உங்களுக்கு தன லாபங்கள் பெருக, வறுமை நீங்க இதை துதியுங்கள்

bhuvaneswari

ஒரு மனிதனுக்கு செல்வம் இல்லை என்றால் இக்காலத்தில் அவன் உடன்பிறந்தவர்கள் கூட அவனை மதிப்பதில்லை. நமது அன்றாட வாழ்க்கைக்கு செல்வம் மிகவும் அவசியம். உலகெங்கிலும் பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் இக்காலங்களில் பல மக்கள் பெரிய அளவில் செல்வம் சேர்க்க முடியாமல் வறுமை நிலையில் வாழும் நிலை உண்டாகிறது. இத்தகைய மக்களின் பிரச்சனைகள் தீர மகான்களால் உருவாக்கப்பட்ட சக்தி வாய்ந்த “புவனேஸ்வரி ஸ்தோத்திரம்” இதோ.

bhuvaneswari amman

புவனேஸ்வரி ஸ்தோத்திரம்

பூரணி யோக புவனேஸ்வரி கதி நீயே அம்மா
நாரணி ஜீவத் தாரணியே சிவ நாயகியே மோக்ஷதாயகியே
அரணருளாகவே ஐந்தொழில் புரிந்திடும் ஆதிபராசக்தி நீயே அம்மா
வரதாயகி சித்தகௌரி மனோன்மணி வாசாமா கோசரி நீயே அம்மா

மஹேஸ்வரி தாயே ஜெய மங்களம், சுப மங்களம்
ஸர்வ சைதன்யரூபாம் தாம் ஆத்யாம் சக்திம் ச தீமஹி
ஹ்ரீங்கார ரூபிணீம் தேவீம் தியோ யோந ப்ரசோதயாத்

MathuraKaliamman

புவனம் எனும் மனிதர்கள் வாழும் பூமி உட்பட அண்ட சரசாரங்களை படைத்து காத்தருளும் தேவி அன்னை புவனேஸ்வரி. அவளுக்குரிய இந்த ஸ்தோத்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் துதிப்பது நல்லது. தேவி வழிபாட்டிற்குரிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை காலை வேளையில் அம்பாள் படத்திற்கு தீபம் ஏற்றி, தூபங்கள் காட்டி 27 முறை அல்லது 108 முறை துதிப்பதால் உங்களுக்கு வறுமை நிலை உண்டாகாது. தன, தானிய லாபங்கள் ஏற்படும். மிகுந்த தைரியமான மனநிலை உண்டாகும். குடும்பத்தில் நிம்மதியான நிலை ஏற்படும்.

- Advertisement -

Mariamman

கால வெள்ளத்தில் புவனங்களை பூத்து மலரச் செய்தவள் அன்னை புவனேஸ்வரி. ஏகாட்சரமான ஹ்ரீம் பீஜமே, சாக்த ப்ரணவம் என போற்றப்படுகிறது. அந்த ஹ்ரீம் பீஜத்தில் விரும்பி உறைந்து கொண்டிருப்பவள் புவனேஸ்வரி. ஹ்ரீங்காரம் என்ற கூட்டை அழகுபடுத்தும் பெண் கிளியாகவும் கோடிக்கணக்கான பிரமாண்டங்களை காத்தருளும் தேவியாகவும், சதாசிவமயமான பீடத்தில் அமர்ந்து அனைவருக்கும் அருள்கிறார் அன்னை புவனேஸ்வரி. புவனங்கள் அனைத்தையும் படைத்து காத்தருளும் அன்னை புவனேஸ்வரி தேவிக்குரிய இம்மந்திரத்தை துதிப்பதால் நன்மைகள் பல ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
சந்திராஷ்டம தின மந்திரம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Bhuvaneswari stotram in Tamil. It is also called as Bhuvaneshwari mantra in Tamil or Bhuvaneshwari amman manthiram in Tamil or Bhuvaneswari devi sloka in Tamil.