5 நிமிடத்தில் இப்படி ஒரு அசத்தலான பொரியல் செய்ய 2 சௌசௌ இருந்தால் போதுமே! இப்படி செஞ்சா பத்தவே பத்தாது.

sow-chow-chow-poriyal
- Advertisement -

எப்போதும் ஒரே விதமான பொரியல் சாப்பிடுபவர்களுக்கு சௌசௌ பொரியல் வித்தியாசமான சுவையுடன் இருக்கும். நீர் காயான சௌசௌ காயை அடிக்கடி உணவில் சேர்த்து வருவதன் மூலம் நீர் கடுப்பு போன்ற நோய்களுக்கு விடிவு கிடைக்கும். உடலில் இருக்கும் நீர் சத்து வேகமாக குறைவதன் மூலம் உடல் உஷ்ணம் அடைகிறது. பூசணிக்காய், சௌசௌ போன்ற நீர் காய்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இக்குறைபாடுகள் விரைவில் நீங்கும். இதனால் பல நோய்கள் தடுக்கப்படும். இத்தகைய அற்புதம் வாய்ந்த சௌசௌ பொரியல் 5 நிமிடத்தில் எப்படி சுவையாக செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சௌசௌ பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:
சௌசௌ – 2, பெரிய வெங்காயம் – 2, பச்சை மிளகாய் – 2, சீரகம் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு, தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், பூண்டு பற்கள் – 4.

- Advertisement -

சௌசௌ பொரியல் செய்முறை விளக்கம்:
முதலில் சௌசௌ காயை தோல் சீவி கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் உள்ளே இருக்கும் விதையை மட்டும் நீக்கிவிட்டு பொடிப்பொடியாக துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

இவை நன்கு வறுபட்டதும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டு, கறிவேப்பிலை மற்றும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து 2 நிமிடம் மூடி வைத்து விடுங்கள். அதற்குள் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தேங்காய்களை துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் அதனுடன் சீரகம் மற்றும் காரத்திற்கு தேவையான பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் மிக்ஸியை இயக்கி தண்ணீர் எதுவும் சேர்க்காமல் கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது சௌசௌ காயில் இருக்கும் நீர் முழுவதும் வற்றி விட்டதா? என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். காயில் இருக்கும் நீர் வற்றி காய் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள இந்த தேங்காய் கலவையை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றின் பச்சை வாசனை போக நன்கு வதக்கி விடுங்கள். சௌசௌ காய் சமைக்கும் பொழுது எப்பொழுதும் தண்ணீர் சேர்க்கக் கூடாது. காயை வெட்டி வைத்தால் ரொம்ப சுலபமாக ஐந்து நிமிடத்தில் இந்த பொரியலை சுவையாக தயார் செய்து விடலாம். இவற்றின் பச்சை வாசம் போனதும் அடுப்பை அணைத்து மல்லித் தழையை நறுக்கி சேர்த்து சுடச்சுட எந்த விதமான சாதத்துடன் பரிமாறினாலும் அட்டகாசமாக இருக்கும். சுவையான சௌசௌ பொரியல் இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -