நாளை 16/11/2021 சூரிய பெயர்ச்சி! அதிர்ஷ்டம் மற்றும் துரதிருஷ்டம் பெறும் ராசிகள் யாரெல்லாம்? 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

surya
- Advertisement -

ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் பொழுதும் ஒவ்வொரு ராசியினருக்கு பலன்கள் மாறுபடுகின்றன. சில கிரகங்கள் ஆண்டுக்கு ஒரு முறையும், சில கிரகங்கள் மாதாமாதமும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. அந்த வகையில் சூரிய கிரகம் நாளை செவ்வாய்க் கிழமையில் மதியம் 1:18 மணி அளவில் துலாம் ராசியிலிருந்து, விருச்சிக ராசிக்கு இடப் பெயர்ச்சி அடைகிறது. இதனால் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான அதிர்ஷ்ட மற்றும் துரதிர்ஷ்ட பலன்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்!

மேஷம்
மேஷ ராசியில் இருந்து எட்டாவது ராசியாகிய விருச்சிக ராசியில் சூரிய பகவான் பெயர்ச்சி அடைவதால் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் ஏற்பட்டு மறையும். தந்தையுடன் இருந்து வந்த பிரச்சனைகள் மேலும் வலுவாக்கும் என்பதால் கூடுமானவரை மவுனம் காப்பது நல்லது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். மேஷ ராசியில் பிறந்த பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் கடின முயற்சியைக் கொடுக்கக்கூடிய அமைப்பு உள்ளது. வருமானம் சராசரியாக இருக்கும்.

- Advertisement -

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரியன் பெயர்ச்சி உற்சாகத்துடன் வைத்துக்கொள்ள ஏதுவானதாக அமைய இருக்கிறது. உங்களுடைய தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்பட வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பழைய பாக்கிகளை வசூல் செய்து கடன் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ளக் கூடிய அற்புத வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் கலைத் துறை சார்ந்தவர்களும் புகழ் பெறும் வாய்ப்பு அதிகம் உண்டு. பிரிந்த உறவுகள் மீண்டும் ஒன்றினைப் அதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகும். ஆன்மிக பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி உங்களுக்கு 6-வது ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் கண் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரணையாக இருப்பது மிகவும் நல்லது. வருமான ரீதியான ஏற்றம் காணப்படுவதால் குடும்பத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். தேவையற்ற அலைச்சல் உடல் சோர்வு மனச் சோர்வு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

- Advertisement -

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி ஐந்தாவது இடத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உணவு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தடை தாமதங்கள் ஏற்படலாம். பெற்றோர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான தொலைதூரப் பயணங்கள் மூலம் அனுகூல பலன்கள் உண்டாகும். வருமானத்தில் லாபம் ஏற்படுவதில் குறைகள் இருக்காது. குழந்தைகள் எதிர்காலம் பற்றிய அக்கறை அதிகம் தேவை. புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் உண்டாகும்.

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி பொருளாதார ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் கூடுமான வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் என்பதால் வரவு செலவு கணக்குகளில் கவனம் தேவை. எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் அதை சுப விரயமாக மாற்றிக்கொள்ளும் சாதுரியம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவு பெருகும். தேவையற்ற விமர்சனங்களை பொருட்படுத்தாது மென்மேலும் உங்கள் இலக்கை நோக்கி முன்னேற்றத்தை காண பயணிப்பது நல்லது.

