புளி சேர்க்காமல் கேரளா ஸ்டைல்ல இப்படி மீன் குழம்பு வச்சு பாருங்க. இனிமே மீன் வாங்கினால் இப்படித்தான் குழம்பு வைப்பீங்க.

fish-curry
- Advertisement -

அசைவ வகைகளிலே நம் உடலுக்கு சிறிதும் கெடுதல் இல்லாதது இந்த மீன் வகைகள் தான். அதிலும் இந்த சின்ன, சின்ன மீன் வகைகளில் தான் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அந்த வையில் இந்த வெள்ளை சுதும்பு மீனில் வைட்டமின் பி-12, புரதம், பொட்டாசியம், அதிக அளவில் உள்ளது. மீன் வகைகளிலே மிகவும் சிறியதாக இருப்பது நெத்திலி மீன். சுதுப்பு மீன் கூட கிட்டத்தட்ட நெத்திலி மீனை போன்றே தான் இருக்கும். ஆனால் இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீனை கேரளா ஸ்டைலில் சமைக்க போகின்றோம். இதன் பெயர் வெள்ளை சுதும்பு மீன் தித்திப்பு. தித்திப்பு என்றதும் வெல்லம் சேர்த்து சர்க்கரை சேர்த்து செய்ய போகின்றோம் என்று நினைக்க வேண்டாம். இது ஒரு பாரம்பரியமான மீன் குழம்பு ரெசிபிங்க. வாங்க நாமும் இந்த வித்தியாசமான மீன் குழம்பை கற்றுக் கொள்வோம்.

தேவையான பொருட்கள்: வெள்ளை சுதும்பு மீன் – 1/2 கிலோ, தேங்காய் – 1/2 மூடி, சின்ன வெங்காயம்-   15, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 6, பூண்டு -10 பல், இஞ்சி – 1 சிறிய துண்டு, மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, கொத்தமல்லி – 1 கைப்பிடி, மஞ்சள் தூள் – 1/4 கால் டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

முதலில் மீனை சுத்தம் செய்து, சிறிது கல் உப்பு சேர்த்து நன்றாக கழுவி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பெரிய மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை மூடி தேங்காய், கால் டீஸ்பூன் சோம்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஓரளவுக்கு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தது ஓரளவுக்கு அரைபட்ட வெங்காயத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, தக்காளி என அனைத்தையும் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தித்திப்புக்கு தேவையான மசாலா தயாராகி விட்டது.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு சட்டியை வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, மீதம் இருக்கும் சோம்பு போட்டு தாளித்து அதில் கருவேப்பிலையும் சேர்த்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை இதில் சேர்த்து, மஞ்சள் தூள், உப்பு இரண்டையும் சேர்த்து ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். இதில் காரத்திற்கு பச்சை மிளகாய் மட்டுமே சேர்க்க வேண்டும் (அதிக காரம் உண்பவர்கள் கொஞ்சமாக தனி மிளகாய் தூள் சேர்த்து கொள்ளுங்கள்).

- Advertisement -

இப்போது அதில் சேர்த்த மசாலா பச்சை வாசம் போகும் வரை நன்றாக கொதிக்க வேண்டும். அதன் பிறகு கடைசியில் அலசி வைத்து மீன்களை அதில் போட்டு, ஒரு டீஸ்பூன் மிளகு தூளையும், சேர்த்து ஒரு நிமிடத்திற்கு எல்லாம் அடுப்பை அணைத்து விடுங்கள். ஏனென்றால் இந்த மீன் மிகவும் குட்டியாகவும், மிருதுவாகவும் இருக்கும் கொஞ்சம் அதிகமாக கொதித்தாலும் மீன் உடைந்து விடும். அதன் பிறகு மல்லித்தழைகளை தூவி இறக்கி விடுங்கள். இவ்வளவு ஈஸியா கேரள ஸ்டைலில் வெள்ளை சுதும்பு மீன் தித்திப்பை இதுவரை நீங்கள் ருசித்திருக்க மாட்டீர்கள்.

பின்குறிப்பு: இதே போல மீன் குழம்பை நம்ம ஊர் வால மீனிலும் வைக்கலாம். நெத்திலி மீனிலும் வைக்கலாம். அதுவும் மிக மிக சுவையாக தான் இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -