சுசியம் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க! பூரணம் எண்ணெயில் கரைந்து போகாமல், உருண்டையாகவே வரும்.

susiyam
- Advertisement -

நம் எல்லோருக்குமே பிடித்த ஒரு இனிப்பு வகை என்றால், அதில் சுசியம் கண்டிப்பாக அடங்கும். நம் பாரம்பரிய உணவு வகையில் இதுவும் ஒன்று. நம்முடைய பாட்டிமார்கள் இதை பக்குவமாக சுட்டு எடுப்பார்கள். அதாவது, இதற்கு பூரணம் செய்து, மாவில் தோய்த்து, எண்ணெயில் விட வேண்டும். இப்படி செய்யும்போது அந்த பூரணத்தில், சில சமயம் மாவு ஒட்டாமல், எண்ணெயில், பூரணமானது, தனித்தனியாக பிரிந்து போய்விடும். இதனால் எண்ணெய் முழுவதும் வீணாகி விடும். இதற்கு பயந்தே சிலபேர் சுசியம், வீட்டில் செய்யவே மாட்டார்கள். எந்தவித சேதாரமும் இல்லாமல், சுசியம் செய்ய ஒரு சின்ன டிப்ஸ் ஃபாலோ பண்ணா போதும். சுலபமான முறையில் சுசியம் எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

kadalai-parupu

Step 1:
முதலில் 1 கப் அளவு கடலை பருப்பு எடுத்து, 1/2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் கடலைப்பருப்பை, குக்கரில் போட்டு, பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். மூன்றிலிருந்து நான்கு விசில் வைத்து வேக வைக்க வேண்டும். கடலைப்பருப்பு நன்றாக வெந்தவுடன், அதில் கட்டாயம் தண்ணீர் இருக்கும். கடலைப்பருப்பை ஒரு வடிகட்டியில் போட்டு, நன்றாக தண்ணீர் வடிந்ததும், தண்ணீர் இல்லாத கடலை பருப்பை நன்றாக மசித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மத்து போட்டு கடைந்தால் கூட பரவாயில்லை.

- Advertisement -

Step 2:
அடுத்ததாக பூரணம் எப்படி தயார் செய்வது? கடலை பருப்பை எந்த கப்பில் அலந்தீர்களோ, அதே கப்பில் 3/4 கப் வெல்லம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே கப்பில் 1/2 கப் தேங்காய் துருவல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

pagu

கட்டாயம் வெல்லத்தில் தூசு இருக்கும். அதனால் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை உடைத்து போட்டு, 5 டேபிள்ஸ்பூன் அளவு தண்ணீர் விட்டால் மட்டுமே போதும். அதாவது உங்கள் வீட்டில் சின்ன குழி கரண்டி இருந்தால், அதில் மூன்று குழி கரண்டி அளவு தண்ணீர் ஊற்றி, வெல்லத்தைப் சூடுபடுத்தி கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து, அதில் 2 டேபில் ஸ்பூன் அளவு நெய் ஊற்றிக் கொண்டு, முதலில் முந்திரிப்பருப்பை சிறு சிறு துண்டுகளாக உடைத்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். அதன்பின்பு, தேங்காய் துருவலை சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். அதன்பின்பு தயார் செய்து வைத்திருக்கும், வெல்லக் கரைசலை தேங்காய் துருவலுடன் சேர்த்து, 3 நிமிடம் கொதிக்க விடுங்கள். அடுத்ததாக, மசித்து வைத்திருக்கும் கடலைப்பருப்பு மசியலை சேர்த்து நன்றாக கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு ஸ்பூன் அளவு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த கலவை பாகுகூடி நன்றாக கெட்டி பதத்திற்கு வர 20 நிமிடங்கள் எடுக்கும். மிதமான தீயில் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருங்கள்.

pooranam

இப்போது பூரணம் ரெடி ஆகிவிட்டது. இதை உங்கள் கைகளால் சிறு சிறு உருண்டைகளாக கொஞ்சம் அழுத்தம் கொடுத்து உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

susiyam-poranam

Step 3:
இப்போது 1/4 கப் அளவு மைதா மாவை எடுத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். அதில் 2 சிட்டிகை உப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். மேல் மாவில் உங்கள் சுவைக்கு ஏற்ப இன்னும் கொஞ்சம் அதிகமாக, கூட உப்பை சேர்த்துக் கொள்ளலாம். மாவு தண்ணீர் பதத்தில் இருந்தால் கட்டாயம் பூரணம் எண்ணெயில் பிரிந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு தான் ஒரு ‘சின்ன டிப்ஸ்’.

fry-susiyam

கான்ஃபிளவர் மாவை, தனியாக ஒரு கிண்ணத்தில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் பூரணத்தை தயார் செய்து உருண்டை பிடித்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா? அந்த உருண்டையை இந்த கான்பிளவர் மாவு கரைசலில், முதலில் லேசாக பிரட்டி விட்டு, அதன் பின்பு மைதா மாவில் தோய்த்து எண்ணெயில் விடுங்கள். இப்போது தைரியமாக சுசியத்தை சுட்டு எடுக்கலாம். எண்ணெய் சரியான அளவில் காய்ந்து இருக்க வேண்டும். சுசியத்தை எண்ணெயில் போட்டவுடன், தீயை மிதமாக வைத்து கொள்ளுங்கள்.

susiyam1

சில பேருக்கு மைதாமாவு பிடிக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில், உங்கள் வீட்டில் இட்லி மாவு இருந்தால் கூட, அந்த மாவில் சுசிய பூரணத்தை, தோய்த்து எண்ணெயில் விட்டு பொரித்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். இட்லி மாவில் தோய்ப்பதற்கு முன்பாகவும், ஒரு முறை கான்ஃபிளவர் மாவு கரிசலில், பூரணத்தை பிரட்டி எடுத்து விட்டு, அதன் பின்பு இட்லி மாவில் தோய்த்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுங்கள். சூப்பரா இருக்காங்க! உங்களுக்கு பிடித்திருந்தால் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படிக்கலாமே
ரேஷன் கோதுமையை வைத்து, ஒரு முறை மாவை, இப்படி அரைத்து தான் பாருங்களேன்! கடையில் இருந்து காசு கொடுத்து கோதுமை வாங்கவே மாட்டீங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -