- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஇந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்

- Advertisement -

நாளை மகாளய பட்சத்தின் கடைசி நாள். நாளைய தினம் 02-10-2024, மஹாலயா அமாவாசை திதியோடு, மஹாளய பட்சத்தின் கடைசி நாள் நிறைவு அடையவிருக்கிறது. நாளைய தினம் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நடக்கவிருக்கிறது. இந்த சூரிய கிரகத்தின் மூலம் நமக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா. நாளைய தினம் எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்வது.

நாளைய தினம் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

கடைசி சூரிய கிரகணம் 2024

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தால் இந்தியாவிற்கு எந்தவிதமான பாதிப்பும் கிடையாது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் இது போன்ற பகுதிகளில் இந்த சூரிய கிரகணம் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. நம்முடைய இந்திய நேரப்படி அக்டோபர் 2ம் தேதி இரவு 9:12 மணி முதல் அக்டோபர் 3ம் தேதி அதிகாலை 3:17 மணி வரை சூரிய கிரகணம் நடக்கும்.

நமக்கு இரவில் இந்த சூரிய கிரகண நேரம் வந்திருப்பதால், இந்த கிரகணத்தின் மூலம் நமக்கு எந்த தோஷங்களும் கிடையாது. எந்த பாதிப்புகளும் கிடைக்காது என்பது ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. ஆகவே நாளைய தினம் இந்த கிரகணத்திற்காக குறிப்பிட்ட எந்த பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

- Advertisement -

பரிகாரம் செய்ய வேண்டிய ராசி

ஆனால் நாளைய தினம் மஹாளய அமாவாசையானது ஹஸ்த நட்சத்திரத்தில் வந்திருக்கிறது. நாளை சூரியன், சந்திரன், கேது புதன், இந்த நான்கு கிரகங்களும் கன்னி ராசி யில் ஒன்று சேர இருப்பதால், நாளைய தினம் கன்னி ராசிக்காரர்கள் உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பு.

அமாவாசை தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள்

அதேபோல மாதம்தோறும் அமாவாசை திதியில் முன்னோர்கள் வழிபாடு செய்ய முடியாதவர்கள் வருடம் தோறும் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் காரியங்களை செய்ய தவறவிட்டவர்கள், எல்லாம் நாளைய தினம் கட்டாயம் முன்னோர்களை வணங்கி அவர்களுக்கு உண்டான திதி தர்ப்பண காரியங்களை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதுதான் பித்ருக்களின் ஆசிர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு முழுமையாக கிடைக்கும். பித்ரு சாபத்திலிருந்து உங்கள் குடும்பம் விடுபடும்.

- Advertisement -

சில பேரால் நாளைய தினம் திதி தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை இருக்கும். நிறைய பெண்கள் நாங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கலாமா என்று கேட்கிறீர்கள். திதி தர்ப்பணம் ஒருவருக்கு கொடுக்க முடியாத சூழ்நிலை நிலவினால், அவர்கள் என்ன செய்வது. ஒரு தாம்பூல தட்டில் பச்சரிசி 1 கிலோ, வெல்லம் 1 கிலோ, பாசிப்பருப்பு 1/2 கிலோ, உங்களால் முடிந்த வஸ்திரம் வேட்டி அங்க வஸ்திரம் வாங்கி வைத்து, வெற்றிலை பாக்கில் உங்களால் முடிந்த தக்ஷனையை வைத்து ஒரு பிராமணருக்கு தானம் செய்யும் பட்சத்தில் முன்னோர்களின் ஆசி நிறைவாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: புரட்டாசி மஹாளய அமாவாசை பரிகாரம்

தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள் நாளைய தினம் இந்த தானத்தை செய்யலாம். இதோடு சேர்த்து உங்களால் முடிந்த அன்னதானத்தை பசியோடு இருப்பவர்களுக்கு செய்யுங்கள். நாளை நீங்கள் ஒருவருக்கு அன்னதானம் செய்தாலும் அது ஆயிரம் மடங்கு பலனை உங்களுக்கு தரும். மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்கள் நாளைய தினம் வரும் மஹாளயா அமாவாசை நாளில் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்