபவர்களிடம் ஆக்கபூர்வமான சக்திகள் உருவாகும். அவர்களிடம் இருக்கின்ற இந்த நேர்மறை சக்திகள், அவர்களின் குடும்பத்தாருக்கும் பரவி அவர்களிடம் இருக்கின்ற எதிர்மறையான குணங்கள் சக்திகள் நீங்கும். வசிக்கின்ற வீட்டிலும், குடும்பத்திலும் நேர்மறையான அதிர்வுகள் உண்டாகி, மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெருக்கும். நோய்கள், துஷ்ட சக்தி பாதிப்புகள் போன்றவற்றை நீக்கி பொருளாதார வலிமையை பெருக்கும்.

இதையும் படிக்கலாமே:
தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருக இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Surya bhagawan valipadu in Tamil. It is also called as Surya valipadu in Tamil or Kudumba magilchi erpada in Tamil or Dushta shakti neenga in Tamil or Surya valipadu nanmaigal in Tamil.