வீட்டை பாதுகாக்க நிலை வாசலில் கட்ட வேண்டிய முடிச்சு

vasal
- Advertisement -

நம் வீட்டிற்கு வருபவர்கள் எல்லாமே நல்லவங்க அப்படின்னு சொல்லிட முடியாது. நம் மீது வன்மத்தோடு, நம்முடைய வளர்ச்சியை பார்த்து பொறாமைப் படுபவர்கள், நம்முடைய எதிரிகள் கூட கெட்ட எண்ணத்தோடு நம் வீட்டிற்குள் வரலாம். அது மட்டுமல்லாமல் வெளியில் எல்லா நேரங்களிலும் நம்மை சுற்றி நல்லது தான் நடக்கிறது என்று சொல்லி விட முடியாது.

நாம் எதிர்பாராமல் செல்லக்கூடிய இடங்களில் ஏதாவது ஒரு கெட்ட சக்தி நம் உடம்போடு ஒட்டிக்கொண்டு நம் வீட்டிற்குள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இப்படி ஏதாவது ஒரு ரூபத்தில் நம் வீட்டிற்குள் நுழையக்கூடிய கெட்டதை நிலை வாசலிலேயே தடுத்து நிறுத்துவது எப்படி.

- Advertisement -

மிக மிக எளிமையான முறையில் இதற்கு ஆன்மீகத்தில் ஒரு பரிகாரம் உள்ளது. இந்த முடிச்சை நிலை வாசலில் கட்டி வைத்தால் போதும். கெட்டதை நிலை வாசலிலேயே அந்த முடிச்சு தடுத்து நிறுத்தும். அப்படி அந்த முடிச்சிக்குள் என்னென்ன பொருட்களை எல்லாம் வைக்கப் போகிறோம். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

நிலை வாசலை பாதுகாக்கும் முடிச்சு

இதற்கு பச்சை நிறத்தில் சதுர வடிவில் ஒரு காட்டன் துணி தேவை. அதில் வசம்பு துண்டு ஒன்று, பச்சை கற்பூரம் ஒரு சின்ன கட்டி, வேப்பங்குச்சி ஒன்று, படிகார கல், இந்த நான்கு பொருட்களையும் வைத்து, அந்த துணியை ஒரு நூல் போட்டு கட்டி விட வேண்டும். இந்த முடிச்சை நிலை வாசலுக்கு மேல் பக்கத்தில் கட்டி வைத்தால் போதும்.

- Advertisement -

தினமும் விளக்கு ஏற்றும் போது இந்த முடிச்சுக்கு ஊதுவத்தி காண்பித்து வழிபாடு செய்யுங்கள். எங்கள் வீட்டுக்கு இந்த முடிச்சு பாதுகாப்பு கவசமாக இருக்க வேண்டும் என்று குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்தாலே போதும். மற்றபடி வேறு எந்த வேலையும் உங்களுக்கு கிடையாது. இந்த முடிச்சானது உங்கள் வீட்டிற்கு ஒரு பாதுகாப்பு கவசமாக தலைவாசலில் நிற்கும்.

பரிகாரத்திற்கு பயன்படுத்தக்கூடிய இந்த நான்கு பொருட்களும் சுலபமாக கிடைக்கக்கூடிய பொருட்கள்தான். ஆனால் எல்லா பொருட்களும் எதிர்மறை ஆற்றலை விரட்டக்கூடிய மிக வலிமையான பொருட்கள். கண்திருஷ்டியை அண்ட விடாமல் தடுக்கும். பொறாமை எண்ணத்தோடு வருபவர்களுடைய மனதை கூட தூய்மையாக்கும்.

இதையும் படிக்கலாமே: மனபாரம் நீங்க பரிகாரம்

கெட்ட எண்ணத்தோடு உங்கள் வீட்டிற்குள் யாராவது வந்து உங்களை பார்த்தால் கூட அதனால் பிரச்சனை வராது. இந்த முடிச்சை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்றினாலே போதும். பழைய முடிச்சை கால் படாத இடத்தில் போட்டுட்டு. புதுசா கட்டிக்கோங்க அவ்வளவுதான்.

- Advertisement -