வறுமை நீங்க, உங்கள் கைகளால் இந்த தீபத்தை ஏற்றினாலே போதும். எவ்வளவு பெரிய பண கஷ்டமாக இருந்தாலும், இந்த தீபத்தை ஏற்றிய உடனேயே, அந்தக் கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கும்.

swarna-bairava

நமக்கு இருக்கக்கூடிய பண கஷ்டம் எல்லாம் நீக்கவேண்டும். நம்மிடம் இருக்கும் நகையும் பணமும் நிரந்தரமாக நம்மிடமே தங்க வேண்டும் என்பது தான் நம்முடைய வேண்டுகோளாக இருக்கின்றது. நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால், முதலில் பண கஷ்டத்தில் இருந்து நாம் வெளியே வரவேண்டும். கையிலிருக்கும் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டும். வருமானம் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்றால், ஆன்மீக ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை நம்முடைய வீட்டில், எந்த முறையில், எந்த விளக்கில், எந்த திரி போட்டு எந்த திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் பண கஷ்டத்திற்கு உடனடியாக தீர்வு கிடைக்கும், என்பதை இந்த நல்ல நாளில் தெரிந்து கொள்வோமா?

swarna-bairavar3

முதலில் இந்த பரிகாரத்தை செய்ய உங்களுடைய வீட்டில் ஒரு ஸ்வர்ணாகர்ஷண பைரவர் படத்தை வாங்கி பூஜை அறையில் வைக்க வேண்டும். இந்த புகைப் படத்தை மேற்கு பார்த்த வாறு மாட்டி வைப்பது மிகவும் நல்லது. பரிகாரத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பு ஒரு சின்ன விஷயத்தை தெரிந்து கொள்வோம். உங்களுடைய வீட்டின் அருகில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கும் கோவில் இருந்தால், அந்த கோவிலுக்கு வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் சென்று சுவர்ணாகர்சன பைரவரை தரிசனம் செய்துவிட்டு வருவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

இதோடு அல்லாமல் மாதம்தோறும் வரும் பவுர்ணமிக்கு ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு, பசும் பாலை வாங்கிக் கொடுத்து அபிஷேகம் செய்து வைப்பது வீட்டில் இருக்கும் பண கஷ்டத்தை படிப்படியாக குறைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பைரவருக்கு செய்யக்கூடிய பால் அபிஷேகத்தை உங்கள் கண் குளிர காண வேண்டும். உங்களால் எப்போதெல்லாம் முடியுமோ சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலுக்கு சென்று இந்த முறைகளில் வழிபாடு செய்யுங்கள்.

அடுத்தபடியாக, உங்களுடைய வீட்டில் ஸ்வர்ணாகர்ஷண பைரவரின்ன் படத்தை வாங்கி வைத்து தீபத்தை எப்படி ஏற்றுவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோமா? வியாழக்கிழமை என்பது ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு மிகவும் உகந்த நாள். இந்த வியாழக்கிழமை மாலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து விட்டு, சுவாமிக்கு வாசம் நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, இந்த தீபத்தை ஏற்றி வையுங்கள். ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற உலோகமான ‘செம்பு அகல் விளக்கில்’ தான் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். பூஜை ஜாமான்கள் விற்கும் கடையில் செம்பு அகல்விளக்கு வேண்டும் என்று கேட்டால் அவர்களை கொடுப்பார்கள். ஒரே ஒரு செம்பினால் செய்யப்பட்ட விளக்கை மட்டும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

copper-vilaku

அந்த விளக்கிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, பசு நெய்யை ஊற்றி, சிவப்பு நிறத்தில் விளக்குத்திரி போட்டு, பூஜை அறையில் ஏற்ற வேண்டும். குறிப்பாக இந்த அகல்தீபம் மேற்கு நோக்கியவாறு ஒளிர வேண்டும். வாரம் தோறும் வரும் வியாழக் கிழமைகளில் உங்களுக்கு இருக்கக்கூடிய பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று, சுவர்ண ஆகர்ஷண பைரவரை முழுமனதோடு வேண்டி இந்த தீபத்தை ஏற்றி வைப்பவர்கள். வீட்டில் வறுமை என்பது நிச்சயம் இருக்காது.

praying-god1

சில பேருக்கு பைரவரின் திருவுருவப் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாமா என்ற சந்தேகம் இருக்கும். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை அம்பாளோடு சேர்த்து நம் வீட்டில் வைத்து வழிபடுவது நமக்கு நன்மையை மட்டுமே தரும். இந்த தீபத்தை குறிப்பிட்ட இத்தனை வாரங்கள் தான் ஏற்ற வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

deepam

உங்களால் முடிந்தால் தினம் தோறும் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு, இதே செம்பு அகல் விளக்கில் சிவப்பு திரி போட்டு, நல்லெண்ணெய் ஊற்றி கூட தினம்தோறும் தீபம் ஏற்றலாம், இதன் மூலம் வீட்டில் இருக்கக் கூடிய வறுமை நீங்கும். அடமானம் வைத்து இருக்கும் தங்கத்தை விரைவாக மீட்க முடியும். புதிய தங்க நகைகளை வாங்கிச் சேர்க்கலாம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
ருத்ராட்சம் அணிவதற்கான விதிமுறைகள் என்னென்ன? யாரெல்லாம் ருத்ராட்சம் அணியலாம்?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.