- Advertisement -

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அதிர்ஷ்டம் தரும் பெயர்ச்சியாக இருக்கிறது. மூன்றாம் இடத்திற்கு பெயர்ச்சியாகும் சூரிய பகவானால் புதிய புதிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் வாய்ப்புகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் கூடுமானவரை எச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நீங்கள் நினைத்ததை விட லாபம் பன்மடங்கு பெருகும் யோகம் உண்டு. புதிய வேலை கிடைப்பதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். பெண்கள் பொறுமை காப்பது நல்லது. பொருளாதார ரீதியான உங்களில் ஏற்ற இறக்கம் இருக்கும்.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் கூடுமானவரை ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. சூரியன் தந்தை காரகத்துவம் பெற்றவர் என்பதால் தந்தைவழி பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது உத்தமம். எதிலும் ஒரு முறைக்கு பலமுறை சரியா என்பதை சிந்தித்து செயலாற்றுவது நல்லது. அவசர முடிவுகள் ஆபத்தை ஏற்படுத்தும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவை. கணவன் மனைவி இடையே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஞாயிற்றுக் கிழமையில் சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்:
சூரிய பகவான் உங்கள் ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பணவரவு, பொருட்சேர்க்கை போன்றவற்றில் சாதகப் பலன்கள் உண்டாகும். நினைத்த விஷயங்களை நினைத்த நேரத்தில் நடத்தி காட்டுவீர்கள். தொலை தூரப் பயணங்களை மேற் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டு. உயர் பதவிகள் அடைவதற்கு அனுகூலமான பலன்கள் பெற இருக்கிறீர்கள். பழைய விஷயங்களை தவிர்த்து புதிய விஷயங்களில் ஈடுபடுவதை சற்று தள்ளிவைப்பது நல்லது. அருகி ரீதியான பாதிப்புகள் வரும் என்பதால் முன்கூட்டியே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உங்கள் மறைமுக பகைவர்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் விழிப்புணர்வுடன் செயலாற்றுவது உத்தமம். வெளியிடங்களில் உங்கள் செல்வாக்கு உயரும். பெண்கள் மூலம் பணவரவு சிறப்பாக இருக்கும்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி உங்கள் ராசியிலிருந்து பனிரெண்டாவது இடத்தில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குழந்தைகள் ரீதியான விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கல்வி ஆரோக்கியம் தொடர்பானவற்றில் கூடுதல் அக்கறை தேவை. எடுக்கும் முயற்சிகளுக்கு கால தாமதம் ஏற்படலாம் என்பதால் பொறுமையுடன் காத்திருப்பது நல்லது. எதிலும் அவசரம் காட்டுவதைத் தவிர்த்து நிதானம் கடைபிடித்தால் வெற்றி உங்கள் பக்கம். வெளியூர் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து பண வரவு சிறப்பாக இருப்பதால் கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு புகழும் லாபமும் பெருகும். இறை வழிபாடுகள் மீது கவனம் செலுத்துவது நல்லது.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி அற்புதமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்ததை விட பன்மடங்கு லாபம் பெருகும் யோகம் உண்டு. உடல் ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறைந்துவிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்கள் புகழும் படியான சாதனை புரிவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களில் இடமாற்றம் சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். பிரிந்த நண்பர்கள் மீண்டும் உங்களை புரிந்து கொண்டு வருவதற்கு வாய்ப்புகள் உருவாகும். உங்கள் திறமைக்கேற்ப வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் யோகமுண்டு.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு சூரிய பெயர்ச்சி ஏற்ற இறக்கமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றிமறையும். மூன்றாம் நபர்களை நம்பி எந்த ஒரு ரகசியத்தையும் கூறாமல் இருப்பது உத்தமம். உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் குறைந்து நல்ல ஆரோக்கியம் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. நீண்ட நாளாக நடக்கவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு காரியம் நல்லபடியாக நடக்கும் வாய்ப்புகளை பெறுவீர்கள். புத்திரபாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். பணம் தொடர்பான விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை. வெளிநாடு தொடர்பான விஷயங்களில் கால தாமதம் ஏற்படலாம்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி ஆரோக்கிய ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் உணவு கட்டுப்பாட்டில் அக்கறை தேவை. தந்தை உடனான பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தேவையற்ற கடன் களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும் என்பதால் செலவு செய்வதில் கொஞ்சம் அக்கறை தேவை. ஆடம்பர செலவுகள் கடனை ஏற்படுத்தும். பெண்களுக்கு இறைவழிபாடுகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்துடன் வெளியூர் சென்று வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. மறைமுக பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும் என்பதால் விழிப்புணர்வு தேவை.

- Advertisement -