கமகமக்கும் கோவக்காய் சாம்பார் இப்படி செஞ்சா கல்யாண வீட்டு சாம்பார் போலவே ருசிக்கும் தெரியுமா? 10 நிமிசத்துல எப்படி வைக்கிறது?

kovakkai-sambar2
- Advertisement -

கல்யாண வீட்டு சாம்பார் என்றாலே அனைவருக்கும் பசிக்க ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு அதன் சுவையும், மணமும் அலாதியானதாக இருக்கும். சமைக்கத் தெரியாதவர்கள் கூட ரொம்ப சுலபமாக இந்த கோவக்காய் சாம்பார் இப்படி செஞ்சு பார்த்தால் வீட்டிலிருக்கும் எல்லோரும் பாராட்டி தள்ளிவிடுவார்கள். கல்யாண வீட்டு சாம்பார் போல சுவை தரும் இந்த கோவக்காய் சாம்பார் செய்யவும் ரொம்ப நேரம் எடுக்காது. ருசியான இந்த கோவைக்காய் சாம்பார் எப்படி வைப்பது? என்பதை இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கோவக்காய் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 100 கிராம், பூண்டு – 2, கோவக்காய் – 250 கிராம், சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 2, பச்சை மிளகாய் – ஒன்று, காய்ந்த மிளகாய் – ஒன்று, பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – இரண்டு கொத்து, தேங்காய் துருவல் – கால் கப், சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், மிளகாய் பொடி – ஒரு டீஸ்பூன், மல்லித் தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், வர மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

கோவக்காய் சாம்பார் செய்முறை விளக்கம்:
கோவக்காய் சாம்பார் செய்வதற்கு முதலில் 100 கிராம் அளவிற்கு துவரம் பருப்பை எடுத்து ஒன்றிரண்டு முறை நன்கு அலசிக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற விடுங்கள். ஊறிய பின்பு பருப்புடன் கால் ஸ்பூன் அளவிற்கு விளக்கெண்ணெய், கால் ஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் 4 விசில் விட்டு கடைந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இப்போது ஒரு பாத்திரத்தில் கால் கிலோ அளவிற்கு கோவைக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில் நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். 2 பூண்டை இடித்து சேருங்கள். பொடியாக நறுக்கிய 2 தக்காளி, காரத்திற்கு பச்சை மிளகாய் ஒன்று, காய்ந்த மிளகாய் ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள். கால் ஸ்பூன் அளவிற்கு பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். கட்டி பெருங்காயம் ஆக இருந்தால் இன்னும் சுவை தூக்கலாக இருக்கும்.

- Advertisement -

ரெண்டு கொத்து கறிவேப்பிலையை அப்படியே பச்சையாக கழுவி உருவி சேர்த்துக் கொள்ளுங்கள். கால் கப் அளவிற்கு தேங்காய் துருவல் கலந்து கொள்ளுங்கள். மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் சாம்பார் தூள் ஆகிய மசாலாக்களை சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது குழம்பிற்கு தேவையான உப்பு போட்டு, 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் வேக வைத்து எடுத்துள்ள பருப்பை தண்ணீருடன் சேர்த்துக் கொள்ளுங்கள். சாம்பாருக்கு தேவையான அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

எந்த அளவிற்கு சாம்பார் கெட்டியாக கொதித்து வருகிறதோ, அந்த அளவிற்கு சாம்பாரின் சுவை அட்டகாசமாக இருக்கும். கோவக்காய் மற்றும் அனைத்து காய்கறிகளும் நன்கு வேகும் வரை கொதிக்கவிட்டு பின்னர் ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டியது தான். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு காய விடுங்கள். அதில் கடுகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். ஒரு வர மிளகாயை கிள்ளி போட்டு, கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் அடுப்பை அணைத்து சாம்பாருடன் சேர்த்து கலந்து விடுங்கள். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமான முறையில் செய்யக்கூடிய இந்த கோவக்காய் சாம்பார் இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -